Advertisement
அவதூறு வழக்கு: விஜய்காந்த் மீது கருணாநிதி கரிசனம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012,23:23 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 11,2012,00:54 IST

சென்னை: "கருணாநிதி, எம்.ஜி.ஆர்., போல, சுமூகமாப் பேசி, கர்நாடக அரசிடம் தண்ணீர் பெற முதல்வர் ஜெயலலிதா முயற்சிக்க வேண்டும்' என, விஜயகாந்த் கூறியதற்காக, அவர் மீது, "ஓர் அவதூறு வழக்கு வந்து விடப் போகிறது' என, எதிர்கட்சி தலைவர் விஜயகாந்திற்கு ஆதரவாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

அவரது அறிக்கை:



நீலகிரியில், நிருபர்களிடம் பேசிய, விஜயகாந்த், "கருணாநிதி, எம்.ஜி.ஆர்., போல சுமூகமாப் பேசி, கர்நாடக அரசிடம், தண்ணீர் பெற, முதல்வர் ஜெயலலிதா முயற்சிக்க வேண்டும்' என, கூறியுள்ளார். இதற்காக, அவர் மீது ஓர் அவதூறு வழக்கு வந்து விடப் போகிறது. ஏனென்றால், அக்டோபர் 14ம் தேதி, அவர் ஒரு, "டிவி'க்கு அளித்த பேட்டிக்காக, ஒரு அவதூறு வழக்கை, இந்த அரசு அவர் மீது தொடுத்துள்ளது.




நான் சட்டசபையில் ஆற்றிய பணி :


சட்டசபை, வைர விழாவில் பங்கேற்ற, ஜனாதிபதி உரையை, அரசு வெளியிடவில்லை. சட்டசபையில் பிரணாப் முகர்ஜி பேசும்போது, ஐந்து முறைக்கு மேல், நான் முதல்வராக இருந்ததைப் பற்றியும், தொடர்ந்து, 60 ஆண்டு காலத்திற்கு மேல், நான் சட்டசபையில் ஆற்றிய பணி பற்றியும் பேசி விட்டார். அந்த பேச்சினை எப்படி வெளியிடலாம் என்று கருதியிருக்கலாம்.



வால்மாட் நிறுவனத்தின் சார்பில், ஏழு ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகமும், அண்ணாநகரில் மார்க்கெட்டிங் அலுவலகமும் துவங்கி, அதற்கான பணிகள் நடைபெறுவதாக தகவல் வருகின்றன. நாங்கள் சில்லரை வர்த்தகம் செய்யவில்லை. கடைகளுக்கு மொத்தமாக பொருட்களை வழங்கப்போகிறோம் என, கூறுகிறார்களாம். எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (99)
Srinath Babu - Madurai,இந்தியா
11-டிச-201214:27:54 IST Report Abuse
Srinath Babu எல்லாம் கூட்டணி இருக்கா இல்லையா என்று தெரியேற வரைக்கும் தான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
R.Saminathan - mumbai,இந்தியா
11-டிச-201210:45:01 IST Report Abuse
R.Saminathan நல்ல தலைவர்களை வைத்து அரசியல் நடத்துவது தவறில்லை தே.மு.தி.க. திரு.விஜயகாந்த் அவர்கள்,ஆனால் தி.மு.க. தலைவர் திரு.கலைஞர் அவர்கள் திரு.விஜயகாந்த் அவர்களை எதற்கு கரிசனம் செய்கிறார் ஆச்சரியமாக உள்ளது..
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Anand Vg - Chennai,இந்தியா
11-டிச-201201:29:50 IST Report Abuse
Anand Vg Nothing wrong in this case....Cauvery & Kutch island went away from us is because of MK. He gave permission to build as many no. of dams in karnataka because he was afraid of Sarkaaria commission. To save his family, today he supported FDI in retail. He has done lot and lot and lot and lot of harm to TN. How can Vijayakanth say that Jaya should have talked like Karunanidhi? If he had told, Jaya should have behaved like MGR, it is accep...But, Why Karunanidhi?..NO WAY. We should appreciate Jaya that she has taken the matter to Supreme Court and we have got a favorable decision..Also, let Vikaykanth think what Karuna has done to Mullai Periyaar dam. Supreme Court gave an order to raise it height in 2006. After Karuna came to power, he didnt do anything...Why??..He wanted to enjoy the power in centre..He said that he will have a demonstration against Kerala in Madurai...Then CBI came to Raja's house..Then he said that it will not be a demonstration...It will be a meeting..Then, he cancelled that meeting too...For money & power, he has let off Mullai Periyaar dam too...Now, how can Vijaykanth say that Jaya should have talked like Karuna...That is equal to saying that TN should not get Cauvery water....
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Varatharajan - Oslo,நார்வே
11-டிச-201201:28:10 IST Report Abuse
Varatharajan மீன் தூண்டிலில் ஒரு புழுவை குத்தி தூக்கி ஆற்று தண்ணீரில் போட்டால் தான் நல்ல பெரிய மீனை பிடிக்கலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
rajkumar vmmc - Dammam,சவுதி அரேபியா
10-டிச-201215:38:39 IST Report Abuse
rajkumar vmmc ஆஹா ஆஹாஹா ராஜதந்திரத்தை கரைத்து அப்படியே பல்லில் படாமல் மடக்மடக் என்று குடித்திருக்கிறீர்கள் மன்னரே. எத்தனை தடவை சொல்வது தங்களுக்கு கோவம் வருவதுபோல காமெடி செய்யாதீர்கள் என்று. தமிழ் , பார்ப்பனம் , பிற்படுத்தப்பட்டோர் , செம்மொழி இதை தவிர என்ன உமக்கு தெரியும். அமாம் அவரது கட்சியில் அவரும், அவரது மனைவியும்தான் இருக்கிறார்கள். உங்கள் கட்சியில் நீங்கள், உங்கள் மாணவி, துணைவி, மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், மாமா, மாமி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, நாத்தானார், கொளுன்தியல், கொழுந்தனார், பங்காளிகள், மச்சினர்கள், மச்சினிகள், தாதா, பாட்டி, கொள்ளுபேரன்கள் கொள்ளுபேத்திகள், மூத்தார்கள், தொத்தாகள், மதிநிக்கள், என்று குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் கட்சியில் இருக்குறீர்கள்... பாவம் தொண்டனுக்கு தான் கட்சியில் இடமே இல்லை...
Rate this:
22 members
1 members
78 members
Share this comment
Satheesh Kumar - joda,இந்தியா
10-டிச-201214:49:25 IST Report Abuse
Satheesh Kumar வால்ட்மர்ட் 50% karuna குடும்பத்து தான்........... அட போங்கபா............
Rate this:
6 members
0 members
35 members
Share this comment
badhrudeen - Madurai,இந்தியா
10-டிச-201214:28:18 IST Report Abuse
badhrudeen கருணாநிதி தற்போது அரசியல் வியாபாரம் செய்து வருகின்றார். இதில் தயவு செய்து தமிழக மக்கள் இவரை பத்தி செய்திகளை படிக்க வேண்டாம், கருத்துக்கள் சொல்லவேண்டாம்.தினமலர் தயவு செய்து இவரை பற்றி செய்திகளை வெளியிட வேண்டாம்.
Rate this:
10 members
0 members
43 members
Share this comment
neerodai - Coimbatore,இந்தியா
10-டிச-201214:24:02 IST Report Abuse
neerodai இங்கு பலரும் காவேரி பிரச்சினையை கருணாநிதி தீர்த்ததாக கூறியுள்ளனர். தீர்ந்த பிரச்சினைகள் எப்பொதும் திரும்பாது . காவேரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை என்பதே உண்மை நிலவரம்
Rate this:
3 members
4 members
23 members
Share this comment
Narayan Arunachalam - DELHI,இந்தியா
10-டிச-201214:00:37 IST Report Abuse
Narayan Arunachalam Walmart in Cash and Carry வகையிலான வணிகத்தை தான் இப்படி கூறுகிறார் போலும்.. இந்த வணிக முறைப்படி விற்பனை வரி சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற வணிகர்களே, மொத்தமாக வால் மார்டில் வாங்கி சிறு வணிகருக்கு விற்க முடியும்.. இது ஒன்றும் புதிதல்ல.. ஏற்கனவே டில்லி மற்றும் அதன் சுட்டறு வட்டாரங்களில் சிறு வணிகர்கள், ரிலையன்ஸ், பிக் ஷாப் போன்ற கடைகளில் விலை குறைவாக வாங்கி அதனை தங்கள் கடைகளில் விற்கின்றனர்.. அதில் ஆதாயம் இருப்பதால்.. ஆனால் இந்த காஷ் அண்ட் கர்ரி முறையில், தனி நபர்கள் வாங்க முடியாது.. மு க எதற்கும் அவரது ஆரிய வக்கீல்கள் மற்றும் ஆடிட்டர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது
Rate this:
2 members
1 members
16 members
Share this comment
saravanan - Dares Salaam,தான்சானியா
10-டிச-201213:59:01 IST Report Abuse
saravanan என்ன தாத்தா.... வால்மார்ட்ல இருந்து இன்னும் பொட்டி வரலையா??
Rate this:
5 members
0 members
34 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.