திருச்சி : கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்ததால், பட வாய்ப்புகளை இழந்து ஓரங்கட்டப்பட்டுள்ள நடிகர் வடிவேல், நாளை வைகோ முன்னிலையில், ம.தி.மு.க.,வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரைப்பட உலகில் தனக்கென்று ஒருபாணியை வகுத்துக் கொண்டு, ரசிகர்கள் மத்தியில் காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. கடந்த, 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியதால், அவருடைய பேச்சுக்கும், பிரசாரத்துக்கும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. அந்த தேர்தலில், தி.மு.க., தோல்வியை தழுவியது. அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது. தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், பட வாய்ப்புகள் அறவேயின்றி, சினிமா துறையிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலைக்கு, வடிவேலு தள்ளப்பட்டார். இதற்கிடையே, எதிர் எதிர் துருவமாக இருந்த தி.மு.க., - தே.மு.தி.க., ஒரே அணியில் வர வாய்ப்புள்ளதாக வெளியான தகவல், வடிவேலுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் வடிவேலு, நாளை ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில், அக்கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை திருச்சியில், "நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இதில், ம.தி.மு.க.,வுக்கோ, வைகோவுக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லாத நடிகர் வடிவேலு பங்கேற்கிறார் என்று அழைப்பிதழில் பெயர் போடப்பட்டுள்ளது. ஆகையால் அவர், ம.தி.மு.க.,வில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதை, அக்கட்சி சார்பில் யாரும் உறுதி செய்ய மறுத்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கருணா நிதி வாய்வார்த்தை ஜால ஜித்தன், நானே கூப்பிட்டால் கூட அரசியலுக்கு வராதே என்று அல்வா கிண்டிகொடுத்து வடிவேலுவை கவிழ்த்துவிட்டார். கிட்டத்தட்ட மாதம் ஒரு கோடி சம்பளம் வாங்கிய வடிவேலு கடந்த இருபது மாதங்களில் இழந்தது இருபது கோடி , இடுப்பிலிருந்து தனது சுருக்குப்பையை எடுத்தார நிதி? ஒரு கவிஞர் மூலம் லாட்டரி ஆசாமியை இழுத்து கறந்து லாட்டரி ஆசாமியை லாட்டரி அடிக்கவைதுள்ளார். தன கர கர குரலில் உதயநிதி மற்றும் துரை தயாநிதியை வடிவேலுக்கு நஷ்டஈடு தர கூட சொல்லவில்லை சூனா பானா இனிமேலாவது தன்னை திருத்திக்கொள்ளவேண்டும், காமெடி எனபது ஒரு காலகட்டத்தில் மட்டும் தான் எடுபடும், அப்புறம் புதிய பாணிவந்தால் மிதிபடும். கவுண்டமணி செந்தில் காமெடி இப்போது எடுபடாது அதேபோல் சூனா பானாவின் காமெடி சிறிது நாட்களுக்கு பிறகு எடுபடாது, கையை கட்டு, காலில் விழு, தாயே சரணம் என்று, தப்பு ஒன்றும் இல்லை, தி நகரில் கொடீஸ்வரகடை முதலாளி கூட காக்கிகளுக்கு மாமூல் எழுந்து நின்று பல் இளித்து கும்பிட்டுதான் தருகிறார், ஜோதியில் அய்க்கியமாகிவிடு கைப்புள்ள.
எதுக்கு இந்த பொழப்பு. நல்ல காமெடி நடிகன் என்ற பெயரோடு இருந்தாய் திறமையும் இருக்கு ஆனால் ஏதோ ஒரு தனிப்பட்ட கோபத்திற்காக அதுவும் உருப்படாத திமுகவிற்காக பிரசாரம் செய்யப்போய் இந்த கேவலமான நிலைமை. வடிவேலு நீ நடிச்ச ஆரம்ப கட்ட படங்களை நேரம் இருந்தால் (இப்ப நிறைய நேரம் இருக்கு) போட்டுப்பார் உன்னுடைய தகுதிக்கு மேலேயே கடவுள் உனக்கு கொடுத்திருக்கிறார் அதை கப்பாற்றிக்கொள்லாமல் கெடுத்துக்கொண்டாயே. வீணான அரசியல் எதுக்கு பேசாம கொஞ்ச காலம் இது போலவே பொறுமையாக காத்திருந்தால் மீண்டும் ஒரு நல்ல வாய்ப்புகளும் நேரமும் வரும். நீ எதிர்த்த விஜயகாந்து கூட ஒரு வருடம் மேக்கப் போடாமல் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் அதன் பிறகு எஸ். ஏ.சந்திரசேகர் எடுத்த சாட்சி என்ற படத்தின் மூலமாக மீண்டும் ஒரு ரவுண்டு வந்தார் அந்த தெனாவட்டில் கட்சி ஆரம்பித்தார் இப்போ கேவலப்பட்டுக்கொண்டிருக்கிறார். எனவே அவர் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார் .....அது வரை படித்துவிட்டு பொழப்பை பார். இது என்னுடைய அக்கறையுள்ள ஒரு அறிவுரை. இதை மீறினால் நெலம மோசமாகும். ஏனென்றால் உனக்கு பெரிய படிப்பும் கிடையாது. அறிவும் கிடையாது. கேட்ப்பார் பேச்சை கேட்டு பாழாய் போய்டாதே
நண்பரே... எல்லோருடைய ஆரம்ப காலகட்டமும்... கேவலம் தான்... அது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்...நடிகைகளுக்கும் பொருந்தும் ... நீங்கள் வேண்டுமானால்..உங்களுக்கு பிடித்த நடிகையின் படத்தை.. ஆரம்ப கால படத்தை இப்போது வேண்டுமானாலும் பாருங்கள்.. அவர்களுக்கு, இன்றைக்கு.. அவர்களின் திறமையை விட அதிகமாகவே கிடைத்திருக்கிறது .......
"முருகவேல் சண்முகம்..நண்பரே... எல்லோருடைய ஆரம்ப காலகட்டமும்... கேவலம் தான்... அது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்...நடிகைகளுக்கும் பொருந்தும் ... நீங்கள் வேண்டுமானால்..உங்களுக்கு பிடித்த நடிகையின் படத்தை.. ஆரம்ப கால படத்தை இப்போது வேண்டுமானாலும் பாருங்கள்.. அவர்களுக்கு, இன்றைக்கு.. அவர்களின் திறமையை விட அதிகமாகவே கிடைத்திருக்கிறது ....... " உங்களுக்கு பிடித்த கதாசிரியர்/ ரியல் நடிகர் படத்தை.. ஆரம்ப கால படத்தை இப்போது வேண்டுமானாலும் பாருங்கள்.. அவர்களுக்கு, இன்றைக்கு.. அவர்களின் திறமையை விட அதிகமாகவே கிடைத்திருக்கிறது ..........
இதெல்லாம் சும்மா வம்பு... அப்படியெல்லாம்.. திரு வடிவேல் அவர்கள் செய்ய மாட்டார்... இப்போதுதான்.. கொஞ்சம் வாய்ப்பு வர ஆரம்பித்து இருக்கிறது... இதெல்லாம் சும்மா தற்கொலைக்கு சமம் என்று அவைக்கு தெரியும்...வை கோ விடம் போனால் மட்டும் ஜெயா என்ன பாவ மன்னிப்பா கொடுக்க போகிறார்.. மொத்தமாக அரசியலை விட்டு விலகி.. சினிமாவில்.. கவனம் செலுத்த வேண்டும்.., வை கோ விடம் சேருவதானால், ஒரே நன்மை இவரின் எதிரி விஜயகாந்த்.. எந்த காலத்திலும் அரசியல் ரீதியாக இணையமுடியாதவரிடம் இவர் சேருவதாக இருக்கும், இப்படிப்பட்ட முடிவெடுத்தால் அரசியல் மற்றும் சினிமா ரெண்டிலும் இவரால் எதையும் இவரால் சாதிக்க முடியாது. எனக்கு மிக பிடித்த நகைச்சுவை நடிகர்.. அதாவது.. மொத்த நகைச்சுவை நடிகர்களிலே.. இவர்தான் TOP என்பது எனது எண்ணம்... அக இவர்... சினிமாவில் மீண்டும் தனது இடத்தை பிடிக்க முயற்சிக்க வேண்டும்.. அதுவே அவருக்கும்.. அவரது ரசிகர்களுக்கும் நல்லது., இவரால் மீண்டும் சினிமாவில் ஜெயிக்க முடியும் ஜெயிக்க வேண்டும், .. நல்லதே நடக்கட்டும்... .வாழ்த்துக்கள்.
வடிவேலு அவர்களே, உங்களை போன்ற கலைஞர்களுக்கு இந்த சாக்கடை வேண்டாமையா, எவ்வளவோ சாதித்த நீங்கள் இதில் என்ன சாதிப்பதற்கு அல்லது சாதிக்க வேணும் என்பதற்காக இந்த பாழா போன அரசியலுக்கு வர பார்கிறீர்கள். இன்று திமுக விஜயகாந்த் கூட்டணி அமையலாம், நாளை மதிமுக விஜயகாந்த் கூட்டணி அமையலாம், அரசியல் வியாதிகளுக்கு ஒரு மந்திரம் உள்ளது ( நிரந்தர பகைவனுமில்லை நண்பனுமில்லை என்று ) நீங்கள், மேலும் ஒரு கண்ணதாசன் போல மாற வேண்டாம், பேசாமல் நடிகர் சங்கத்தை அணுகுங்கள், இயக்குனர்கள் சங்கத்தை அணுகி பேசி சமாதானம் ஆகுங்கள், முதல்வரை சந்தியுங்கள் பேசுங்கள் அந்த தாத்தாவுக்கும் ஒரு கடிதம் எழுதி தங்கள் நிலையை தெரியபடுத்துங்கள், எனக்கு தெரிந்த வரையில் தாங்கள் ஸ்டாலினை தொடர்பு கொண்டு தங்கள் நிலையை சொல்லுங்கள், அதேபோல் விஜயகாந்தையும் தொடர்பு கொண்டு பேசுங்கள். எல்லாம் சரி ஆகிவிடும். தமிழக மக்களுக்கு தங்களை போன்ற சிறந்த நடிகர் வேண்டும். உங்களை நாங்கள் எதிர்பார்த்து இருக்கிறோம். எங்களுக்காக தங்கள் ஒரு நல்ல முடிவை எடுங்கள் அய்யா. உங்களுக்கு கோடி வணக்கங்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.