கோவை: கொலை, கடத்தல் உள்ளிட்ட, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, ஜிம் ஹக்கீமிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, ஆபாச வீடியோ காட்சிகளின் அடிப்படையில், கோவை மாநகர போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ரத்தினபுரியை சேர்ந்தவன், "ஜிம்' ஹக்கீம், 30. கொலை, பெண்களை கடத்தி, ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்தது உள்ளிட்ட, பல்வேறு குற்ற வழக்குகள், இவன் மீது நிலுவையில் உள்ளன.
கோவை புலியகுளத்தை சேர்ந்த சகாயராஜ் என்பவர் கொன்ற வழக்கில், ஜூன் 19ம் தேதி கைது செய்யப்பட்ட, ஹக்கீம், ஆக.25ல் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டான். சிறை விதிகளை மீறிய காரணத்தால், கடந்த மாதம் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டான். ஹக்கீம் கைது செய்யப்பட்டபோது, அவனிடம் இருந்து, பெண்கள், இளைஞர்களின் ஆபாச வீடியோ படக்காட்சிகள் அடங்கிய, "சிடி' கேசட்டுகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், ஹக்கீம், பெண்களுடன் இருப்பதும் போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில், நிர்வாண நிலையில் பெண்கள் இருப்பது போன்றும், கதறி அழுவது போன்றும், காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. ஹக்கீமின் நண்பர்கள், இந்த காட்சிகளை புழக்கத்தில் விட்டதாக தெரிகிறது. இந்த ஆபாச படக் காட்சிகள் பற்றி, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்களை கடத்தி, அவர்களுக்கு போதை ஊசி போட்டு நாசம் செய்ததாகவும், அதை வீடியோ எடுத்து பணம் பறித்ததாகவும், ஹக்கீம் மீது குற்றச்சாட்டு உள்ளது. வசதியான இளைஞர்களை அழைத்து சென்று, பெண்களுடன் உல்லாசமாக இருக்க வைத்து, அதை வீடியோ எடுத்து பணம் பறித்ததாகவும், புகார்கள் உள்ளன. ஹக்கீம் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஆபாச படங்கள் பற்றி விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது பற்றி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர், விஸ்வநாதன் கூறுகையில், ""ஹக்கீம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். அவனால் கடத்தப்பட்ட பெண் ஒருவர், கோர்ட்டில் சரியாக சாட்சி சொல்லியுள்ளார். ஹக்கீமிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் பற்றி, முழுமையாக விசாரிக்க உத்தரவிடப் பட்டுள்ளது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.