alligation aginst walmart to give 125 core to USA Mps | ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட கட்சிகளுக்கு கவனிப்பு?: அமெரிக்க எம்.பி.,க்கள் மூலம் காய் நகர்த்தியது "வால்மார்ட்'| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (133)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை எதிர்த்து, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்த போது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க, சில அரசியல் கட்சிகள், "கவனிக்க' பட்டதாக, புகார் கிளம்பியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த, "வால்மார்ட்' நிறுவனம், அந்நாட்டு எம்.பி.,க்கள் மூலமாக, இந்தப் பிரச்னையில், காய் நகர்த்தி சாதித்ததாகக் கூறப்படுகிறது.

சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை சமீபத்தில், மத்திய அரசு அனுமதித்தது. இதை எதிர்த்து, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, தி.மு.க., மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆதரவுடன் தோற்கடிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த, "வால்மார்ட்' நிறுவனம், அந்நாட்டு செனட் சபையில், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில், "இந்தியாவில் சில்லரை வர்த்தக சந்தையில் முதலீடு செய்வது உட்பட, பல்வேறு பிரச்னைகளில், அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கைகளுக்காக, 2008ம் ஆண்டு முதல், எங்கள் நிறுவனம், 125 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த விவகாரத்தை, நேற்று ராஜ்ய சபாவில், பூஜ்ஜிய நேரத்தில், பா.ஜ., - எம்.பி., ரவிசங்கர் பிரசாத் எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:
நம் நாட்டில், சில்லரை வர்த்தக சந்தையில், நுழைவதற்காக, "வால்மார்ட்' நிறுவனம், ஏராளமான பணத்தை செலவிட்டுள்ளதாக தெரிகிறது என, நாங்கள் ஏற்கனவே அச்சம் தெரிவித்தோம். அது தற்போது, உண்மை என, நிரூபணமாகியுள்ளது.நம் நாட்டில், ஒரு பிரச்னைக்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களின் ஆதரவை பெறமுற்படுவது, சட்டவிரோதம்; அப்படி பெற முயன்றால், அது லஞ்சம் கொடுப்பது போலாகும். இந்திய சந்தையில்,

நுழைவதற்காக, பல கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக, "வால்மார்ட்' நிறுவனம் கூறியிருக்கிறது; அப்படியெனில், அது லஞ்சமே.இந்த லஞ்சத்தை பெற்றவர்கள் யார் என்பதை, மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இந்தப் பிரச்னையால், சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதித்தது குறித்தே, கேள்வி எழுகிறது.இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி பேசுகையில், ""யார் பணம் பெற்றனர் அல்லது பெறவில்லை என, நாங்கள் சொல்லவில்லை; வால்மார்ட் நிறுவனமே பணத்தை செலவிட்டதாக சொல்கிறது. இது ஊழலுக்கு சமமானது. எனவே, இதுபற்றி அரசு விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.இவர்களுக்கு ஆதரவாக, மம்தாவின் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த, பந்தோபாத்யாய், மார்க்சிஸ்ட் எம்.பி., ராஜீவ் ஆகியோரும் குரல் கொடுத்தனர். "இந்த விவகாரத்தில், நடந்த சம்பவம் தொடர்பாக, தனியாகவிசாரணை நடத்த வேண்டும், அத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; சபையில் பதில் அளிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

இந்தியாவில், சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கச் செய்ய, அதற்காக, அரசியல்வாதிகளின் ஆதரவை திரட்ட, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் கொண்டு வந்த தீர்மானத்தை தோற்கடிக்கச் செய்யவும், இங்குள்ள சில கட்சிகளை, அமெரிக்காவின், "வால்மார்ட்' நிறுவனம், கணிசமாக, "கவனித்திருக்கலாம்' என, நம்பப்படுகிறது. தங்கள் நாட்டு எம்.பி.,க்களின் உதவியோடு, இதைச் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (133)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
15-டிச-201223:16:42 IST Report Abuse
dori dori domakku dori நாம ஆளுங்களோட சேர்ந்து 1 வருடம் வியாபாரம் பண்ணட்டும் , அப்புறம் அமெரிக்காவில " கண்சுமருக்கு" அழுகின தக்காளிய நைசா தள்ளி விடுவான் பாருங்க . இங்கே இவனுங்கள அனுமதிகிரதால , அமெரிக்காவுக்குதான் ரியல் ஆப்பு .
Rate this:
Share this comment
Cancel
rahma, chennai - chidambaram,இந்தியா
15-டிச-201220:23:51 IST Report Abuse
rahma, chennai வணிகம் செய்ய வந்த வெள்ளைகாரனை விரட்ட ஆரம்பிக்கப்பட்டது தானே காங்கிரஸ். சுதந்திரத்திற்காக எவ்வளவு கஷ்டப்படுள்ளார்கள் நம் தேசத் தலைவர்கள். மீண்டும் அடிமைப் பட்டு விடுவோமோ என நினைக்கத் தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Krishnan Nallalagu - s.tuas ,சிங்கப்பூர்
15-டிச-201218:23:22 IST Report Abuse
Krishnan Nallalagu திருடர்களை தேர்வு செய்து தவறு செய்தது நாமே .முதலில் நம்மை நாம் திருத்திக்கொள்வோம் .அடுத்த தேர்தல் வரும் நினைவில்கொண்டு தேர்வு செய்வோம் .இல்லையேல் எந்த அரசியல் கட்சியையும் நம்பாமல் கருத்துக்களை தெரிவிப்பதோடு நில்லாமல் நண்பர்களே ஒரு மக்கள் புரட்சிசெய்ய ஒன்றினைவோம் .அமைதியான மக்கள் புரட்சி ஒன்றே இந்தியாவை விடிவுபாதைக்கு இட்டுச்செல்லும் .இந்தியாவில் இருக்கும் மொத்தக்கட்சியும் ஒருவகையில் திருடர்கள்.சிந்தனை செய்வீர் .அமைதியான அரசியல்கட்சிகளுக்கு எதிரான மக்கள் புரட்சியும் விலைக்கு ஓட்டை விற்க்காத மக்கள்சக்தியுமே இந்தியாவை மாற்றமுடியும்
Rate this:
Share this comment
Cancel
Warran Blessing - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
15-டிச-201208:55:53 IST Report Abuse
Warran Blessing கடமையை செய்வதற்கு லன்சம் .
Rate this:
Share this comment
Cancel
jayabalan - chennai ,இந்தியா
15-டிச-201205:23:44 IST Report Abuse
jayabalan அரசுக்கு ஆதரவா செயல் படறது எல்லாம் இருக்கட்டும். மத்திய அரசு ஆரம்பித்தது என்ன காரணம்? எதோ வால்மார்ட் பொழைச்சு போகட்டும்னு தாயுள்ளத்தோடு ஆதரிச்சாகளோ?
Rate this:
Share this comment
Cancel
SURA - Aruppukottai,இந்தியா
14-டிச-201200:05:32 IST Report Abuse
SURA நாம இங்கே கூவி கூவி என்ன ஆக போகுது...... ஒட்டு போடும்போதே யோசிக்கணும்..... காசு வாங்கீட்டு போட்டா அப்பிடித்தான் நடக்கும் ..... என்ன நான் சொல்றது சரியாண்ணே ?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-டிச-201208:45:39 IST Report Abuse
Pugazh V மேலும் இங்கே கருத்து சொல்லியிருக்கும் பலரும் அன்னிய நாட்டானுக்கு சேவகம் பண்ணி ஜீவிக்கிரவர்கள் தான். அவர்களுக்கு உள்ளூர் இடைத் தரகர்கள் செய்யும் அநியாயம், உள்ளூர் ஏஜென்ட்டுகள் விவசாயிகளிடம் அடிக்கும் கொள்ளைகள் பற்றித் தெரிய வாய்ப்பில்லையே. பாயன் மோகம் பிடித்தலையும் இந்தியர்கள் வால்மார்ட்டிர்க்குப் போகாமல் இருந்தாலே அவன் கடையைப் பூட்டிக் கொண்டு போய் விடுவார்களே. ஆனால், நம் நண்பர்கள் எப்படா பாரின் திங்க்ஸ் கிடைக்கும் என்று அலைபவர்கள் தானே.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-டிச-201208:42:49 IST Report Abuse
Pugazh V தூத்துக்குடிக்காரன் கூட, கேவலம் உப்பு கூட சூப்பர் மார்க்கெட்டில் டாட்டா, ஆஷிர்வாத் சால்ட் தான் வாங்குகிறான். இந்திய விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்காகப் பேசுகிறார்களாம். இங்கே வரிந்து கட்டிக் கொண்டு வாய் கிழியப் பேசுபவர்கள் எல்லோருமே, வால்மார்ட் வந்ததும் வண்டியை எடுத்துகிட்டு அங்கே குடும்பத்தோடு போய் மளிகை சாமான் வாங்கத்தான் போகிறார்கள், பார்க்கத்தான் போகிறோம். அமெரிக்க செனட் உறுப்பினர்களுக்கு வால்மார்ட் லஞ்சம் கொடுத்ததற்கு கலைஞரையும் காங்கிரசையும் வசை பாடுவதில் அடிப்படையே இல்லையே. பில்டிங்கும் ஸ்ட்ராங் இல்லை, பேஸ்மென்ட்டும் வீக்கா இருக்கே....
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
12-டிச-201214:03:21 IST Report Abuse
GUNAVENDHAN மத்தியில் இருந்து சோனியாவின் தூதராக குலம் நபி வந்தபோது கூட முடிவை சொல்லாமல் ,ஓட்டெடுப்பின் போது தான் முடிவு செய்வோம் என்று மஞ்சள் துண்டு அறிவித்தபோதே ஏன் இன்னமும் இழுத்தடிக்கிறார் என்று இருந்தது. இப்போது தான் ஏன் இழுத்தார் என்பது புரிகின்றது . வால்மார்டிடம் இருந்து பண பட்டுவாடா கடைசி நிமிஷத்தில் நடக்கும் என்பது வாங்கி வாங்கி பழக்கப்பட்டவருக்கு தெரிந்துள்ளது. பட்டுவாடா செய்யப்பட்டதும், வாங்கியதற்கு சரியாக நடந்துக்கொண்டுள்ளார் போலிருக்கின்றது. இந்தியாவிலேயே மோசமான அரசியல்வாதிகள் என்று பட்டியலிட்டால், கருணா, மாயாவதி, முலாயம் மூவரும் முதலில் வருவார்கள். எவ்வளவு மோசமான ஜென்மங்கள், மக்களை பற்றி கவலையே இல்லாமல் கோடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். பாவம் மக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Prasath Prasanna - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-201213:47:53 IST Report Abuse
Prasath Prasanna அன்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பனியை அனுமதித்ததால் 300 வருடம் அடிமையாக இருந்தோம். அன்று நமக்கு போதிய படிப்பறிவு இல்லை அதனால் ஏமார்ந்து விட்டோம். ஆனால் இன்று ??? யோசிப்போம் ,நல்ல முடிவை எடுப்போம் { பகுத்துண்டு வாழ்வோம் )
Rate this:
Share this comment
Ramesh Venkataswamy - Chennai,இந்தியா
13-டிச-201204:50:17 IST Report Abuse
Ramesh Venkataswamyஇந்த வால்மார்ட் அனுமதித்ததால் நாம் சீனா நாட்டிற்கு அடிமையாக போகிறோம், காரணம் எல்லாம் சீனா நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய போகிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.