Advertisement
இன்று உலக அதிஷ்ட தினம் ; 12.12.12 குறித்த ஆய்வு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2012,01:28 IST

பாபநாசம்: இன்று (12-12-12) உலக அதிஷ்ட தினமாகும் என்று, சுவாமிமலை ஸ்தபதி ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், அவ்வாண்டின் கடைசி இலக்கத்தை வைத்து, மாதம் மற்றும் தேதியும் ஒன்றாக அமைந்தால், அந்த நாள் அவ்வாண்டின் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக எண்ணி மகிழ்வர்.


எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், இன்று, 12.12.12 என, அமைந்த இந்த நாள் பல்வேறு வகையில் சிறப்பினை பெறுகிறது. எண், 12ஐ அடிப்படையாக கொண்டு அமைந்த பல நிகழ்வுகள் நம் வாழ்க்கையிலும், நமது கலாச்சாரத்திலும், இலக்கியத்திலும் அமைந்துள்ள, பல அரிய செய்திகளை, பாபநாசம் அருகே சுவாமிமலை ஸ்தபதி மோகன்ராஜ் ஆய்வு செய்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது:


இன்று உலகம் முழுவதும் ஆட்சி செய்யும் ஆங்கிலமே இந்நாளுக்கு காரணமாகிறது. ஆங்கில ஆண்டே, கி.பி.,- கி.மு., என, காலத்தை நிர்ணயிக்கிறது.அவ்வகையில் ஆங்கில மாதமும், 12, புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய புகழ்பெற்ற நாடகத்தில், ஒன்று, 12வது இரவு, அதுபோல தமிழ்வளர்த்த திருமுறைகள், 12, சிதம்பரம் சிவகாமியம்மை பற்றிய பிள்ளை தமிழ், 12, கலிங்கத்து பரணியில் சக்தியின் வடிவம், 12 விதமாக கூறப்படுகிறது.




வராஹி படிம அமைதியில் காணப்படும் வகைகள், 12, சூரிய பகவான் தேரில்வர அவருக்குமுன் சாமரம் வீசிவரும் அப்சரஸ்களின் எண்ணிக்கை, 12, தேவி பாகவதத்தில் ஸ்ரீசக்கர கோட்டைகால், பித்தளை பிரஹாரத்தில் அமைந்துள்ள சக்திகளின் எண்ணிக்கை, 12, காளி தேவிக்கு ஏவல் செய்ய உடன் உள்ள யோகிகளின் எண்ணிக்கை, 12, சூரியனது சக்கரத்தில் காணப்படும் ஆரக்கால்களின் எண்ணிக்கை, 12, சிற்ப கலைக்கு புகழ்பெற்ற ஒரிசா மாநில கொணாரக் சூரியன் கோவிலில் காணப்படும் சக்கரங்களின் எண்ணிக்கை, 12.


இதற்கு முன் நாம் கடந்து வந்த ஆண்டுகள், 10.10.10., 11.11.11., என முன்னோக்கியும், இனிவரும் ஆண்டுகள், 13.13.13, 14.14.14 என, அமையாது என்பதை கருத்தில் கொண்டும், மாதம், 12 உடன் முடிவடைவதால், இந்த, 12.12.12 எவ்வாறு நமது வாழ்க்கையுடன் பிண்ணி பிணைந்துள்ளது.மேலும் ராசிகளின் எண்ணிக்கை, 12. ஒரு மனிதனின் ஜாதக அமைப்பு அடங்கும் கட்டத்தின் எண்ணிக்கை, 12, வைணவ பெருமையை உலகுக்கு எடுத்துரைத்த அந்த ஆழ்வார்களின் எண்ணிக்கை, 12, மாதங்கள், 12, பகல் பொழுது, 12, இரவு பொழுது, 12, பகல் உச்சி, 12, நடுநிசி இரவு, 12, தமிழ் உயிரெழுத்துக்கள், 12. இவ்வாறு அவர் கூறினார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (8)
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
12-டிச-201209:55:03 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar இந்த காலநேரம் மீண்டும் யார்க்கும் வாய்க்க போவதில்லை..,இந்த நாளை நாம் இவ்வுலகை படைத்த இறைவனை வணங்கி..,இவ்வுலகில் அன்பும்..,சமாதனம் பெருகி...அமைதி செயிக்க இனிதாக வணங்கி நாம் உள்ளம் மகிழ மகிழ்ச்சியாக வரவேற்போம் - பூபதியார்
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
Madhu - Bangalore,இந்தியா
12-டிச-201209:20:36 IST Report Abuse
Madhu இது 12.12.2012 .இதில் ஸ்பெஷல் ஆக எதுவும் இல்லை...போய் வேலையைப் பார்க்கவும்.
Rate this:
6 members
2 members
21 members
Share this comment
Dawood - hkg  ( Posted via: Dinamalar Android App )
12-டிச-201209:05:22 IST Report Abuse
Dawood Mr. babu velan... if God gives u 100 more years to live... u can see again 12.12.12... may God bless u
Rate this:
3 members
0 members
1 members
Share this comment
p.raj-chennai - chennai,இந்தியா
12-டிச-201208:25:24 IST Report Abuse
p.raj-chennai எல்லாமே மாயை (ஹம்பக்) கிட்டத்தட்ட அறிவியல் ஆராய்ச்சி படி உலகம் தோன்றி 65 கோடி ஆண்டுகள் ஆகி இருக்ககூடும். நாம் கிட்டத்தட்ட கடந்த 3000 ஆண்டுகளாக மட்டுமே தேதி, காலண்டர் முறை பயன் படுத்தி விட்டு இது தான் ஜனவரி 1 ம தேதி என்று வரையறை செய்தது சரிஇல்லை என்பது என் கருத்து.
Rate this:
1 members
1 members
13 members
Share this comment
Sundar Rajan - chennai,மாலத்தீவு
12-டிச-201208:04:23 IST Report Abuse
Sundar Rajan 20 -12 -2012 (2012 2012 ) ஒரு அருமையான நாள் 20-10-2010 matrum 20-11-2011
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
aymaa midas=vison2023 - kodanaatu, koththadimai kuppam, vilaiyilaa kaiyuttu ,நிய்யூ
12-டிச-201205:10:28 IST Report Abuse
aymaa midas=vison2023 ஆமாம் இதுகிடக்கட்டும் நம்மா ஊரில் கலக்டரா இருக்கிற ஒரு ஈத்தர என்னுமோ கூவிகினு திருஞ்சிதே அது என்ன
Rate this:
4 members
0 members
7 members
Share this comment
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
12-டிச-201204:45:07 IST Report Abuse
K.Sugavanam 2112 ,டிசம்பர் 12 ல பாக்கலாம்.அன்னிக்கும் 12 . 12 .12 தான்..
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Babu Velan - tenkasi,இந்தியா
12-டிச-201203:46:37 IST Report Abuse
Babu Velan இந்த நாள் மிக அற்புதமான நாள் எல்லா வளங்களையும் எல்லோரும் பெற கடவுளை நான் பிரார்த்திக்கிறான் இனி இந்த நுற்றாண்டில் இந்த தேதி மற்றும் மாதம் வருடம் அமையாது. அடுத்த நூற்றாண்டில் இந்த நாளை சந்திக்க நாம் இருக்க போவதில்லை. 12 .12 .12 வாழ்த்துக்கள்.
Rate this:
3 members
2 members
9 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.