Rehman Malik to celebrate birthday at Taj Mahal - courtesy Indian govt | பாகிஸ்தான் அமைச்சருக்கு தாஜ்மகாலில் பிறந்த நாள் விருந்து கொடுக்கிறது இந்தியா | Dinamalar
Advertisement
பாகிஸ்தான் அமைச்சருக்கு தாஜ்மகாலில் பிறந்த நாள் விருந்து கொடுக்கிறது இந்தியா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: இந்தியா வரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கின் பிறந்த நாளை ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே புதிய விசா நடைமுறை குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் வரும் 11 தேதி இந்தியா வரவுள்ளார். இந்த பேச்சு வார்த்தையை பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கிடையே வரும் டிசம்பர் 25 முதல் துவங்கவுள்ள போட்டிகளை காண, இப்புதிய விசா முறை பயனளிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள ரஹ்மான் மாலிக் வரும் 12ம் தேதி பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதையடுத்து அவரது பிறந்த நாளை தாஜ்மகாலில் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக கவனித்து வருகிறது. இந்த பிறந்த நாள் விழா, இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் என இந்திய அரசு எதிர்பார்க்கிறது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் அவர் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால் மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதையடுத்து, ரஹ்மான் மாலிக் வருகை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chenduraan - kayalpattanam,இந்தியா
06-டிச-201210:18:27 IST Report Abuse
Chenduraan நல்ல முயற்சி. இந்த ஒற்றுமை மேலும் வளர வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
06-டிச-201208:38:59 IST Report Abuse
MJA Mayuram உள்நாட்டுலேயும் ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளின் வழியாக தீவீரவாதம் நடைபெறுவதை தடுக்க உண்மையிலேயே பாகிஸ்தான் அரசு கஷ்டப்படுகிறது அதற்க்கு நம்மைப்போன்ற அண்டைநாடுகள் ஆதரவு தெரிவித்து அவர்களை ஊக்கப்படுத்தி தீவீரவாதத்தை வேரோடு பிடுங்க எல்லா வகையிலும் உதவி செய்வது மிகவும் நல்லது. அண்டை நாடுகளின் நட்புறவே ஒரு நல்ல அரசின் நிலை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Govind - Delhi,இந்தியா
06-டிச-201203:52:05 IST Report Abuse
Govind நல்லா சாப்பிட்டுவிட்டு புஷ்டியா இருங்க .. அப்பதான் எங்கள அடிக்கிறத்துக்கு ஆள தயார் பண்ண வசதியா இருக்கும். இதுவரை எத்தனை ஆதாரங்களை கொடுத்தான் ஒரு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததிற்கு காங்கிரஸ் அரசின் பாராட்டு விழாவாக இத எடுத்து கொள்ளாலாம்.
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-201219:38:14 IST Report Abuse
Swaminathan Nath பாம்பிற்கு பால் வார்த்தாலும், அது தன் குணத்தை மாற்றி கொள்ளது, அனால் எங்களுக்கு கவலை இல்லை, வெடியில் சிதற போவது பொது மக்கள் தான், இந்த தலைவர்கள் இல்லை., ஜெய் ஹிந்த்.,
Rate this:
2 members
0 members
14 members
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
05-டிச-201218:44:28 IST Report Abuse
saravanan அப்படியே அந்த விருந்துல கரீனா கபூர், காத்ரீனா கைப் போன்றவர்களின் நடனத்தையும் வைத்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு போய் எக்ஸ்ட்ராவா கொஞ்சம் தீவிரவாதிகளை அனுப்புவார்....
Rate this:
4 members
0 members
27 members
Share this comment
Cancel
justin - mumbai,இந்தியா
05-டிச-201217:57:33 IST Report Abuse
justin கல்லறையில் பிறந்த நாள் விழவா..........
Rate this:
2 members
0 members
24 members
Share this comment
Cancel
rammeshbabu - bangalore,இந்தியா
05-டிச-201216:34:20 IST Report Abuse
rammeshbabu அச்சச்ச்சோ கசாப் இல்லமே போய்ட்டாரே, இருந்திருந்தால் அவரையும் இந்த விழாவுக்கு அழைத்து இருக்கலாம்
Rate this:
3 members
2 members
20 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
05-டிச-201215:52:47 IST Report Abuse
விருமாண்டி இந்த பண்ணி பயல உள்ள விட்டா அது தாஜ்மஹால் கு அவமானத்தை தரும் .. ஏன் மத்திய அரசு இவனுக்கு இப்படி ஓர் வரவேற்ப்பு அளிக்கிறது என்பது புரியவில்லை . ஐயோ எல்லாம் வேடிக்கையாக உள்ளது
Rate this:
6 members
1 members
27 members
Share this comment
Cancel
mu.gopal - karur,இந்தியா
05-டிச-201215:42:19 IST Report Abuse
mu.gopal இதெல்லாம் அருவருக்கத்தக்க விஷயம், தாஜ்மஹால் ஏற்கனவே மாசு ஆகிக்கிடக்கு
Rate this:
1 members
2 members
19 members
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
05-டிச-201215:36:02 IST Report Abuse
Thamilan-indian மற்ற மதவாதிகளின் கைக்கூலிகளால் ஆட்டுவிக்கப்படும் இந்த அரசால் வேறு என்ன செய்ய முடியும்?.
Rate this:
6 members
1 members
26 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்