சென்னை: தம்மைப் பற்றி வதந்திகள் பரப்பப்படுவதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து நேற்றிரவு திடீர் வதந்தி பரவியது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், இன்று காலை அறிவாலயத்திற்கு வந்த கருணாநிதி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இன்று காலையிலிருந்தே சில விஷமிகள் தன்னுடைய உடல்நலம் குறித்து வதந்திகளை பரப்பி வருவதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், காவிரி பிரச்னையில் இரு மாநில அரசுகளும் காவிரி ஆணையத்தின் முடிவிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்களும், 89 வயதிலும் இவருடைய மக்கள் பணி, கட்சிப் பணி கண்டு பொறாமைப்படுபவர்களுமே இத்தகைய வதந்திகளைப் பரப்பி அதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம் மட்டுமே கிடைக்கும். கருணாநிதி நிச்சயம் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து மக்கள் பணியாற்றுவார். தந்தை பெரியார் போல, அரசியலில் நீண்ட ஆயுள் வாழ்ந்து சேவையாற்றியவர் என்ற பெருமையைப் பெறுவார்.
செய்ததையெல்லாம் செய்துவிட்டு கருணாநிதி காவிரி ஆணையத்தின் முடிவுக்கு இரு அரசுகளும் கட்டுப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.. உரிய காலத்தில் தான் ஆட்சியில் இருக்கும்போது கருணாநிதி காவிரி ஒப்பந்தத்தை புதுப்பித்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது. காமராஜர் அவர்கள் உயிருடனிருக்கும்போது கர்நாடக அரசு ஹேமாவதி ஆற்றில் ஆணை கட்டிகொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் தடைப்படும் என்று எச்சரிக்கை விட்டார். ஆனால் கருணாநிதி "காமராஜ் ஹெமாவதியப்பற்றி குறிப்பிடுகிறாரா அல்லது நடிகை ஹேமமாலினியை பற்றி குறிப்பிடுகிறாரா என்று கிண்டலடிதார்.. ஹெமாவதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டியது. தமிழ் நாட்டுக்கு காவிரி தண்ணீர் வரத்து குறைந்தது. ஹேமாவதி என்ற ஒரு ஆறு இருப்பதே கருணாநிதிக்கு தெரியவில்லை. அவர் நினைவெல்லாம் நடிகைகளைப் பற்றி. இன்று வடநாட்டு நடிகை குஷ்புவை நம்பி கட்சி நடத்த வேண்டிய நிலைமை. குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்ததாம். காவிரி பிரச்சினையை கிளப்பிவிட்டுவிட்டு கருணாநிதி இன்று கர்நாடக அரசுக்கு பறிந்து பேசுகிறார். கர்நாடகாவை எதிர்த்து பேச கருணாநிதிக்கு தைரியம் இல்லை. ஏனென்றால் அவர் வாரிசுகள் கர்நாடகாவில் தொழில் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.. . .
நாங்க உங்களையே நம்பல ... அப்புறம் தானே வதந்திய நம்புறதுக்கு தாத்தா? ... மதியம் செய்தி பாத்தீங்களா தாத்தா? தமிழகம் கேட்டபோது (டெல்லி திருப்பிய) மின்சாரம் தர மறுத்த மத்திய அரசு, கேட்க்காமலேயே ஆதிராவுக்கும் கேரளாவுக்கும் மின்சாரம் குடுக்குதாம் .... இப்போ மட்டும் தென் மாநிலங்களுக்கு கிரிட் எங்கேயிருந்து வந்தது ?... ஆந்திரா கேரளா போற கிரிட்ல தமிழ் நாட்டுக்கு கனெக்ஷன் குடுத்து கரண்ட் கொடுக்க சொல்ல வேண்டிய நீ என்ன செஞ்சிகிட்டு இருந்தே .... இந்த உனக்காக சுட சுட செய்தியோட காப்பி ... "டெல்லி அரசு திருப்பி கொடுக்கும் மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்..... இதை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது........ அரியானா மாநிலம் சஜ்ஜாரில் உள்ள இந்திரா காந்தி அனல் மின் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வழங்கப்பட்டு வரும் 231.17 மெகாவாட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பிற்கு திருப்பித்தர முடிவு செய்தது.......... இதையடுத்து மத்திய அரசு டெல்லி திருப்பி தந்த மின்சாரத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கேரளாவுக்கு 100 மெகாவாட்டும், ஆந்திராவுக்கு 131.17 மெகாவாட் மின்சாரத்தையும் வழங்குகிறது.......... மத்திய மின் தொகுப்பில் இருந்து கேரளாவுக்கு தற்போது 1200 மெகாவாட் மின்சாரம் தினசரி வழங்கப்பட்டு வருகிறது..... இந்நிலையில் கூடுதலாக 100 மெகாவாட் கிடைக்கிறது. மத்திய அரசிடம் ""கோரிக்கை எதுவும் வைக்காமலேயே"" கேரளாவுக்கு மின்சாரம் கிடைத்ததால் கேரள மின் வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்." .....கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் கொண்டு செல்ல தென் மாநிலங்களில் கிரிட் இருக்கும் பொது தமிழ் நாட்டுக்கும் மட்டும் கிரிட் இல்லை என மத்திய அரசு கூறுவது சுத்தப் பொய். இதில் உள்ள திரைமறைவு வேலைகள் நம் தமிழ் ஈன தலைவனுக்கே வெளிச்சம்...........

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.