திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் அருகே, அனாதையாக விடப்பட்ட, நான்கு மாத பெண் குழந்தை, நேர்த்திக் கடனாக செலுத்தப் பட்டிருக்கலாம் என்ற தகவலால், பரபரப்பு நிலவுகிறது.திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 9:00 மணியளவில், கோவிலின் மாவிளக்கு மண்டபத்தில் உள்ள உண்டியல் முன், பிறந்து நான்கு மாதமே ஆன, ஒரு பெண் குழந்தை, அனாதையாக கிடந்தது. அக்குழந்தையை, கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் ஒப்படைத்தனர்.கோவிலில் பலமுறை, "மைக்' மூலம் அறிவிப்பு செய்தும், யாரும் குழந்தையை பெற முன்வரவில்லை. இதையடுத்து, சமயபுரம் போலீசில் ஒப்படைக்கப்பட்ட குழந்தை, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர்; மருத்துவமனையிலேயே குழந்தை பராமரிக்கப்படுகிறது. சமயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்."நீண்ட நாள் குழந்தை இல்லாத தம்பதியர், குழந்தை பிறந்தால், அம்மனுக்கே குழந்தையை நேர்ந்து விடுவதாக, வேண்டுதல் செய்வர். குழந்தை பிறந்தவுடன், அம்மனிடம் நேர்ந்து விட்டு, மீண்டும் குழந்தையை தத்து வாங்கிக் கொள்வர்.
இந்த நடைமுறை தெரியாதவர்கள், அம்மனுக்கு நேர்த்திக் கடனாக குழந்தையை உண்டியல் அருகே விட்டுச் சென்றிருக்கலாம் என, சில பக்தர்கள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எந்த தாயும் பத்து மாதம் சுமந்து தான் பெற்ற குழந்தையை இப்படி செய்ய மாட்டாள்...அது போல செய்ய யாருக்கும் மனதும் வராது....இதை பார்த்தால்....சாப்பிடவே வழி இல்லாத குடும்பம் ...குழந்தையும் வய்து யபடி பிழைப்பது என்ற ஒரு வேதனையில் ...இப்படி நடந்திருக்கும் யன்று தோனுகிறது ....அவளும் அதே கோவிலில் இருந்து பார்த்து இருபால் அந்த குழந்தையை யார் யடுத்து சென்றார் யன்று ... ????
பிறந்த குழந்தையை இப்படி அனாதையாக ஓர் பொது இடத்தில் போட்டுவிட்டு செல்கிற இந்தமாதிரி ஈன ஜென்மங்கள் எப்படி பத்து மாதங்கள் பொறுமையாக வயிற்றில் சுமந்து திரிந்தன என்கிற ஓர் ஆச்சர்யம் எப்போதும் எனக்குண்டு... துயர்களும் சங்கடங்களும் வறுமையும் பொருளாதார பலவீனங்களும் இவ்விதமாகவெல்லாம் கூட நடப்பதற்கு தூண்டுகோலாக அமைந்து விடுவதுண்டு... இதற்கெல்லாம் லட்சம் கோடி சாமிகள் வந்தாலும் காப்பாற்ற முடியுமென்றே தோன்றவில்லை..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.