2030ல் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

வாஷிங்டன்: வரும் 2030ம் ஆண்டில் இந்தியா பொருளாதார வல்லரசாக இருக்கும் எனவும், சீனாவை மிஞ்சி உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் எனவும் அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட முடியாது. தற்போது பொருளாதாரத்தில் இந்தியாவை விடசீனா முன்னிலையில் இருக்கலாம். ஆனால் இந்தியாவுக்கான வாய்ப்பு 2015ம் ஆண்டு வருகிறது. வரும் 2030ம் ஆண்டிற்கு பிறகு, ஆசியாவிற்கே தூண்டுகோலாக இருக்கும் இந்தியா, சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல் உலக அதிகாரமுள்ள நாடாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அமெரிக்க உளவு நிறுவனம் குளோபல் டிரென்ட் 2030 என்ற தலைப்பின் கீழ் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் பற்றிய பேச்சே இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.

வரும் 2020ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவில் அதிகம் பேர் இந்தியர்களை விட மூத்தவராக இருப்பர். அந்த காலகட்டத்தில் சீனாவின் பொருளாதாரம் குறைய துவங்கும் நேரத்தில், இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும் இந்தியாவை விட முன்னணியில் இருக்கும் சீனா, 2030ம் ஆண்டிற்கு பின் இந்த நிலை மாறும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க துவங்கும் நேரத்தில் சீனாவின் வளர்ச்சி குறையும். 2030ம் ஆண்டில் இந்தியா பொருளாதாரத்தின் வல்லரசாக இருக்கும். சீனாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 8 முதல் 10 சதவீதம் வரை உள்ளது இது குறைய துவங்கும்.

தற்போது சீனாவில் உச்சத்தில் இருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையும். 2030ம் ஆண்டில் 994 மில்லியன் தொழிலாளர்களிலிருந்து 961 மில்லியனாக குறையும். அதேநேரத்தில், இதற்கு மாறாக இந்தியாவில் 2050ம் ஆண்டு வரை வேலை பார்ப்போர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருப்பதற்கு சாத்தியமில்லை. இந்தியர்களுக்கு தற்போது நடுத்தர வயதாக 26 இருக்கிறது. இது 2030ம் ஆண்டில் 32 ஆக இருக்கும். இது தற்போது பொருளாதாரத்தில் முதல் 10 இடங்களில் இருப்பதை விட குறைவாகும்.

2030ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில், நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் நுகர்வோராக இருப்பார்கள். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைவிட அதிகமானது. ஆனால் இந்தியா மற்றும் சீனா நாடுகள் அடிப்படை தேவைகளான உணவு, தண்ணீர் மற்றும் எரிசக்தி பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை எனறால், ஒட்டு மொத்த வருமானத்தில், நடுத்தர வருமானம் உடையவர்கள் தொடர்பான பிரச்னையில் சிக்க வாய்ப்புகள் உள்ளது. பொருளாதார தொடர் வளர்ச்சியை தொடர அறிவியல் துறைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (85)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jaleel - singapore,சிங்கப்பூர்
16-டிச-201204:33:30 IST Report Abuse
jaleel 2012.இல் நல்ல comedy
Rate this:
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
15-டிச-201223:09:50 IST Report Abuse
dori dori domakku dori இந்த பீலாவ ரொம்ப நாளா நாங்களே வுடுகுரோமே , நீ வேறே அடிஷனலா கோஷ்டி கானம் பாடற
Rate this:
Share this comment
Cancel
Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்
15-டிச-201214:44:10 IST Report Abuse
Sakthi Parthasarathy இந்த அறிக்கை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சிண்டு முடிவதைபோல் உள்ளது. ஏன் அவர்கள் அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்யவில்லை. இது போன்ற அறிக்கைகளால் சீனா நம்மை கண்டு பொறாமை கொண்டு நமக்கு இடையூறு செய்ய தூண்டவே சூழ்ச்சி செய்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Saravanan Chinniah - Lexington,யூ.எஸ்.ஏ
15-டிச-201204:32:44 IST Report Abuse
Saravanan Chinniah சத்தியமா நடக்காது.. பூரம் பொய்யா சொல்றாய்ங்க....
Rate this:
Share this comment
Cancel
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
14-டிச-201210:36:26 IST Report Abuse
Balamurugan Balamurugan 1500 வருடங்களுக்கு முன்னால் பாரதம் உலகில் ஆதிக்கம் செலுத்தியது என்பதே இன்று நாட்டில் வாழும் மக்களுக்கு தெரியாது மக்கள் அதை தெரிந்துகொள்ள வேண்டும் .மேலும் தேசபக்தி உள்ள பிஜே பி கட்சி நாட்டை ஆளவேண்டும்
Rate this:
Share this comment
mahasum - chennai,இந்தியா
16-டிச-201209:31:58 IST Report Abuse
mahasum1500 முன் யார் இந்தியாவை ஆண்டது brother...
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
13-டிச-201209:58:28 IST Report Abuse
தமிழ் குடிமகன் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டன்கப்பா ........................
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-டிச-201214:20:38 IST Report Abuse
Nallavan Nallavan ஹி...ஹி...ஹி....வால்மார்ட்டைத் தொறந்து விட்டதுக்கு .......
Rate this:
Share this comment
Cancel
Ding Tong - Thiruchy,இந்தியா
12-டிச-201214:11:23 IST Report Abuse
Ding Tong பெட்ரோல் இறக்குமதியாகிறது. சர்க்கரை, டிசல், மண்ணெண்ணெய் சில சமயங்களில் வெங்காயம் கூட பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகிறது. ஆனால் செயற்கையாக தட்டுபாட்டை உருவாக்கும் இடைத்தரகர்களே இப்போது கூப்பாடு போடுபவர்கள். 8 ரூபாய் விற்ற வெங்காயம் 80 ருபாய் ஆகும், எப்போது தட்டுப்பாடு உள்ள நாட்களில். ஆனால் சீனாவிலிருந்து வந்தால் 80 காசு. ஆனாலும் ஆச்சிரியபடுவதற்கு இல்லை. அதனால் இங்குள்ள வெங்காய விவசாயி பாதிக்க படுவான் என்பதுதான் இப்போதைய குற்றசாட்டு. ஆனால் இப்பொழுதும் 8 ரூபாய் விற்றாலும் 80 ரூபாய் விற்றாலும் விவசாயிக்கு கிடைப்பதென்னவோ 80 காசுகள் தான். கொள்ளையடிப்பது எல்லாம் இடை தரகர்களும் பெரு சிறு வணிகர்களுமே. அந்நிய முதலிடு நாளை வந்து நசுக்க போவதாக புலம்புவர்களே இன்றே என் விவசாயியை நசுக்கி கொண்டிருக்கும் இவர்களை என்ன செய்தீர்கள். நம்முடைய நாடு விவசாய நாடு விவசாயின் வயிற்றில் அடித்துவிட்டு நாடு முன்னேறும் என்று எதிர்பார்ப்பது பகல்கனவே.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
12-டிச-201213:23:44 IST Report Abuse
Ravichandran கேட்க இனிப்பா, சுகமா, அருமையா இருக்கு. எங்கள வச்சி காமெடி கீமாடி பண்ணலியே.
Rate this:
Share this comment
Cancel
Khalid T.M. - Dammam,சவுதி அரேபியா
12-டிச-201212:16:59 IST Report Abuse
Khalid T.M. இந்தியர்களின் மனோபாவத்தை நன்றாக புரிந்து வைத்துகொண்டு, எதையோ சாதிப்பதற்காக இந்த அறிக்கையை வெளியிட்டுருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்