புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்த வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்பது ஒரு நாளில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் இது குறித்து பல ஆண்டுகளாக விவாதித்து, தற்போதைய பொருளாதார சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவித்தார்.