வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே 100 ஆண்டு பழமையான கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆயக்கரன்புலத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு கலிதீர்த்த அய்யனார் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 2ம் தேதி முதல் 3 நாட்கள், சிறப்பு வேத பாராயணங்கள் மற்றும் திருமறை பாராயணங்கள் நடந்தன. இன்று காலை, யாக சாலையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட புனித நீர், கோயில் கலசத்தில் ஊற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., காமராஜ் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இக்கோயிலில் பக்தர்கள் நேர்த்தி கடனாக குதிரை மற்றும் மனித பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.