பு, Cauvery row: Karnataka Chief Minister to meet PM today | காவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்கிறார் ஷெட்டர்- மாண்டியாவில் முழு அடைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்கிறார் ஷெட்டர்- மாண்டியாவில் முழு அடைப்பு

Added : டிச 07, 2012 | கருத்துகள் (8)
Advertisement
காவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்கிறார் ஷெட்டர்- மாண்டியாவில் முழு அடைப்பு

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை‌ தொடர்ந்து நள்ளிரவில் கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது. இதையடுத்து கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுகிறார்.இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு கர்நாடாவில் விவசாயிகள், மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன.


நள்ளிரவில் தண்ணீர் திறப்புகாவிரிநதிநீர் பங்கீடு விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதிநீர் பங்கீட்டு‌ விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழகத்திற்கு 10 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகம் மறுப்பு தெரிவித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நள்ளிரவு கர்நாடகாவின் கிருஷ்ணராஜா சாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.


பிரதமர‌ை இன்று சந்திக்கிறர் ‌முதல்வர் ஷெட்டர்இந்நிலையில் கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று இரவு விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார்.அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அவருடன் கர்நாடக மாநில சட்ட அமைச்சர் சுரேஷ்குமார், துணை முதல்வர் ஈஸ்வரப்பா, பா.ஜ. மாநில தலைவர் சீத்தராமைய உள்ளிட்டோர் உடன் சென்றனர். முன்னதாக நள்ளிரவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் ,கட்சிகள் மற்றும் கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். நேற்று மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணையை சுற்றி 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. இன்று முழு அடைப்பு என்பதால் முன்னெச்சரிக்கையாக மாண்டியா உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டியா மாவட்டம் முழுவதும் பதற்றம் காணப்படுகிறது. இன்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டில்லியில் நடக்கவுள்ளதால் காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan - Chennai,இந்தியா
07-டிச-201213:11:01 IST Report Abuse
Srinivasan நதிகள் எல்லாம் மாநில அரசு கைல இல்லாம மத்திய அரசு எடுத்து கிட்டா இந்த பிரச்சன வராது இல்ல? அது என் செய்ய மடிங்குறாங்க??
Rate this:
Share this comment
Kamal - Kumbakonam,இந்தியா
07-டிச-201222:34:30 IST Report Abuse
Kamalஅது சரி. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இங்கு தண்ணி கிடைக்காது. பிஜேபி ஆட்சி நடந்தாலும் தண்ணி கிடைக்காது....
Rate this:
Share this comment
Cancel
sheik abdullah - Madurai  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-201209:57:07 IST Report Abuse
sheik abdullah சுப்ரீம் கோர்ட்டே கூட நிலைமையை சரிவர புரிந்து கொள்ளவில்லை. பாசனப்பரப்பை கர்நாடகம் நியாயமற்ற முறையில் அதி்கரித்துள்ளதையும் புள்ளிவிபரங்களை தனக்கு சாதகமாக வகைப்படுத்தி்யுள்ளதை கண்டித்து தனக்குள்ள அதி்காரத்தை உணர்த்தி்யிருக்கவேண்டும். கூட்டம் நம்நாட்டில் எதற்குத்தான் கூடவில்லை? கூட்டமாக சொல்வதனால் மட்டுமே அநியாயம் நியாயமாகிவிடாது என்பதை கர்நாடக அரசியல்வாதி்களும் வெறிபிடித்த கன்னட அமைப்புகளும் உணரும்வண்ணம் நீதி்மன்ற உத்தரவு அமைந்தால் மட்டுமே சட்டத்தி்ன் ஆட்சி சாத்தி்யம் இல்லாவிட்டால் கும்பல் ஆட்சிதான் தொடரும்.
Rate this:
Share this comment
Cancel
sathish19841 - banglore,இந்தியா
07-டிச-201209:50:46 IST Report Abuse
sathish19841 பக்கத்தில் இருக்கும் மாநிலத்திற்கு குடிநீர் தர மறுக்கிறார்கள். மனித நேயம் இல்லாதவர்கள். வெள்ளம் வருகின்றபோது தண்ணீர் திறந்து விடுவார்கள். அப்போது நாம் வேண்டாம் என்று கூற வேண்டும். ஒரு தமிழனாக வேதனைப்படுகுரேன்.
Rate this:
Share this comment
Cancel
sasimurugesan - Melathangal,இந்தியா
07-டிச-201208:42:36 IST Report Abuse
sasimurugesan நதி நீர் என்பது மனித உடலின் குருதி போன்றது அதை எந்த பகுதியும் தடுத்து நிறுத்தி நானே பயன்படுத்துவேன் என்பது மிகவும் தவறு அது எல்லா இடத்துக்கும் பாய்ந்து மனித உடலை சமநிலையில் வைப்பதைப்போல அ‌‌னைத்து இடங்களும் செழுமையை பகிர்ந்து இன்பமாக வாழவேண்டும். சசிகுமார்.எம் , மேலத்தங்கள் , வந்தவாசி
Rate this:
Share this comment
Cancel
balagiri - Chennai,இந்தியா
07-டிச-201208:12:10 IST Report Abuse
balagiri சும்மா இருந்த சங்கை ஊதி கெடுக்கிறார் இந்த ஷட்டர். இவர் தன்னிச்சையாக பிரதமரை சந்திப்பதை பி ஜே பி தலைவர்கள் கண்டிக்கவேண்டும், ஆமாம் எடியுராப்பாவின் சகுனி பரத்வாஜ் எங்கே?
Rate this:
Share this comment
Cancel
Vijayakris - Chennai,இந்தியா
07-டிச-201207:50:55 IST Report Abuse
Vijayakris அம்மா வாழ்க... கருணாவாக இருந்தால் ஒரு கடிதம் to PM அவ்ளோதான் நடந்து இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
07-டிச-201207:32:27 IST Report Abuse
sitaramenv தனி கர்நாடக நாடு என்பது போல் கடந்த காலத்தில் கபினி ஹேமாவதி அணைகளை கட்டிக்கொள்ள காங்கிரஸ் தட்டிக்கேட்க யாரும் இல்லாத நிலையில் இஷ்டம் போல் ஆட்டம் போட்டார்கள். இப்போது சுப்ரீம் கோர்ட் ஆணை இட்டதும் வலிக்கிறதா.................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை