வருகின்ற ஜனவரி மாதம் 12ம் தேதி சுவாமி விவேகானந்தரின் நூற்றைம்பதாவது ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சுவாமி விவேகானந்தர் இல்லத்தில் இதையொட்டி சிறப்பு புகைப்பட கண்காட்சிக்கும், புதிய முப்பரிமாண காணொளிக்கும் ஏற்பாடாகியுள்ளது. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள காணக் கிடைக்காத சுவாமி விவேகானந்தரின் விசேஷ படங்கள்.39 வருடங்களே இந்த மண்ணில் இருந்தவர், ஆனால் ஒரு நூற்றாண்டைக் கடந்தும் மக்கள் மனதில் இருப்பவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சமயத்தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர். ரிஷிகளிடமும், முனிவர்களிடமும் இருந்த ஆன்மிகத்தை சாமன்ய மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அமெரிக்காவின் சிகோகோ நகரில் "சகோதர சகோதரிகளே' என்ற முன்மொழியுடன் இவர் பேசிய பிறகே உலக நாடுகளின் பார்வையில் இவரும், இந்தியாவும் புனிதமாக பார்க்கப்பட்டனர். சுவாமி ராமகிருஷ்ணரின் தலைசிறந்த சீடர். எழுச்சியுற வேண்டும் என நினைக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் இவரது கருத்துக்களை இப்போது படித்தால் கூட போதும், வீறு கொண்டு எழுவது திண்ணம்.
1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம்தேதி கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவிற்கும், புவனேசுவரி தேவிக்கும் மகனாக பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் நரேந்திர நாத். தாய்மொழி வங்காளம், கல்லூரியில் தத்துவம் படித்தார். சிறந்த விளையாட்டு வீரர், இசையில் நிறைய ஆர்வம் உண்டு. சிறு வயது முதலே தியானத்தில் நாட்டம் கொண்டவர்.
பயணத்தின் ஒரு கட்டமாக 1892ல் கன்னியாகுமரி சென்றவர் கடல் நடுவில் உள்ள பாறைக்கு நீந்திச் சென்று அங்கு மூன்று நாள் தியானத்தில் இருந்து திரும்பினார். பின்னர்தான் அமெரிக்கா பயணமாகி உலகப்புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார். தொடர்ந்து லண்டன் போன்ற நாடுகளில் பயணம் மேற்கொண்டு நிறைய சொற்பொழிவாற்றினார்.
விவேகானந்தர் என்ற வீரத்துறவியினை ஒட்டு மொத்த நாடே திரும்பிப்பார்த்து போற்றி கொண்டாட ஆரம்பித்தபோது , 39 வயதில் 1902ம் ஆண்டு ஜூலை 4ம்தேதி பேலூரில் இறந்தார்.
இந்த உயர்ந்த கருத்தினை வாசிப்பதோடு நிறுத்திவிடாமல், வாழ்ந்து காட்டவேண்டும் அதுவே சுவாமி விவேகானந்தருக்கு செலுத்தும் மிகப்பெரிய மரியாதையாகும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.