சென்னை: "அண்ணாதுரை நினைவிடத்தை, 1.20 கோடி ரூபாய் செலவில், புனரமைப்பதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்; அதன்பின், புனரமைப்பு பணிகள் முடிந்ததா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:எம்.ஜி.ஆர்., நினைவிடத்தை, எட்டு கோடி ரூபாய் செலவில், புதுப்பித்து விட்டு, அதற்காக, ஓர் அழைப்பிதழ் கூட இல்லாமல், அவசர அவசரமாக முதல்வர் திறந்து வைத்துள்ளார். இதன் மர்மம் என்ன என்று புரியவில்லை. சட்டசபையில், அண்ணாதுரை நினைவிடத்தை, புதுப் பொலிவுடன், புனரமைக்க, 1.20 கோடி ரூபாயும், எம்.ஜி.ஆர்., நினைவிடத்தை, புனரமைக்க, 7.70 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.இதில், அண்ணாதுரை நினைவிடத்தைப் புனரமைத்தனரா? அதற்கான, பணிகள் முடிவுற்றதா? அது திறக்கப்பட்டு விட்டதா, இல்லையா என்பது பற்றி, எந்த விவரமும் இல்லை.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
ஆளும் கட்சியை பொருத்தவரை, ஜெயலலிதா புகைப்படத்தைத் தவிர யாருடைய புகைப்படமும், போஸ்டர்களிலோ, பேனர்களிலோ போடப்படுவதில்லை. ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் யாரும் தங்கள் புகைப்படங்களைப் போடக்கூடாது என்ற தடை உத்தரவு வேறு உள்ளது. தேர்தல் வரும் நேரங்களில் மட்டும் எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் ஒட்டுக்காகப் போடப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாவை யார் நினைவில் வைத்துக்கொள்வது. ஏதோ எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகில் இருப்பதால், அதற்கு 8 கோடி ஒதுக்கியபோது அண்ணா நினைவிடத்திற்கும் 1.20 கோடி ஒதுக்கப்பட்டது. அவ்வளவுதான்.
What contribution Anna has done to TN, except removal of congress govt? This has seriously affected TN progress. Has he done anything more than less known freedom fighters?...
என்னய்யா திடீர்னு அண்ணா மேல வழியுது? அண்ணா பேரை கூட உச்சரிக்க யோக்கியதை இல்லாத ஆளு நீங்க. அண்ணா தனக்கெனவோ தன் குடும்பத்திற்கெனவோ சொத்து சேர்க்காத உத்தமன். தன் குடும்பத்தினர் யாரையும் அரசியலுக்கு இழுக்காதவர். பொது காசு ஒரு பைசா கூட சுரண்டாதவர். அவர் சமாதியில் நிம்மதியாகத்தான் தூங்குகிறார். அவர் நிம்மதியை கெடுக்காதீறும். அண்ணாவின் பெயரை கொண்ட கட்சி அண்ணா சமாதியை விட்டுவிடுமா?
அம்மா அவர்களே, நீங்கள் திட்டமிட்டு, பணத்தின் ( மக்களின் வரிப்பணத்தை அறிந்து ) மதிப்பை உணர்ந்து எதனையும் கூட்டாக உணர்ந்து செயல்படுத்துவிர்கள் என்று எதிர்பார்த்தோம். பல ரிட்டையர்டு IAS அதிகாரிகள் உங்கள் மீது மிகந்த நம்பிக்கை வைத்தது, இப்போது நம்பிக்கை இழந்து உள்ளார்கள். நாங்களும், நம்பிக்கை வைத்துதான் ஓட்டு போட்டோம். கோடானுக்கொடி மக்கள் நம்பித்தான் ஓட்டு போட்டர்கள். சென்னையும், ஊட்டியை விட்டால், தழிழ் நாட்டிலே, வேறு ஊர்களே, தெரியாதா?. மின்சார பற்றாக்குறை, விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் வேதனை மற்றும் பல் வேறு பிரச்சினைகளில் தவித்துக்கொண்டு உள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டமாக சென்று,திட்டங்கள் என்ன பண்ண முடியும்,மற்றும் மக்களுக்கு ஆறுதல் சொல்லி,மின்சார பிரச்சினைகளை தீர்வு காண்பதை எடுத்துக்கூறி உங்களது எளிமையை உணர்த்துவது உங்களின் கடைமை அல்லவா? வானகரத்தில் பெருமைபீத்திக்கிற கூட்டம் இன்று தேவையா? அமைச்சர்களுக்கு அவங்களது துறையில தன்னிச்சையாக நீங்கள் செயல்படுத்த விடுவது கிடையாது என்பதை ,உங்களது பேச்சிலிருந்து உணர்வதை நீங்கள் உணர வேண்டும்.உங்களிடம் ,மிகுந்த செறுக்கு/ஆணவம் அதிகம் இருப்பதாக பல ஆங்கில பத்திரிக்கைகள் /நாளேடுகள் கூறியது நீங்கள் ஆரியவில்லையா?.பெங்களூர் சென்று வந்ததை எல்லோரும் பாராட்டி எழுதி உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இத்தனைக்கும்,சுப்ரிம் கோர்ட் போகச் சொன்னதுக்குதான்,நீங்கள் சென்று வந்தீர்கள்.அம்மா அவர்களே,நீங்கள், தமிழக அனைத்து மாவட்டங்களுக்கும், ஒரு விசிட் செய்ய வேண்டும்.அதுவும்,சாலை மார்க்கமாக, ஆடம்பரம் இல்லாமல் வெறும் பாதுகாப்பு கார்களுடன் சென்று வர வேண்டும்.விவசாயிகளுக்கு, ஆறுதல் சொல்ல வேண்டும்.மின்சாரப்பிரச்சினைக்கு மக்களுக்கும்,தொழில் செய்யும் சமுகத்துக்கும் ஆறுதல் சொல்ல வேண்டும்.பொது மக்களின் நல விரும்பியாக நீங்கள் இருக்க வேண்டும்.உங்கள் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும்.இல்லாவிட்டால் ,அது உங்களுக்கு ஆபத்துதான்.ஜால்ரா கோஷ்டியிடம் தள்ளி இருங்கள்.
மத்திய அரசில் மந்திரிகள வச்சிருக்கற நீங்க தமிழ் நாட்டுக்கு மின்சாரத்த கேட்கலாம்,காவிரிப் பிரச்சினையில் நேரம்யா மத்திய அரச நடக்கச் சொல்லலாம் ,இதெல்லாம் விட்டுட்டு ஒண்ணுக்கும் உபயோகமில்லாத சமாதிப் பிரச்சினைய இப்ப போய் பேசறீங்களே இது கொஞ்சம் ஓவரா தெரியலயா?
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.