Alzhakri alliged on his rebel | துரோகிகளை இயற்கை தண்டிக்கும் : அழகிரி "சாபம்' | Dinamalar
Advertisement
துரோகிகளை இயற்கை தண்டிக்கும் : அழகிரி "சாபம்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை:""ஆட்சியில் இருந்தபோது பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, இப்போது என்னை விட்டு விலகிச் சென்ற துரோகிகளை தண்டிக்க, இயற்கையிடம் பொறுப்பை விட்டு விடுவோம்,'' என, மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்தார்.மதுரையில், தி.மு.க., நகர் பொருளாளர் பாண்டியன் இல்லத் திருமண விழாவில், அவர் பேசியதாவது:மதுரைக்கு, 1980ல் வந்தேன். அப்போதிலிருந்து என்னுடன் இருப்பவர்கள் பலர். தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது உயர் அதிகாரிகள், நிர்வாகிகள் என, பதவி பெற்றனர். ஆட்சி மாறியதும், என்னை விட்டு விலகிச் சென்றனர், அதைப்பற்றி கவலைப்படவில்லை. தி.மு.க.,வில் இருந்து நடிகர் சிவாஜி, விலகிய போது, "எங்கிருந்தாலும் வாழ்க' என, அண்ணாதுரை கூறினார். நானும் அதையே கூறுகிறேன்.
மனிதனுக்கு பணம், பதவி முக்கியமில்லை. எவ்வளவு பணம் இருந்தாலும், இறந்தால் பிணம் தான். துரோகிகளுக்கு ஒருபோதும் புகழ் கிடைக்காது. அவர்களை தண்டிக்க, இயற்கையிடம் விட்டு விடுவோம். இப்படிப்பட்டவர்களை தேர்தலில் நிறுத்தி, கஷ்டப்பட்டு பதவியில் அமர வைத்தோம். ஆனால், வெற்றி பெற்ற பின், அவர்களில் சிலர், "என் சித்தப்பா, மாமாவால் தான் பதவி கிடைத்தது' என்கின்றனர்.மதுரையில், நான் இல்லாமல் எதுவும் நடக்காது.இவ்வாறு, பேசினார்.நிருபர்கள், அழகிரியிடம், "பரபரப்பாக பேசினீர்களே, பின்னணி ஏதும் உள்ளதா?' என, கேட்டபோது, "இப்போது தான் விதைத்திருக்கிறேன்; பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்.


அழகிரி ஆனந்தம்

"கிரானைட்' வழக்கில், அழகிரி மகன் தயாநிதிக்கு, நேற்று முன்ஜாமின் கிடைத்தது. இத்தகவலை, திருமண வீட்டில் அழகிரி பேசுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தெரிவித்தனர். அவர் பேசுகையில், "மணமகனும், தயாநிதியும் நண்பர்கள். முன்ஜாமின் கிடைத்த தகவலை, மணமகனிடம் தெரிவித்தேன். அவர் ஆனந்தக் கண்ணீர் விட்டார்' என்றார். அதை கூறும்போது அழகிரியின் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (107)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jazzravi - chandigarh,இந்தியா
15-டிச-201214:54:57 IST Report Abuse
Jazzravi என்ன பாஸ் பிரியாணி சாப்பிட வந்தவன்கல நம்பி ஏமாந்து போய்டீங்களா
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Gopal - Bangalore,இந்தியா
15-டிச-201211:57:38 IST Report Abuse
Gopal அந்த மூன்று பேரும் எவ்வளவு துடி துடித்து இறந்திருப்பார்கள். அவர்கள் குடும்பத்தினரின் கதறல், சோகம்... இதுமட்டுமல்ல... ஒரு நாள் இதெற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வரும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
14-டிச-201211:51:51 IST Report Abuse
p.saravanan அண்ணே எல்லா மேல இருகிறவ பாத்துகிருவா
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
amirtha raj - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
13-டிச-201217:55:10 IST Report Abuse
amirtha raj காலம் கலிகாலம் என்பது சரியாக தான் இருக்கிறது. காமடி பீஸ் எல்லாம் தத்துவம் பேசுகிறது.
Rate this:
0 members
0 members
27 members
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
13-டிச-201209:21:56 IST Report Abuse
Karthi கண்ணகி சாபம் மதுரையை எரித்தது, நம்ம அழகிரி சாபம் தி மு க வை எரித்துவிட போகிறது.
Rate this:
1 members
0 members
25 members
Share this comment
Cancel
sundar iyer - chennai,இந்தியா
13-டிச-201207:35:55 IST Report Abuse
sundar iyer இவருக்கு ஓட்டு போடாமல் இருந்தாலே நாம் இவரை தண்டித்து விட்டதாக இருக்கும்.
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
12-டிச-201210:31:42 IST Report Abuse
mirudan சாபம் விடவும் தகுதி தராதரம் வேண்டும். மனிதனுக்கு 30 வயது தாண்டினாலே முடி நரை விழ ஆரம்பித்து விடுகிறது 65 வயதிலும் தலைக்கு டை அடித்து கொண்டு திரியும் நோஞ்சாம் சிங்கம் முற்றும் துறந்த முனிவர் பாருங்க ?
Rate this:
1 members
1 members
47 members
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
12-டிச-201201:41:33 IST Report Abuse
jagan தலைவரே பாத்து.... இயற்கை நம்மள போட்டுட போகுது......
Rate this:
2 members
0 members
52 members
Share this comment
Cancel
iravi - Chennai,இந்தியா
12-டிச-201201:11:31 IST Report Abuse
iravi "இப்போதுதான் விதைத்திருக்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள்" இதே போன்ற ஒரு கூற்றை சமீபத்தில் வேறு ஒரு 'தலைவர்' கூறிக் கேட்ட நினைவு வருகிறதே ... இந்த ஒற்றுமையில் உள்குத்து ஏதும் உண்டோ?
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
11-டிச-201221:42:44 IST Report Abuse
rajan நீங்க துரோகிகள் என குறிப்பிட்டு சொன்னது தமிழின துரோகிகளையும் சேர்த்துதானே. அப்போ தான் உங்க வசை இலங்கை தமிழர் வரை ஒலிக்கும். ஏன்ன பாவம் ஒரு பக்கம் பழி இன்னொரு பக்கம்னா இந்த உதய சூரியன் தாங்க மாட்டான்.
Rate this:
3 members
1 members
33 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்