சென்னை: ""எம்.ஜி.ஆர்., நினைவிடம், அரசு பராமரிக்கிற இடத்தில் உள்ளது. அதில் இரட்டை இலை இடம் பெற்றுள்ளது. இது பற்றி கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, அவசரப்பட்டு திறந்திருக்கலாம்,'' என, கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எம்.ஜி.ஆர்., நினைவிடம், அரசு பராமரிக்கிற இடத்தில் உள்ளது. அதில் இரட்டை இலை இடம் பெற்றுள்ளது.. ஓகே,ஓகே ஒத்துக்கொள்கிறோம்... ஆனால், நீங்கள் கொடுத்த இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி உங்கள் சொந்த பணத்திலிருந்து கொடுத்தது போல் உங்கள் படமும்,சின்னமும் இருந்ததே அனைத்து ரேஷன் கடைகளிலும், ஒரு ருபாய் அரிசிக்கான விளம்பர பலகையில், உங்கள் படமும் சின்னமும் இருந்ததே இதைத்தான் மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தல் பொன்குடம் என்பார்களோ? மக்கள் பணம் இப்படி வீணாகிறதே என்று கவலைபடுவதை விட்டு விட்டு, சின்னம் ரொம்ப முக்கியம்
இவ்வாறு நினைவிடங்கள் புதுப்பிக்கப்படுவதை யாரும் எதிர்க்கமாட்டார்கள். இது சம்மந்தமாக வழக்கும் நடந்துகொண்டிருக்கும்போது அவசரமாகத் திறந்திருக்கிறார்கள். அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் இதனைத் திறந்திருந்தால் யாரும் கேட்கப் போவதில்லை, யாருக்கும் அந்த உரிமையும் இல்லை. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் இந்நினைவகத்தில் ஒரு கட்சியின் சின்னமான இரட்டை இலையை நிறுவுவது கண்டிக்கத்தக்கது. தமிழகத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டார்களா? அல்லது தமிழகத்தில் வரி செலுத்துபவர்களெல்லாம் அ.தி.மு.க வினரா?
இவர் அமைத்த காளான் போன்ற தோற்றம் உடைய அந்த நினைவிடத்தை விட இந்த நினைவிடம் ஒன்று மோசமில்லை. இவர் நிறுவிய பல இடங்களில் உதய சூரியன் சின்னம் இல்லையா சென்னை . சைதாபேட்டையில் பொன் விழா வளைவோ ஏதோ ஒன்று உள்ளது. அதில் உதய சூரியன் சின்னம் இல்லையா? பாவம் கலைஞர், தன்னிலை மறந்து பேச ஆரம்பித்து விட்டார். இதோடு நிறுத்தி கொண்டால் அவருக்கு நல்லது.
நீ எதுக்கு தலைவா டென்சன் ஆயிட்டு....நாங்க (ஒட்டு மொத்த 7 கோடி தமிழர்களும்) ஆயுள் முழுக்க ராத்திரி பகல் கண் முழிச்சி, வெயில்ல காஞ்சி கருவாடாகி, வெந்து சுண்ணாம்பாகி, நொந்து நூடுல்ஸ் ஆகி, ஓடா தேஞ்சி, மாடா உழைச்சி, என்னன்ன வழியில (நேர்மையாக) கஷ்ட பட்டாலும் ஏழு ஏழு ஜென்மத்துக்கும் சம்பாதிக்க முடியாததை எல்லாம் இந்த மாதிரி அறிக்கை, உசுப்பி உடுறது, பொய், பித்தலாட்டம், தலயில மொழகாய் அரைக்கிறது அது இது ன்னு தில்லாலங்கடி வேலை செஞ்சி நீயும் உன் குடும்பமும் ஒத்தையா உலக பணக்காரனுகளுக்கு சவால் விடுற அளவுக்கு சம்பாதிச்சு கூட்டி வச்சிருக்க. அதை என்ஜாய் பண்றத விட்டுட்டு .. காலம் காத்தால.. அது இதுன்னு பொலம்பிக்கிட்டு. .....டோன்ட் ஒர்ரி ....பி... ஹேப்பி. ......
அண்ணா நினைவிடத்துக்கு ஒரு சட்டம் எம் ஜி ஆர் நினைவிடத்துக்கு ஒரு சட்டம். இதற்கு கருத்து சொல்ல அண்ணா தி மு க அடிமைகள் வரிந்து கட்டி கொண்டு வந்துருவாங்க. தலைமை செயலகத்தில் பண்ணினதெல்லாம் வேஸ்ட் என்று எழுதியவர்கள் மக்கள் வரி பணத்தில் இரட்டை இலை சின்னம் வைப்பது சரிம்பாங்க . தமிழ் நாடு சட்ட பேரவை விழாவில் தமிழ் நாடு முதல்வர் ஆங்கிலத்தில் பேசியதை பொருட்படுத்தாத தமிழ் மண்ணாச்சே. இவனுங்கெல்லாம் செம்மொழி மாநாட்டை பேச வந்துடுவாங்க.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.