சென்னை: சென்னை, ராஜிவ் காந்தி சாலை, கந்தன் சாவடியில், இடதுபுறம் மேட்டில் ஏற முயன்ற லாரி ஒன்று, பாரம் தாங்காமல் பின்னால் நகர்ந்து வந்து, சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில், பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி,
கல்லூரியைச் சேர்ந்த, நான்கு மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும், மூன்று பேர் காயம் அடைந்தனர்.
திருப்போரூர் - தி.நகர்மாநகர பேருந்து, நேற்று காலை, 7:00 மணிக்கு, திருப்போரூரில் புறப்பட்டது. அடையாறு பணிமனையைச் சேர்ந்த இந்த பேருந்தை, அசோக்குமார் என்பவர்ஓட்டிச் சென்றார்.
பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் ஏராளமானோர் ஏறினர். செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், கண்ணகி நகர் மற்றும் பெருங்குடி பகுதிகளில் பலர் ஏறியதால், பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.இதனால், பத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி
மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.பயங்கரவிபத்து: ஆந்திராவில் இருந்து செங்கற்களுடன் வந்த, "டாரஸ்' லாரி ஒன்று, அதிக பாரத்தை ஏற்றியபடி, ராஜிவ் காந்தி சாலையில்சென்றது. கந்தன்சாவடியில் உள்ள, திருவேங்கடம் தெருவில் நடக்கும் கட்டுமானப்
பணிக்காக செங்கற்களை இறக்க, ராஜிவ் காந்தி சாலையில் இருந்து, ஜெயேந்திரா நகர் திருப்பத்தில், அணுகு சாலை மேட்டை கடக்க லாரி முயன்றது.
பாரம் தாங்காததால்,மேட்டில் ஏறிய லாரி,
திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பின் நோக்கி நகர்ந்து, ராஜிவ் காந்தி சாலைக்குவேகமாக வந்தது. அதேநேரம், அதிக கூட்டத்துடன், பேருந்து அந்த இடத்திற்கு வந்தது.
பின்னால் வந்த லாரி அதிவேகத்தில் அந்த பேருந்தின் மீது மோதியது. அப்போது, படியி பயணித்த பலரை, லாரியின் பின் பகுதிநசுக்கியது. லாரி ஓட்டுனர்
தப்பியோடி விட்டார்.
நான்கு மாணவர்கள் பலி: இந்தவிபத்தில், 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே நசுங்கி பரிதாபமாக இறந்தனர். பலத்த காயமடைந்த, நான்கு பேர், உடனடியாக அருகில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவர் வழியிலேயேஇறந்தார்.தகவல் அறிந்து, தென் சென்னை இணை கமிஷனர் திருஞானம், அடையாறு துணை கமிஷனர் சுதாகர்
உள்ளிட்டோர், சம்பவஇடத்தில் விசாரணை நடத்தினர்.விபத்தில் சிக்கி உயிரிழந்த, 4 பேரின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். பலத்த காயமடைந்த, மூன்று பேர், மேல் சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தலைமறைவான லாரி ஓட்டுனரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜிவ் காந்தி சாலை,கந்தன் சாவடி, ஜெயேந்திரா நகரில், அணுகு சாலையைக் கடக்க இடதுபக்கம் திருப்பம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த திருப்பம், பராமரிப்பின்றி மேடாகக் காட்சியளிக்கிறது. அணுகு சாலைக்காகப் பதிக்கப்படும் ஏராளமான கான்கிரீட் கற்கள், ராஜிவ் காந்தி சாலை முதல் சிதறியே கிடக்கின்றன.அதிக பாரத்துடன் வந்த லாரி: செங்கற்களை ஏற்றிச்செல்லும் லாரி, அதிகபட்சமாக, 6,000 செங்கற்களை மட்டுமேஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த லாரி, "டாரஸ்' வகையைச் சேர்ந்தது என்பதால், கூடுதலாக, 6,000 என, மொத்தம், 12
ஆயிரம் செங்கற்களை, அனுமதியின்றி ஏற்றிவந்ததாகக் கூறப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து வந்து உள்ள இந்த லாரி, பல சோதனைச்சாவடிகளை கடந்து வந்தாலும், ஆங்காங்கே, போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசாருக்கு,"மாமுல்' கொடுத்தே, முறைகேடாக அதிக சரக்குகளை ஏற்றி வந்துள்ளனர்.லாரியில்ஓட்டுனர் உள்ளிட்ட, ஆறு பேர் இருந்துள்ளனர். அதில், மூன்று பெண்கள் உள்ளிட்ட, 5 பேர் செங்கல் இறக்குவோர். விபத்து நிகழ்ந்தவுடன், ஆறு பேரும் தலைமறைவாகி உள்ளனர்.
விபத்தில் இறந்தவர்கள் யார்
பெருங்குடி, வீர வாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்த கோவிந்தன்என்பவரது மகன் சேகர், 18. இவர்,
நந்தனம் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில், பி.காம்., படித்து வந்தார்.பெருங்குடி, செம்பொன் நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் மனோஜ்குமார், 18. இவர், தரமணி, சி.பி.டி., பாலிடெக்னிக்கில், இரண்டாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் மற்றும்எலக்ட்ரானிக் பிரிவில் படித்து வந்தார்.செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பு, 91வது தெருவைச் சேர்ந்த லட்சுமிஎன்பவரது மகன் பாலமுருகன், 16. இவர், தி.நகரில் உள்ள, எம்.சி.என்., பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்த உதயசங்கர் என்பவரது மகன் விஜயன், 16, சாந்தோமில் உள்ள, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்த இவர், மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.
காயமடைந்தோர் யார்
செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் யாபேஷ், 14. இவர், சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்த பார்த்திபன், 18. இவர், தரமணி, சி.பி.டி., பாலிடெக்னிக்கில், 2ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார்.துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 15. இவர், தி.நகர், எம்.சி.என்., பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புட்போர்டு பிரயணத்திற்கு முற்றிலும் தடை போட வேண்டும்.
அரசாங்கம் ஸ்போட் பைன் போடவேண்டும்.
மாமுல் வாங்காமல் சட்டத்தை 365 நாட்களும் கடை பிடிக்க வேண்டும். மெல்ல மெல்ல அனைவரும் சட்டத்தை கடைபிடிக்க ஆரம்பித்து விடுவர்.
10 -15 நாட்கள் சட்டத்தை கடைபிடித்து விட்டு பின் சட்டத்தை மாமுல் வாங்க பயன்படுத்தும் நிலை இருக்கும் வரை, என்ன சட்டம் போட்டாலும் கதைக்கு ஆகாது.
வேணும்னா எழுதி வச்சுக்கங்க.... கொஞ்ச நாள் மட்டும் ரொம்ப ஸ்ட்ரிக்டா ரூல்ஸ் கடைபிடிப்பாங்க... அப்புறம் மறுபடி இதே மாதிரி தொங்கிட்டுப் போவானுக பசங்க... அப்புறம் மறுபடி ஒரு விபரீத விபத்து.... இதுக்கெல்லாம் தீர்வு இன்னும் அதிகமான பேருந்துகள் விடனும்... என்னதான் விட்டாலும், நம்ம சேட்டைப் பசங்க "தொங்கிட்டுப் போயி தன்னோட ஆளுகிட்ட வீரமான ஆம்பலேன்னு " பெறேடுக்கணும்..." என்னமா தொங்கிட்டுப் போரடா ராசா... உன்னோட தில்லே தில்லு" ன்னு யாராச்சும் பெருமை படுத்தனும், .. இந்தப் போக்கு மேலோங்குகிற வரைக்கும் பஸ் கண்டக்டரோ , டிராபிக் போலீசோ அல்லது வேறுவிதமான சட்டங்களோ ஒன்றும் செய்யமுடியாது.. திருடனாகப் பார்த்து திருந்த வேண்டும் என்று சொல்வது போல மாணவர்களாகப் பார்த்து திருந்தினாலே ஒழிய இந்த விபரீதப் பயணத்திற்கு விடிவு பிறக்காது..
விமர்சனம் ஈசி, நடைமுறையில் ரொம்ப ரொம்ப கஷ்டம் . எல்லா ஊரிலும் இது நடக்கிறது எல்லா நாட்டிலும் இது போன்ற விபத்துக்கள் நடக்கின்றன. சுய கட்டுப்பாடு ஒன்றே இதற்க்கு முடிவு . சென்னையில் பிப்ரவரி முதல் ஜூன் வரையில் கதவை பூட்டிக்கொண்டு பஸ்சில் போவது எவ்வளவு கொடுமை என்பதை இங்கு இருப்பவங்கள் மட்டுமே உணர்வார்கள் . விமர்சனம் தவிர்ப்போம் . சுய கட்டுப்பாட்டை பழக்குவோம் . நன்றி.
மாணவர்கள் இனியாவது படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை தவிர்த்தல் நலம். ஆபத்து எந்த நேரத்திலும் வரலாம். நாம் பாதுகாப்பாக பயணம் செய்தாலும் ஆபத்து நேரிடலாம். ஆனால் நாமே வலிய சென்று தலையை கொடுத்த உயிரை இழந்து விட கூடாது. இந்த நாடு சீர்கெட்டு விட்டது. லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இனி எந்த அரசு அதிகாரியிடமும் ஊழியரிடமும் எஹ்த வித ஒழுக்கமும் நேர்மையும் எதிர்பார்க்க முடியாது. காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை மட்டுமல்லாது எல்லா அரசு துறைகளுமே லஞ்ச பணத்தில் கண்ணை மூடி கொண்டு மக்கள் உயிருடன் விளையாடுகிறது. இந்த விபத்தில் போக்குவரத்து காவல் துறையினரின் அலட்சியம் மற்றும் ""மாமூல்"" நடவடிக்கை கண்கூடாக தெரிகிறது. ஆனால் யார் மேலும் எந்த நடவடிக்கையும் இருக்காது. நாம் தான் விழிப்புணர்வுடன் இருந்து நம்மை நாமே காத்து கொள்ள வேண்டும். கூடியவரை மாணவர்கள் பெரியவர்கள் கூறும் அறிவுரையை ஏற்க வேண்டும். அது அவர்கள் எதிர்காலத்திற்கு தான் நல்லது. ஒரு CHANCE எடுக்க உயிர் ஒன்றும் சாதாரண விஷயம் இல்லையே....?
படிக்கட்டு பயணம் ஆபத்தானது.,,,சட்டத்துக்கு புறம்பானது. ...அளவுக்கு மீறி லாரியில் செங்கல் கொண்டு வந்ததும் சட்டத்துக்கு புறம்பானது. ...சட்டம் இருக்கிறது. அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்....வாழ்க்கையை .....சூதாடும் விளயாட்டாக எடுக்காமல்...விபரீதம் நடந்துவிட்டால் என்ற எண்ணம் ...வர வேண்டும். சக்தீச்வரன் குறிப்பிட்டது போல நிரம்பி வழியும் சென்னையின் சுமையை குறைத்து மக்களின் வசதிக்ககா துணை நகரம் உருவாக்கலாம் . அது சென்னைக்கு பக்கத்தில் இருக்க கூடாது. ...மாணவர்களுக்கு நன்னடத்தைகளை பெற்றோர்கள் போதித்து வளர்க்க வேண்டும். கிடைத்தற்கரிய வாழ்க்கையை முடிந்த அளவு காப்பது நமது கையில் தான்...காவலர்கள் ...இந்த லார்யை வழி மறித்து கைக்கூலி பெற்று ஓட விட்டிருந்தார்கள் என்றால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விபத்து நடந்த பிறகு ஒவ் ஒருவரும் மற்றவர் மீது குறை சொல்லி தப்பிப்ப பார்ப்பார்கள். எனவே மாமுல் வாங்கிகொண்டு அந்த லாரியை அனுப்பிய புண்ணியவான்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து அந்த லாரி டிரைவர், உரிமையாளர் மீது நடவடிக்கை. பின்பு இறந்து போன மாணவர்கள் குடும்பத்துக்கு நஷ்ட்ட இடு
கொடுக்க ஏற்பாடு செய வேண்டும். இன்சூரன்ஸ் கம்பெனி கொடுப்பார் என்று விட்டுவிட கூடாது. காரணம், கேசு முடிய 6 வருடங்கள் கூட ஆகலாம். அப்படியே முடிந்தாலும் ரூபாய் 30000 / மேல் கிடைக்க வாய்ப்பு கம்மி. அடுத்து எல்லா வண்டிகளுக்கும் ரோடு டக்ஸ் எதுக்கு வாங்குறாங்க? கொஞ்சமாவது ரோட போட வேண்டாமா? ரோடு ஒழுங்காக இருந்து இருந்தால் இந்த விபத்து பகலில் நடந்திருக்க வாப்பு இல்லை. சம்பந்த பட்ட அதிகாரிகள் தங்கள் வீட்டு பையன் அல்லது உறவுகார பையன் இறந்தது போல் எண்ணி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தொகிதி MLA மற்றும் கவுன்சிலர் அந்த குடும்பங்களுக்கு ஆறுதலும் இடைகால பண உதவியும் செய்தால் அவர்களுக்கு சிறுது ஆறுதல் கிடைக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.