புதுடில்லி: ""நாட்டின், 90 சதவீத இந்தியர்கள், முட்டாள்கள். மதத்தின் பெயரால் அவர்களை, சமூக விரோத சக்திகள் எளிதில் ஏமாற்றி விடுகின்றன,"" என, பிரஸ் கவுன்சில் தலைவர், நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த, கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்ற, நீதிபதி கட்ஜு, 66, கூறியதாவது:
நாட்டில் உள்ள மக்களில், 90 சதவீதம் பேர் முட்டாள்கள் என்று, உறுதியாக சொல்வேன்; அவர்கள் தலையில் மூளை கிடையாது; அவர்களை எளிதாக ஏமாற்றி விடலாம்.வெறும், 2,000 ரூபாய் இருந்தால் போதும், டில்லியில் பெரிய மதக்கலவரத்தை ஏற்படுத்திவிடலாம்; தவறாக சைகை காண்பிப்பதன் மூலமும், பிற மதத்தவரின் வழிபாட்டு இடங்களை, அவமரியாதை செய்வதன் மூலமும், எளிதில் மத கலவரத்தை ஏற்படுத்தி விடலாம்.
அந்தத் தகவல் தெரிந்ததும், முட்டாள் ஜனங்கள், ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வர். இந்தச் செயலுக்கு பின்னால், சில சமூக விரோத சக்திகள் இருக்கிறது என்பதை, அவர் கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
பின்தங்கி விட்டோம்:
நாட்டில், 1857ம் ஆண்டிற்கு முன், மதக் கலவரமே கிடையாது; மதத்தின் பெயரால், சண்டையிட்டுக் கொண்டதே கிடையாது. ஆனால், இப்போது நிலைமையை யோசித்து பாருங்கள். 80 சதவீத இந்துக்கள், மத உணர்வுடன் உள்ளனர்; அதுபோலவே, 80 சதவீத முஸ்லிம்களும் மத உணர்வுடன் உள்ளனர்.இதனால், நாம், 150 ஆண்டுகள் முன்னேறிச் செல்வதற்குப் பதிலாக, 150 ஆண்டுகள் பின்தங்கி விட்டோம். இதற்கு காரணம், ஆங்கிலேயர்கள் தான். அவர்கள் தான், மக்கள் மனதில் விஷத்தை பாய்ச்சி விட்டனர். சிப்பாய் கலகம் நடந்த, 1857ம் ஆண்டில், லண்டனில் இருந்த சில சக்திகள், "இந்தியர்களை இப்படியே விட்டால் சரிப்பட்டு வர மாட்டார்கள்' என கருதி, இந்தியர்களை பிரித்தாழ, மதம் என்ற வார்த்தையை பயன்படுத்தத் துவங்கின. அதன் மூலம், இந்துக்களையும், முஸ்லிம்களையும் அடித்துக் கொள்ளச் செய்தனர்.
இந்தி மொழி, இந்துக்களுக்கும், உருது மொழி, இஸ்லாமியருக்கும் என, தவறாக பிரசாரம் செய்யப்பட்டது; அதையும், உண்மை என நம்பி, ஏராளமானோர், இன்னும் மோதிக் கொள்கின்றனர்.
ஆனால், நம் முன்னோர்களில் ஏராளமானோர், உருது மொழி படித்துள்ளனர்; இங்கு, மக்களை முட்டாள் ஆக்குவது எளிது; நிறைய பேர் முட்டாள்களாக இருப்பதால், அவர்கள் பிறரை எளிதாக முட்டாள் ஆக்கிவிடுகின்றனர்.இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இனிமேலாவது உண்மையை உணர்ந்து, முட்டாள்களாக இருக்க வேண்டாம் என்பதற்காகத் தான்.இவ்வாறு, கட்ஜு பேசினார்.
வித்தியாசமானவர்:
மார்க்கண்டேய கட்ஜு, 2004ல், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்; அதற்கு பின், 2006ல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு, அக்., முதல், "பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா'வின் தலைவர் பொறுப்பில் உள்ளார். தனக்கு நியாயம் என தெரிந்ததை, அப்படியே சொல்வதிலும், நியாயமானதை செய்வதிலும், கட்ஜு வித்தியாசமானவராக திகழ்கிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
"நாட்டில் உள்ள மக்களில், 90 சதவீதம் பேர் முட்டாள்கள் என்று, உறுதியாக சொல்வேன் அவர்கள் தலையில் மூளை கிடையாது அவர்களை எளிதாக ஏமாற்றி விடலாம்.வெறும், 2,000 ரூபாய் இருந்தால் போதும், டில்லியில் பெரிய மதக்கலவரத்தை ஏற்படுத்திவிடலாம் தவறாக சைகை காண்பிப்பதன் மூலமும், பிற மதத்தவரின் வழிபாட்டு இடங்களை, அவமரியாதை செய்வதன் மூலமும், எளிதில் மத கலவரத்தை ஏற்படுத்தி விடலாம்." கணம் நீதி பதி அவர்கள் சொல்வது உண்மையில் உண்மைதான் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்கார்கள் என்ற சூழ்நிலை உருவாகி மக்கள் தடுமாறுகிறார்கள் நீங்களே ஒரு நல்ல வழி சொல்லுங்கள் அய்யா
63 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மேலும் மேலும் ஜாதிகளையும் சிறுபான்மையினரையும் ஆளும் கட்சிகளும் சரி ஆளவேண்டும் என்று நினைக்கும் கட்சிகளும் சரி சலுகைகளை ஒட்டு வங்கிக்காக ஏற்றி ஏற்றி நம் நாட்டு பிரஜைய களிடம் வேற்றுமையை உண்டாக்கி ஒரு இறுக்கமான சூழ்நிலையை உருவாக்கி குளிர் காய்கிறார்கள் என்றைக்கு நட்டு குடிமகனுக்கு திறமை அடிபடைய்தான் வேலை என்ற சூழ்நிலை உருவாகிறதோ அன்றுதான் அனைவரும் புத்திசாலித்தனமாக ஓட்டளிப்பார்கள்
நீதிபதி சொல்வதில் உண்மை உள்ளது.பாம்பாட்டி கையில் விசமல்லாத பாம்பு உள்ளது .அதை தூக்கி விசிறி எறிந்தால் அனைவருமே ஓடி விடுகிறோம் . அதேபோல் ஒருவன் சாக்கடையில் எறிந்த கல் தன மேல்தான் சேர் விழும் என நினைத்து விட்டு விடுகிறோம் . ஆட்சியாளர்கள் எதை செய்தாலும் தட்டிகேட்கிற வேலையே விட்டு விடுகிறார்கள். இன்னொரு விடுதலை போராட்டம் வந்தால்தான் நம் நாடு உண்மையான சுதந்திரக் காற்றை அனுபவிக்க முடியும்
நீதிபதி ஐயா சொன்னது உண்மையென்றாலும் கொஞ்சம் கடுமையாகவே சொல்லியிருக்கிறார் என்றே எனக்குப் படுகிறது. நன்றாக படித்த ஒரு சராசரி இந்தியன் ஜாதி அல்லது மதம் விஷயத்தில் பாமரனாகவே இருப்பது ஒரு பெரிய குறை. நமது அரசியல் தலைவர்களில் பெரும்பான்மையோர் ஜாதி,மதம் வைத்து அரசியல் சித்து விளையாட்டுகள் விளையாடுவதை சரியாக வமர்சனம் செய்தவர் மார்கண்டைய கட்சு அவர்கள். சமீபத்தில் காலமான பால் தாக்கரே பற்றியும் அவரது சிவசேனா பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தவர். இருந்தாலும் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி கூட 'தமிழச்சாதி' என்று தமிழனுக்கு ஒரு புது அடையாளம் கொடுத்திருப்பதும் அதை வைத்துக் கொண்டு தமிழ் மொழியை மட்டுமே வளர்க்காமல் 'ஈழத்தமிழன்' பிரச்னையை வைத்து அரசியல் செய்யும் நம் தலைவர்களையும் அதற்க்கு துணை போகும் நம்மையும் முட்டாள்கள் என்பதைத் தவிர வேறு என்ன பெயரில் அழைப்பது.
நீதிபதிகள் , அரசு அதிகாரிகள் தங்களின் பதவியை விட்டு விலகிய பின் தான் சுதந்திரமாக பேசமுடியும் என்றாலும் எல்லோரும் பேசுவதில்லை ஒரு சிலர் தான் பேசுகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கட்ஜு அவர்கள் . சிறந்த தீர்ப்புகளை கொடுத்தவர் காவிரி பிரச்சனையை இரு மாநிலங்களும் ஒத்து கொண்டால் தீர்க்க முயற்சிப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். இன்று வரை ஒரு மாநிலமும் இது குறித்து ஒன்றும் தெரிவிக்கவில்லை. வல்லவரை பயன்படுத்தி கொள்ளுங்கள் நல்லது நடக்கட்டும் நாடு நன்மை பெறட்டும் வெறும் அரசியல் வாதிகளை நம்பித் தான் ஏமாந்து போய்விட்டோம் இப்படி ஓய்வு பெற்ற நேர்மையான நீதிபதிகள் அரசு அதிகாரிகள் அப்துல் காலம் போன்ற முன்னால் குடியரசு தலைவர் ஆகியோர் வழி காட்டுதலை வரவேற்போம்
வழக்குறிசராக இருக்கையில் பல முட்டாள்களை வைத்துதான் இவர் நீதிபதியானார் என்றால் கருத்துகளை கூறுவதால் மட்டுமே முட்டாள் தனம் போய் விடுவதில்லை. இந்த முட்டாள் தனம் போக நீர் என்ன செய்தீர், தான் சாதித்தவர் என்று நினைத்து உமக்கு முன்னால் இருக்கும் 90 சதவீதம் பேர் முட்டாள்கள் என்று கூறுவது அனர்தமானது உமது கருத்துகளை பகுத்தாய்வு செய்து கொள்வது உசித்தம்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.