Advertisement
காவிரி கண்காணிப்பு குழு உத்தரவை நிராகரியுங்கள் பிரதமருக்கு கர்நாடக முதல்வர் கடிதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2012,23:59 IST

பெங்களூரு:"தமிழகத்திற்கு, காவிரியில், 12 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும் என, காவிரி கண்காணிப்பு குழு பிறப்பித்த உத்தரவு, நியாயமற்றது; மிகவும் பாதகத்தை ஏற்படுத்தக் கூடியது' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கடிதம் எழுதியுள்ளார்.


டில்லியில், நேற்று முன் தினம் நடந்த, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு, டிசம்பர் மாதத்தில், காவிரியில், 12 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டது. அத்துடன், 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


கண்காணிப்பு குழுவின் உத்தரவுக்கு, கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காவிரி பாசன பகுதிகளில் உள்ள விவசாயிகளும், கன்னட அமைப்பினரும், போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவு, கர்நாடக மாநிலத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியது."தமிழகத்திற்கு, 12 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, காவிரி கண்காணிப்பு குழு பிறப்பித்த உத்தரவை, நீங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும். கர்நாடகாவில், தற்போது பயிரிடப்பட்டுள்ள, பயிர்களை காப்பாற்ற இதைச் செய்ய வேண்டியது அவசியம்.


அக்டோபர் மாதம் நடைபெற்ற, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்திற்குப் பின், 6.12 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டது. ஆனால், அதை விட, இரு மடங்காக தற்போது திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்று, ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன், தமிழகத்திற்கு, வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதுவே, காவிரி பாசன பகுதிகளில் உள்ள, கர்நாடக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு மிகவும் நியாயமற்றது.இவ்வாறு கடிதத்தில், முதல்வர் ஷெட்டர் கூறியுள்ளார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-டிச-201219:01:11 IST Report Abuse
தமிழவேல் சென்றமுறை பிரதமர் 9000 கன அடி திறக்கச்சொன்ன போது அவர் கூறுவதை திரு ஷெட்டர் கேட்கவில்லை.... இப்போது இவர் கேட்பதை பிரதமர் எப்படி கேட்பார் ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
09-டிச-201218:21:38 IST Report Abuse
Pugal நம் முதல்வரும் , பா ஜ க கடிதத்தை ஏற்க்க வேண்டாம் என்று பிரதமருக்கு ஒரு கடிதம் உடனே எழுதினால் நன்றாக இருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
09-டிச-201218:19:56 IST Report Abuse
Pugal இந்த செய்தியைப் படித்த பின்னும், காங்கிரசை திட்டி, பா ஜ க தலைவர்களை சப்போர்ட் செய்து கேருத்து எழுதும் நண்பர்களை என்ன சொல்லலாம்? ஜெயா ஆதரித்த ஜஸ்வந்த் சிங், தமிழக மக்களில் பலர் ஆதரிக்கும் மோடி போன்ற பா ஜ க தலைவர்கள் இது பற்றி ஏன் பேசுவதே இல்லை? இது தான் ஒரு தேசிய கட்சி செயல் படும் விதமா? இனி இவர்கள் மத்தியில் ஆழ வந்தால் தேசிய கண்ணூட்டம் இவர்களுக்கு இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். இப்போது காங்கிரஸ் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று சொல்பவர்கள் ஏன் கர்னாடக பா ஜ க தமிழர்களை வஞ்சிக்கிறது என்று சொல்ல மறுக்கிறார்கள்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.