அழகு மிளிர புதுப்பொலிவுடன் எம்.ஜி.ஆர்., நினைவிடம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:எட்டு கோடி ரூபாய் செல வில், புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி. ஆர்., நினைவிடத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று திறந்து வைத்தார்.
சென்னை, காமராஜர் சாலையில், 8.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர் நினைவிடத்தின், நுழைவு வாயிலின் முகப்பினை மாற்றியமைத்தல் மற்றும் முன்பக்கச் சுற்றுச் சுவரினைப் புதுப்பித்தல் பணிகள், 3.40 கோடி ரூபாய் செலவிலும், எழிலூட்டும் பணிகள், 4.30 கோடி ரூபாய் செலவில் அரசு மேற்கொண்டது.
தமிழ் வளர்ச்சி , அறநிலையம் மற்றும் செய்தித்துறை சார்பில் இதற்கான நிதி செலவிடப்பட்டது. இந்தப் பணிகளின் சிறப்பம்சமாக, நினைவிடத்தில் முகப்பு வாயில் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நினைவிடத்தின், திறந்தவெளி முழுவதும் கொரியன் புல் மற்றும் பிரத்யேகமான செடி வகைகளான, பல்மெரியா ஆல்பா, டேட்பால்ம், ஸ்பைடர் லில்லி, ஆகியவற்றை கொண்டு புல்வெளி, அனைவரையும் கவரும் வகையில். புதுப்பிக்கப்பட்உள்ளது.
நினைவிடத்தின், நடுவில் அமைந்துள்ள, நடைபாதை புதிய கிரானைட் கற்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சமாதியைச் சுற்றிலும், கிதார் வடிவில் புதிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக, இரண்டு சாய்வு நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நினைவிடத்தின், இரண்டு பக்கங்களின், ஓரங்களிலுள்ள நடைபாதைகள் மற்றி அமைக்கப்பட்டுள்ளன. சமாதியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள, நடைபாதை மற்றும் சாய்வு நடைபாதைகளின் ஓரங்களில் துருப்பிடிக்காத, இரும்பு கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சமாதியிலும், சமாதியை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வளைந்த இதழ்களிலும், எந்த பாதிப்பும் ஏற்படாமல் மெருகேற்றப்பட்டுள்ளது. மத்தியில் அமைந்துள்ள, புல்வெளியின் நடுவில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி அமைந்துள்ள நீர் அகழியிலும், செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.
நினைவகத்தின் பின்பகுதியில், அழகிய விளக்குகளுடன் கூடிய, அரை வட்ட வடிவலான செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. தேவையான, அலங்கார மின்விளக்குள், போதிய வெளிச்சத்துடன் சமாதி மற்றும் நினைவிடத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, உயர் கோபுர மின்விளக்குள் நுழைவு வாயிலும்,சமாதியிலும் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு அம்சங்களுடன் கூடிய, புனரைக்கப்பட்ட நினைவிடத்தை, நேற்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். சமாதியில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார்.
புனரமைக்கப்பட்ட நினைவிடம் முழுவதையும் பார்வையிட்டார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்கள், அ.தி.மு.க., பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.