புதுடில்லி:சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக விவாதத்துடன் கூடிய ஓட்டெடுப்பு பார்லிமென்ட் லோக்சபாவில் பரபரப்பாக நடந்தது . இதில் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த சமாஜ்வாதி , பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளின் 43 எம்.பி.க்கள் புறக்கணிப்பு செய்தனர். எனினும் இவர்கள் அரசுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து விட்டதாக லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் குற்றம்சாட்டினார்.இன்று நடந்த விவாதத்தின் போது பேசிய சுஷ்மா பேசியதாவது: வெளியே அன்னிய முதலீட்டிற்கு எதிராக பேசிவிட்டு, உள்ளே மறைமுகமா ஆதரித்து ஓட்டளித்துவிட்டார். அன்னிய முதலீட்டிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக ஒட்டளித்திருந்தால் அது வெற்றி பெற்றிருக்கும் என்றார். இதன் மூலம் மத்திய அரசின் முடிவுக்கு முலாயம்சிங்கும், மாயாவதியும் மறைமுகமாக ஆதரவளித்துவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.