Wind mill in 55 thousand ruppees | 55 ஆயிரம் ரூபாயில் வீட்டில் அமைக்கலாம் சிறிய காற்றாலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

55 ஆயிரம் ரூபாயில் வீட்டில் அமைக்கலாம் சிறிய காற்றாலை

Added : டிச 06, 2012 | கருத்துகள் (7)
Advertisement
55 ஆயிரம் ரூபாயில் வீட்டில் அமைக்கலாம் சிறிய காற்றாலை

வீட்டு உபயோகத்திற்கு ஏற்ப, 55 ஆயிரம் ரூபாயில், செங்குத்தான காற்றாலைகளை நிறுவும் நிறுவனங்கள் சந்தையில் நுழைந்துள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், காற்றாலை மின் உற்பத்திக்கு, முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது. இதுவரை, வர்த்தக உபயோகத்திற்கு மட்டுமே காற்றாலைகள் அமைக்கப்பட்டன.அதிகரிக்கும் மின்வெட்டை மனதில் கொண்டு, வீட்டு உபயோகத்திற்கான சிறிய காற்றாலைகள் வடிவமைப்பில் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.வீட்டு உபயோகத்திற்கான காற்றாலைகளை வடிவமைத்தாலும், அவை, நடுத்தர மக்கள் வாங்கும் விலையில் இல்லை என்ற குறை இருந்தது.தற்போது, நடுத்தர மக்களின் மனக்குறையை போக்கும் விதமாக, சந்தையில் சிறிய காற்றாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

சிறிய காற்றாலை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள, "மெக்லின்ஸ் இந்தியா' நிறுவனத்தின் இயக்குனர் சிவசங்கர் கூறியதாவது:வர்த்தக பயன்பாட்டுக்கான காற்றாலைகளை நிறுவ, அதிக முதலீடு தேவைப்படும். இவற்றின் பிளேடுகள் அளவில் பெரியவை; இதை வீடுகளில் அமைக்க முடியாது.தற்போது, காற்றாலைகளில் பொருத்தப்படும் வட்ட வடிவிலான பிளேடுகள், சில நேரங்களில் கழன்று, விபத்தை ஏற்படுத்தும்.இப்பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில், வீட்டு உபயோகத்திற்காக சிறிய காற்றாலையை, வடிவமைத்து உள்ளோம். நடுத்தர மக்களும், இதை எளிதில் வாங்கி நிறுவ முடியும்; 55 ஆயிரம் ரூபாயில் அமைத்து தருகிறோம். இதற்கு தேவைப்படும் இடம் மிகக் குறைவு.

விபத்தை ஏற்படுத்தாத வகையில், பிளேடுகள் செங்குத்தான வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த முறையில் அமைக்கப்படும் ஒரு காற்றாலை மூலம், ஒரு நாளுக்கு அதிகபட்Œமாக, மூன்று யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும்.சென்னை பள்ளிக்கரணையில் உள்ள காற்று சக்தி தொழில்நுட்ப மையம், காற்று அதிகம் வீசும் மாவட்டங்கள் எவை என்பதை பட்டியலிட்டுள்ளது. அந்த மாவட்டங்களில், இந்த சிறிய காற்றாலைகளை நிறுவி, காற்று வீசும் பருவ காலத்தில், மின்சாரத்தை பெற்று பயனடைய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தென் மாவட்டங்களுக்கு "லக்'

:வீடுகளுக்கு மரபுசாரா மின் உற்பத்தியை அமைக்கும் போது, "சோலார்' மற்றும் காற்றாலை ஆகிய இரண்டையும் சேர்த்து அமைப்பதே சிறந்தது என்று, அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர்.இருப்பினும், காற்று அதிகம் வீசும் மாவட்டங்களான, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்ட மக்களுக்கும், திருப்பூர், கோவை ஆகிய மேற்கு மாவட்ட மக்களுக்கும், சிறிய காற்றாலைகள் வரவால், "லக்' அடித்துள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
09-டிச-201211:04:51 IST Report Abuse
v.sundaravadivelu மின்சாரம் இல்லாமல் இருப்பது எப்படி என்று ஒவ்வொரு தமிழனும் நூறு பக்கத்தில் கட்டுரை எழுதுமளவுக்கு இன்றைக்கு அனுபவம் பெற்று விட்டனர்... ஆகவே இனி எந்தக் காற்றாடி சுற்றினாலும் சுற்றாவிட்டாலும் கவலை இல்லை என்கிற அளவுக்கு மனோதிடம் பெற்றுவிட்டனர்.. இந்த இரும்புப் பெண்மணி எல்லாரையும் அதே விதமாக மாற்றிவிட்டார் என்பது கண்கூடு.... ஆகவே மக்களே, இனி நோ ப்ராப்ளம்.. ஹிஹிஹிஹிஹ்..
Rate this:
Share this comment
Cancel
Saravana S - chennai,இந்தியா
08-டிச-201211:16:56 IST Report Abuse
Saravana S மழை நீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தியது போல போர்கால அடிப்படையில் சூரிய மின்சார திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். ஒவொரு அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு கட்டயமாக்கபட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
08-டிச-201206:48:11 IST Report Abuse
venkat Iyer அம்மா,இந்த மிக்சி,கிரைண்டர் மற்றும் பேன் கொடுத்ததுக்கு,இதற்கு மான்யம் கொடுத்து இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
ramalingam - chennai,இந்தியா
06-டிச-201205:40:52 IST Report Abuse
ramalingam அரசாங்கத்தையே நம்பி இருப்பதில் அர்த்தமில்லை. இனி வரும் காலங்களில் நாமே நம் தேவைக்கு மாற்று எரிசக்தியை பயன்படுத்தவேண்டியதுதான் நம் பிரச்னையை தீர்க்கும் வழி.
Rate this:
Share this comment
Cancel
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
06-டிச-201204:17:20 IST Report Abuse
மோனிஷா "லக்அடித்துள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.// ஏன் தமிழக அரசு விலையில்லாமல் காற்றாலை அமைத்துக்கொடுக்கப்போகிறதா.
Rate this:
Share this comment
Laxminarayan - Erode,இந்தியா
07-டிச-201206:53:46 IST Report Abuse
Laxminarayanஇன்னும் எதன்னை நாளைக்குதான் இலவசத்தையே எதிர்பார்த்துகிட்டு இருபீங்க ?...
Rate this:
Share this comment
Arivarasan Sk - paramakudi,இந்தியா
08-டிச-201209:51:30 IST Report Abuse
Arivarasan Skஇலவசம் தான் நம்ல இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுருக்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை