நிசாமாபாத்: தெலுங்கானா விவகாரத்தில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என சந்திர சேகரராவ் கூறினார். தெலுங்கானா குறித்து விவாதிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ,வரும் 28-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சித்தலைவர் சந்திர சேகரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:தெலுங்கானா கோரிக்கையில் சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையில் தெலுங்கானா தனிமாநில கோரிக்கையில் அக்கறை இருந்தால் அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் தெலுங்கானா மக்கள் இரு கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.