சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் அருகே தண்ணீர் இன்றி வாழை, மக்காச்சோளம் கருகியதால் விவசாயி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ளது வெள்ளப்பனேரி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த தங்கச்சாமி மகன் செந்தூர்பாண்டியன்(45). இவர் விவசாயம் செய்து வருகிறார். சங்கரன்கோவில் தாலுகாவில் பருவ மழை சரிவர பெய்யவில்லை. மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் கிணற்று தண்ணீரை நம்பி செந்தூர்பாண்டியன் தனது நிலத்தில் 3 ஏக்கர் மக்காச்சோளமும், ஆயிரம் வாழையும் பயிரிட்டார். கிணற்றில் இருந்த தண்ணீரை வைத்து வாழையையும், மக்காச்சோளத்தையும் காப்பாற்றி வந்தார். ஆனால் செந்தூர்பாண்டியன் எதிர்பார்த்தது போல் மழை பெய்யாததால் வாழையும், மக்காச்சோளமும் தண்ணீர் இன்றி கருக தொடங்கியது. இதனால் மனம் உடைந்த செந்தூர்பாண்டியன் தனக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விவசாயி செந்தூர்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட செந்தூர்பாண்டியனுக்கு முத்து(42) என்ற மனைவியும், வளர்செல்வி(25), பிரேமா(15) என்ற மகள்களும், மணிகண்டன்(18) என்ற மகனும் உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.