திருவாரூர் : திருத்துறைப்பூண்டியில் நடவுப் பயிர்கள், தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகியதை கண்டு மனம் நொந்த விவசாயி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அந்தங்கரையைச் சேர்ந்தவர் அப்துல்ரகிம் ,42. தனது நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார். கடந்த மாதம் பெய்த மழையில், பயிர்கள் நன்றாக வளர்ந்து செழிப்பாக இருந்தது. நேற்று முன் தினம் விவசாயிகள் நடத்திய பந்தில் உற்சாகமாக பங்கேற்றவர், நேற்று காலை வயலுக்கு சென்றுள்ளார். அங்கு பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து, வயல்கள் வெடித்து கிடந்ததை கண்டு மனம் வெறுத்தவர், வீட்டிற்கு சென்று உறவினர்களிடம் சொல்லி புலம்பியுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து, அப்துல்ரகிம் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் ஆலிவலம் போலீசார் விசாரிக்கின்றனர். மன்னார்குடி ஆர்.டி.ஓ., செல்வராஜ், அப்துல்ரகிம் உண்மையில் விவசாயம் பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என, விசாரித்து வருகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.