மீனவர்கள் கைது: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க, இலங்கை அரசை பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தக்கோரி, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் நாகையைச் சேர்ந்த 22 மீனவர்களும், புதுச்சேரியில் காரைக்காலைச் சேர்ந்த 18 மீனவர்கள் 5 மீன்பிடி படகுகளில் கடந்த 2ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்களை இலங்கை கடற்படையினர் புல்மோடை அருகே கைது செய்துள்ளது. இவர்களை 10ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதுபோன்று இந்திய - இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இதனால், இந்திய மீனவர்கள் பாதுகாப்பாற்ற நிலையை உணர்கின்றனர். இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தால், இந்திய கடலோரக் காவல்படை அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பிவிடுகிறது. இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் 40 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். எனவே, இலங்கை அதிகாரிகளுடன் பேசி, உடனடியாக இந்த 40 மீனவர்களையும், 5 படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nkr - Sydney,ஆஸ்திரேலியா
05-டிச-201219:23:30 IST Report Abuse
nkr The Fishermen were arrested near Pulmodai, Trincomale Seas, not near Rameswaram sea. Who asked them to come all the way from Rameswaram to Pulmodai sea?. They took the risk, must suffer the long arm of the law. The Fishermen are well aware that they are breaching maritime boundary. Chief Minister should stop her crocodile tears and request the fishermen to not to cross the boundary.
Rate this:
Share this comment
Cancel
Deen - Doha,கத்தார்
05-டிச-201219:09:58 IST Report Abuse
Deen நீங்க மடல் எழுதுனதும் உடனே செஞ்சுடுவார் நம்ம பி.. ர.. த ...ம ...ர் ............., நீங்களும் எழுதிட்டு தான் இருக்கீங்க, அவரு பதில் ஏதும் போட்டாரா??
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
05-டிச-201216:48:04 IST Report Abuse
mrsethuraman  படகுகள் மற்ற நாட்டின் எல்லையை தொட்டால் அவைகளுக்குள் எச்சரிக்கை மணி ஒலிக்கும்படி நவீன விஞ்ஞானத்தில் ஏதும் செய்யமுடியாதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்