நீதிபதி எச்சரிக்கை ; சசிகலா ஆஜர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு: "சொத்து குவிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, கோர்ட்டில் ஆஜராகா விட்டால், "வாரன்ட்' பிறப்பிக்கப்படும்' என, சிறப்பு கோர்ட் நீதிபதி, பாலகிருஷ்ணா, நேற்று முன் தினம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கோர்ட்டில் சசிகலா நேற்று ஆஜரானார்.

தேவையற்ற ஆவணங்களை தரும்படி, அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, "வரும், 19ம் தேதியிலிருந்து, சசிகலாவிடம் கேள்விகள் கேட்கும் பணி துவங்கும்' என, அறிவித்தார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, பெங்களூரு சிட்டி சிவில் சிறப்பு கோர்ட்டில், நேற்று நடந்தது.

சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக, பறிமுதல் செய்யப்பட்டதில், தேவையற்ற, 60 ஆவணங்களை, திருப்பி தரும்படி, சசிகலா தரப்பில், நேற்று முன் தினம், மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது, நேற்று தீர்ப்பளிக்கப்படும். விசாரணையின் போது, சசிகலா ஆஜராகவில்லை என்றால், "வாரன்ட்' பிறப்பிக்கப்படும் என, சிறப்பு கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணா எச்சரித்திருந்தார்.


இதையடுத்து, நேற்றைய விசாரணைக்காக, காலை, 10:45 மணிக்கு, கோர்ட்டிற்கு வந்தார் சசிகலா. நீதிபதி வராததால், ஒன்றரை மணி நேரம் காத்திருந்தார். பகல், 12:20 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வந்தார். இதையறிந்த சசிகலா, கோர்ட் ஹாலில் அமைக்கப்பட்டிருந்த கூண்டில் ஏறி நின்றார். சில நிமிடங்களுக்கு பின், வக்கீல்கள், அவரை அமரும்படி கூறினர். இதையடுத்து, கூண்டினுள் போடப்பட்டிருந்த, நாற்காலியில் அமர்ந்தார். வழக்கு விசாரணை துவங்கியது.

நீதிபதி பாலகிருஷ்ணா, ""வழக்கிற்காக கைப்பற்றப்பட்டிருந்த, தேவையற்ற ஆவணங்களை தரும்படி, சசிகலா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அடுத்த விசாரணை, வரும், 19ம் தேதி நடைபெறும். அன்று முதல், 313வது சட்ட விதியின் கீழ், சசிகலாவிடம் கேள்விகள் கேட்கும் பணி துவங்கும்,'' என்றார். ஐந்து நிமிடத்துக்குள் விசாரணை முடிந்ததும், சசிகலா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கடந்த மே, 2ம் தேதி நடந்த, இந்த வழக்கு விசாரணையின் போது, சசிகலா ஆஜராகினார். அதன் பின், ஏதாவது ஒரு காரணம் கூறி, ஆஜராவதை தவிர்த்து வந்தார். முதலில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி, மல்லிகார்ஜுனய்யா ஓய்வு பெற்ற பின், வழக்கை, சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி சோமராஜு, கூடுதலாக விசாரித்தார்.


இந்நிலையில், காலியாக இருந்த சிறப்பு கோர்ட் நீதிபதி பதவிக்கு, பாலகிருஷ்ணா நியமிக்கப்பட்டார். அவர், பொறுப்பேற்ற பின், முதன் முறையாக, நவம்பர், 20 ம் தேதி, இவ்வழக்கு விசார ணையை மேற்கொண்டார். இரண்டாவதாக, டிசம்பர், 10ல் நடத்தினார். மூன்றாவது நாளாக நேற்று நடந்தது. பாலகிருஷ்ணா நீதிபதியான பின், முதன் முறையாக சசிகலா நேற்று ஆஜராகியுள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (40)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayabalan - chennai ,இந்தியா
22-டிச-201205:56:50 IST Report Abuse
jayabalan நான் சாகுரதுக்குள்ள இந்த கேசுல ஒரு தீர்ப்பு வருமான்னு பாக்கணும்... ன்னு காத்திருக்கார்கள் பலர். தீர்ப்பைப் பார்த்தவுடன் இவர் போன்றவர்கள்தான் உயிரை விடவேண்டி வரும். அது ஏமாற்றமா விரக்தியா நிம்மதியா பூரிப்பா அதெல்லாம் ஏன் இப்போ? விட்ருலாம்
Rate this:
Share this comment
Cancel
itashokkumar - Trichy,இந்தியா
16-டிச-201220:43:11 IST Report Abuse
itashokkumar உலகம் அழிவதற்குள் வழக்கு முடிந்தால் இந்த வழக்கை நடத்த அரசாங்கம் எத்தனை கோடி செலவு ஆனது என்பதாவது தெரிய வரும். கடவுளே
Rate this:
Share this comment
Cancel
aymaa midas=vison2023 - kodanaatu, koththadimai kuppam, vilaiyilaa kaiyuttu ,நிய்யூ
12-டிச-201210:53:25 IST Report Abuse
aymaa midas=vison2023 அப்புடியே அச்சு அசலா சொர்ணாக்கா கும்பல் மாதிரியே இருக்கு
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
12-டிச-201210:43:00 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. பின்ன ஆஜராகுலன்னா... பிடிவாரண்டாசே.. அதுவும்.. Poes தோட்ட முகவரி ஆச்சே.. வந்து ஒக்காந்துடும்.. வாரண்டு.. அப்போ.. வாரண்டு.. சசிக்கா..இல்ல ஜெ கான்னு தெரியாதே.. அதுனால.. ஜெ சொல்லித்தான் இந்த சசி ஆஜராகி இருப்பாங்க.. பாருங்க.. இனிமே ஒவ்வொரு.. முறையும் போயிதான் ஆகணும்.. என்ன இந்த நீதிபதி..இன்னும் ஒரு வருசத்துல reitirement ... பார்ப்போம் அப்படியாச்சும் நல்லது நடக்குமான்னு.. என்ன பண்ணுறது நம்பிக்கைதானே வாழ்க்கை...
Rate this:
Share this comment
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-201210:05:13 IST Report Abuse
GANAPATHI V "அட விடுங்கப்பா இந்த பொம்பளைய ,,பாவம் ஒரு பக்கம் ..பழி ஒரு பக்கம் ......இருக்க இந்த பொம்பளை என்ன பண்ணும் . பணம் உள்ள இடத்தில் உங்க பாச்சா பலிக்காது ....."
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
12-டிச-201210:00:48 IST Report Abuse
Raj அம்மா - சகோதரி கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது ... அவ்வளவு "புனிதமானது" இப்படி பட்டவர்கள் வீட்டுக்கே அல்லவா நீதிமன்றம் வந்து விசாரணை நடத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
12-டிச-201209:48:33 IST Report Abuse
krishna வீடியோ கடை நடத்தி வந்த இந்த சாதாரண பெண்மணிக்கு எங்கே இருந்து இத்தனை சொத்துகள் வந்தன. இவருடனான நட்பை முறித்து விட்டதாக ஏன் ஜெயா நாடகம் ஆடினார். பின் மீண்டும் தன்னுடன் சேர்த்து கொண்டார். இந்த வழக்கை ஏன் இன்னும் இழுத்து கொண்டே இருக்கிறார்கள்.விரைந்து விசாரணை செய்து குற்றவாளிகளை தூக்கி உள்ளே போடா வேண்டியதுதானே.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
12-டிச-201209:44:27 IST Report Abuse
pattikkaattaan இப்போ இருக்கிற நீதிபதி பாலகிருஷ்ணா பணி நியமன ஆணை முறையாக சசிகலா தரப்பிற்கு கொடுக்கப்படவில்லை ... எனவே நீதிபதி பாலகிருஷ்ணா சசிகலா வழக்கை விசாரணை செய்ய தகுதியற்றவர்... இது விசயமாக விரைவில் நீதிபதிமேல் வழக்கு தொடரவேண்டும் ... ( அப்பா இன்னும் ஒரு வருசத்திற்கு விசாரணை செய்யமுடியாது ..)
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
12-டிச-201209:25:48 IST Report Abuse
R.BALAMURUGESAN ...இன்னும் எத்தனை காலந்தான் இந்த சொத்துக் குவிப்பு வழக்கு நடக்குமோ தெரியவில்லை... இந்த வழக்கு ஒன்றும் இல்லாமல் போவதற்குண்டான ஏற்பாடுகளில் ஒன்றுதான் இப்படி இழுத்தடிப்பது, வாய்தா வாங்குவது போன்றவை... இந்த வழக்கில் சாட்சிகளும், ஆதாரங்களும், உண்மையும் தெளிவாக உள்ளதால்தான், இவர்களால் வாய்தா வாங்கிக்கொண்டு காலத்தை கடத்துவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை... சாட்சியங்களோ, ஆதாரங்களோ தெளிவாக இல்லை என்றால் அவ்வளவுதான், எப்போதோ இந்த வழக்கை தின்று ஏப்பம் விட்டிருப்பார்கள்... இப்போதாவது இந்த நீதிபதியின் பதவிகாலம் முடிவதற்குள்ளாவது, இந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்கப்படுமா???...
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
12-டிச-201209:01:05 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் ஐந்து நிமிட விசாரணைக்கு இத்தனை வாய்தாவா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்