புதுடில்லி: தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் சேரப் போவதாக வெளியான தகவலை அடுத்து, "வரும், 28ம் தேதி, இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து கட்சி கூட்டம், கூட்டப்படும்' என, மத்திய அரசு உறுதி அளித்துள்ளது."ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, தெலுங்கானா ஆதரவாளர்கள், நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, ராஜினாமா, உண்ணாவிரதம் உள்ளிட்ட, பல போராட்டங்களை நடத்தியும், மத்திய அரசு, அசைந்து கொடுக்கவில்லை.இந்நிலையில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த விவகாரம் குறித்த ஓட்டெடுப்பை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, தெலுங்கானா பகுதி, எம்.பி.,க்கள் புறக்கணிக்கப் போவதாகவும், சில, எம்.பி.,க்கள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் சேரப் போவதாகவும், தகவல் வெளியானது.இதனால், காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்தது. தெலுங்கானா பகுதி காங்கிரஸ், எம்.பி.,க்களை சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சுஷில் குமார் ஷிண்டே, இது தொடர்பாக, தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.,க்களை, நேற்று சந்தித்து பேசினார்.இதன்பின், சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில், ""தெலுங்கானா விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, ஆந்திராவைச் சேர்ந்த, அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை, வரும், 28ம் தேதி கூட்டுவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதை அடுத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள், தற்காலிகமாக சமாதானம் அடைந்துள்ளனர். வரும், 28ம் தேதிக்கு பின், தெலுங்கானா விவகாரம், மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.