‘ இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிட கூடாது’- ஷெட்டர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பெல்காம்: ""காவிரி நதி நீர் தீர்ப்பு குறித்த, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிடக்கூடாது, என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வற்புறுத்த, அனைத்து கட்சி குழுவுடன் டில்லி செல்வோம்,'' என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடக சட்டசபையில் தெரிவித்துள்ளார். டில்லியில், கடந்த, 7ம் தேதி நடந்த, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், இம்மாத இறுதிக்குள், காவிரி நதி நீர் ஆணைய உத்தரவு, அரசிதழில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. இதை எதிர்த்து, முதல்வர்கள் கூட்டத்தை கூட்டி, அரசிதழில் வெளியிடுவது குறித்து, பிரதமர் பேச வேண்டும், என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கடிதம் எழுதியுள்ளார்.


இந்நிலையில், பெல்காமில் நடந்து வரும், சட்டசபை கூட்டத்தொடரில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது:காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது என்று, டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வலியுறுத்தப்படும். இதற்காக, அனைத்து கட்சி குழுவினருடன், டில்லி செல்ல முடிவு செய்துள்ளேன். இதற்கு முன்பாக, கர்நாடக சட்டசபை, மேலவை தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.காவிரி நீர் விஷயத்தில், கர்நாடக நலனை காப்பாற்றும் வகையில், நடுவர் நீதி மன்ற இறுதி உத்தரவை, அரசிதழில் வெளியிடாத வகையில் பிரதமரிடம் வற்புறுத்தப்படும். ஏற்கனவே இறுதி உத்தரவை, வெளியிடக்கூடாது என்று கோரி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.காவிரி தொடர்பான வழக்கு, மேல் முறையீடு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருக்கும் போது, இறுதி முடிவு வெளியிடுவது சரியல்ல, என்று பிரதமரிடம் கேட்டுக் கொள்ளப்படும் என்றார்.காவிரி நதி நீர் ஆணையம், காவிரி நீரில் தமிழகத்துக்கு, 419 டி.எம்.சி., அடி நீரும், கேரளாவுக்கு, 30 டி.எம்.சி., அடி தண்ணீரும், புதுச்சேரிக்கு, 7 டி.எம்.சி., அடி தண்ணீரும் விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு, உச்சநீதிமன்றம் புதிதாக எந்த உத்தரவும் விதிக்கவில்லை. எனவே, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஒரு வாரமாக, பத்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அட்டர்னி ஜெனரல் அல்லது மத்திய சட்டத்துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. காவிரி கண்காணிப்பு குழு, தன் அதிகார வரம்பை மீறி, இறுதி அறிவிப்பை தெரிவிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார். மத்திய அரசு, காவிரி நீர் விவகார விசாரணையின் போது, உச்சநீதிமன்றத்தில் இம்மாதம் இறுதிக்குள்ளாக, காவிரி நதி நீர் ஆணை குழுவை, இறுதி உத்தரவை பிறப்பிக்குமாறு கூறியுள்ளது,'' என்றார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giri Srinivasan - chennai ,இந்தியா
12-டிச-201207:17:23 IST Report Abuse
Giri Srinivasan இப்போதாவது புரிந்து கொள்ளவேண்டும் யார் உண்மையான ராஜதந்திரி என்று. எல்லாவற்றிற்கும் நீதிமன்றத்தையே நம்பினால் மற்ற அடிகளை யார் எடுத்து வைப்பார்கள் ??? இந்த அரசும் முதல்வரும் மக்களுக்கு வாக்குறுதி தந்து விட்டு இன்று தன்னுடைய வார்த்தைகளை உதிர்க்காமல், எப்போதுமே நீதிமன்ற வாசலில் நின்றால், நீதி கிடைக்குமா ??? மற்றவர்கள் அனைவரும் நினைப்பதை செய்யக்கூடாது என எண்ணுபவர் நம் முதல்வர். கர்நாடக முதல்வோ, தண்ணீரை தரக்கூடாது என அங்கும் இங்கும் அலைவதை பார்த்தால், உண்மையாக யார் புத்திசாலி என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இங்கு மனிதாபிமானம், நீதி, தர்மம் வேலை செய்யாது. புத்தி தான் வேலை செய்யும். இரண்டு வேளை சோற்றை மறக்கடித்து, எப்போதுமே சோறு கிடையாது என்ற நிலைமைக்கு நம் முதல்வர் இட்டு செல்கிறார். இன்றோ விவசாயிகள் வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொள்ளும் நிலைமை. ஆனால் ,நாளை நம் அனைவருமே ???????
Rate this:
Share this comment
Cancel
thirumalai chari - chennai,இந்தியா
12-டிச-201206:52:59 IST Report Abuse
thirumalai chari வருட வருடம் நடக்கும் இந்த நாடகத்துக்கு இயற்கையும் வருண பகவானும் இணைந்து முற்றுபுள்ளி வைப்பார்கள். ஷெட்டர் பெயர்ச்சி விரைவில் முடிந்து விடும்.
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
12-டிச-201206:43:43 IST Report Abuse
T.R.Radhakrishnan ஷெட்டர் தவறு செய்கிறார். பிரதமரை பார்ப்பதை விட, கலைஞரை பார்த்தால் காரியம் ஆகும். தமிழருக்கு விரோதி ஷெட்டர், துரோகி கலைஞர். இருவரும் சேர்ந்தால், இறுதி தீர்ப்பு அரசு இதழில் வராது. தமிழரும், கன்னடரும் இசைந்து வாழ வேண்டும் என்று ஏதாவது ஒரு வியாக்கியானத்தை சொல்லிக் கொள்ளலாம். அதை நம்புவதுக்கு நிறைய சொம்புகள் காத்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
12-டிச-201206:37:28 IST Report Abuse
villupuram jeevithan பிரதமரை சந்திக்க கூட எங்க கருணாவையும், தமிழக காங்கிரஸ் போபன்னவையும் அழைத்து செல்லுங்கள். அவர்கள் ஆதரவு நிச்சயம். மத்தியில் இருந்து கொண்டே தமிழக நலனுக்கு எதிராக நடக்கும் கருணாவை மக்கள் புரிந்து கொண்டனர். அவர் தான் புரிந்து கொள்ளவில்லை.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
12-டிச-201206:24:12 IST Report Abuse
ஆரூர் ரங பாவம் ஷெட்டர். தன மாநில நலனுக்காக உண்மையிலே பெரும் பாடு படுறாரு. கெசட்டில வெளியிடக் கூடாது என்பதில இவர விட நம்ம மஞ்சதுண்டுதான தீவீரமா இருக்காரு. தமிழின எதிரிய நமக்குள்ள வெச்சுகிட்டு இந்த ஆளைத் திட்டுறதில பலனில்ல
Rate this:
Share this comment
Cancel
pugal - Salem,இந்தியா
12-டிச-201206:20:03 IST Report Abuse
pugal இவனுங்க திருந்தவே மாட்டானுங்க .... வழக்கம் போல கேரளா கிட்ட 6 மாசம், கர்நாடகா கிட்ட 6 மாசமுனு பிச்சை எடுக்கணும். இந்த கேடு கேட்ட பொழப்புக்கு பேரு தமிழ்நாடு.
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
12-டிச-201202:21:49 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் கொடுமையடா கொடுமை... நம் தமிழக கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத காரணத்தால் இந்த கன்னடியர்கள் நம்மை எவ்ளோ தரம் தாழ்த்தி பார்க்க வேண்டுமோ அவ்வளவையும் செய்கின்றனர் .... நாம் மத்திய அரசிடம் முறையிட்டால் - காவிரி கண் காணிப்பு குழுக்கு செல்கின்றனர் , அங்கே சாதகமான தீர்ப்பு அமைய வில்லை என்றால் உச்ச நீதி மன்றம் அங்கேயும் சாதகமான தீர்ப்பு இல்லை என்றால் மீண்டும் புதிய மனு தாக்கல்... அப்படியும் தீர்ப்பு வழங்கி விட்டால் அவற்றை ஏற்க முடியாது என்று ஒரே குரலில் ஓங்கி ஒரு முழக்கம்.., மீண்டும் முதல்ல இருந்து இருந்து ஆரம்பிப்பாங்க... சத்தியமா எனக்கு தலை சுத்துதுடா சாமி .. நம்ம முட்டாள்களா ?? இல்லை மத்திய அரசு , நீதி மன்றம் , நடுவர் மன்றம் முட்டாள்களா ?? ஒண்ணுமே புரியலையே.. கால தாமதம் செய்யவே இந்த நாடகம் என்று சிறு பிள்ளைக்கு கூட நன்கு தெரிகிறது ... ஏன் ஆணவ மிகுந்த அதிமுக அரசுக்கு புரிந்து தொலைய வில்லை ??? மீண்டும் மீண்டும் உச்ச நீதி மன்றத்தை நாடுவதால் நிலையான பயன் கிடைத்ததா ??? \\ கன்னடியர்களை போல ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசி போராட்டத்தில் இறங்கினால் தான் மத்திய அரசு மதிக்கும் ... // இல்லை என்றால் தமிழக விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க முடியாது ... தமிழக அரசு தனது கர்வத்தை கை விட வேண்டும் ... ஆணவத்தை அகற்ற வேண்டும் ... ஈகோவை தீயில் போட்டு கொளுத்தி மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்... இதை நான் பல முறை கூறி விட்டேன் ஒரு பயனும் இல்லை :( ஆழ தெரியாதவர்கள், நான் , தான் , எனது என்ற எண்ணம் கொண்டவர்கள் எல்லாம் நாட்டை ஆண்டால் தமிழன் திருஓட்டை கையில் ஏந்தி நிற்க வேண்டிய காலம் வெகு விரைவில் வரும் :(
Rate this:
Share this comment
Devil - Chennai,இந்தியா
12-டிச-201206:16:07 IST Report Abuse
Devilவர்ர தேர்தலோட அந்த இன்னொரு கட்சிய ஊத்தி மூட வையுங்க. மத்த எல்லா கட்சியும் நேர் கோட்டுல தமிழகத்துல ஒண்ணா ஆகிடுவாங்க....
Rate this:
Share this comment
Cancel
Paris EZHILAN - Paris,பிரான்ஸ்
12-டிச-201202:07:20 IST Report Abuse
Paris EZHILAN மையிலே, மையிலே இறகு போடு என்றல் மயில் இறகை போடாது, சட்டத்தின் உதவியால்தான் நாம் இறகை பிடுங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
12-டிச-201201:57:29 IST Report Abuse
தமிழ் சிங்கம் எதிர்கட்சியாக இருந்தாலும், ஷெட்டர் வெட்கம் பார்க்காமல் பிரதமரிடம் சென்றுள்ளார். . விடிந்தால் சுப்ரீம் கோர்டுக்கு ஓடுகிறார். தமிழர்களுக்கு தண்ணீர் எப்படி கிடைக்கும்? வெறும் நீதி இருந்தால் போதுமா? நேர்மை நம் பக்கம் இருந்தாலும், சிறந்த வக்கீல் இல்லையென்றால், தோற்றுவிடுவோம். ஜெயாவே தண்ணீர் வேண்டுமென்றால், இப்பவே டெல்லிக்கு செல்லவும். இல்லையென்றால் தமிழர்களுக்கு திருவோடு.
Rate this:
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
12-டிச-201206:27:53 IST Report Abuse
ஆரூர் ரஙஒன்னு பண்ணலாமே.. க்ளோனிங் முறையிலே இன்னொரு ஜயாவை உருவாக்கி அவரை டெல்லியில் நிரந்தரமா தங்க வெச்சு ஒவ்வொண்ணுக்கும் ( நியாயமாக தானாகவே நடக்க வேண்டிய விஷயங்களுக்குக் கூட ) அங்குள்ளவங்களின் காலில விழ வைக்கலாம். உங்கள மாதிரி ஆளுங்களால தமிழனின் மானம் எப்படியெல்லாம் விலை போகுது?...
Rate this:
Share this comment
யமதர்மன் - Chennai,இந்தியா
23-டிச-201206:52:09 IST Report Abuse
யமதர்மன்புரியவில்லையா, புரியாதது மாதிரி நடிக்கிறார்களா? டெல்லிக்கு வாங்க உடனே தண்ணீர் தருகிறேன் என்று எப்போதாவது பிரதமர் சொல்லியிருக்கிறாரா? அல்லது அவர் சொன்னால் மட்டும் கர்நாடகா பி ஜே பி யோ அல்லது காங்கிரசோ கொடுத்து விடுமா? ...
Rate this:
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
12-டிச-201200:44:34 IST Report Abuse
Cheenu Meenu சுப்ரீம் கோர்ட் ஓன்று சொன்னால். ஷெட்டர் அதை அமுல் படுத்த தடை செய்கிறார். எனவே இவரை சுப்ரீம் கோர்ட்க்கு மிஞ்சிய சூப்பர் கோர்ட் என்று கொள்ளலாமா? கர்நாடக அரசு கலைக்கப்பட்டால் பின் இவர் ஒரு பொம்மையே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்