E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஆதிவாசி மாணவர்களின் படிப்பிற்காக ஆசிரியர்கள் நடத்தும் டூவீலர் சர்வீஸ்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 டிச
2012
02:21

தேனி:தேனி மாவட்டத்தில், ஆதிவாசி மாணவர்களை, தினமும் பள்ளிக்கு அழைத்து வர, ஆசிரியர்கள் இருவர் இலவச டூ வீலர் சர்வீஸ் நடத்தி வருகின்றனர். பெரியகுளம் சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் 38 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், 21 பேர் வனப்பகுதியில் 5 கி.மீ., தூரம் உள்ள ஆதிவாசி மக்கள் வசிக்கும் செல்லாக்காலனி கிராமத்தை சேர்ந்தவர்கள்.

இப்பகுதி மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாததால், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது. ஆதிவாசி மக்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் அக்கரை செலுத்துவதில்லை.


ஒருநாள் குழந்தைகள் வீட்டில் இருந்தால் கூட, தங்களுடன் வேலைக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். இதனால் செல்லாக்காலனி மாணவர்கள் வராவிட்டால் பள்ளியே வெறிச்சோடி விடும். இதனை உணர்ந்த ஆசிரியர்கள் இருவரும், காலையில் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளிக்கு வந்து விடுகின்றனர்.


பள்ளியில் இருந்து டூ வீலரில் ஆதிவாசி காலனிக்கு சென்று அங்குள்ள மாணவர்களை தங்கள் டூ வீலரில் ஏற்றி பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். தினமும் காலையில் 4 முறை,மாலை 4 முறை என பள்ளிக்கும், ஆதிவாசி காலனிக்கும் இலவச டூ வீலர் சர்வீஸ் நடத்துகின்றனர். ஆண்டு முழுவதும் இவர்களின் சேவை தொடர்கிறது. இதற்கு ஆகும் செலவுகளையும், சிரமத்தையும் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.


ஆசிரியர் செல்லத்துரை கூறியதாவது: நாங்கள் அழைத்து வராவிட்டால் ஆதிவாசி மாணவர்கள், பள்ளிக்கு வராமல் படிப்பை நிறுத்தி விடுவார்கள்.படிப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக, நாங்கள் தினமும் இந்த இலவச சேவையை செய்து வருகிறோம்' என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Niraikulam Arunachalam - chennai,இந்தியா
14-டிச-201213:48:16 IST Report Abuse
Niraikulam Arunachalam இந்த ஆசிரியர்களுக்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் .இவர்கள் பனி சிறப்பாக நடப்பதற்கு கடவுளை கனிவுடன் பிரார்த்திக்கிறேன் .நன்றி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
P.Govindaraj - palladam,இந்தியா
14-டிச-201208:22:51 IST Report Abuse
P.Govindaraj உலகில் நல்லவர்கள் இருக்கிறார்கள் மகிழ்ச்சியாக உள்ளது
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Manu needhi Cholan - Tamilnadu secretariat,இந்தியா
13-டிச-201205:49:18 IST Report Abuse
Manu needhi Cholan இந்த ஆசிரியர்களின் மொபைல் எண். தெரியபடுத்தவும் . எனது வாழ்த்துக்களை அவருக்கு சொல்ல விரும்புகின்றேன் .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
12-டிச-201210:55:23 IST Report Abuse
R.Saminathan ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். கல்வி முக்கியமானது. இந்த உதவி ஒரு நாளும் தவற விடாமல் செய்து வர வேண்டும். அரசாங்கம் இதுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் மாணவர்களுக்கு எந்த குறைபாடுகளும் இருக்க கூடாது.
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
12-டிச-201210:54:27 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) சூப்பர். அரசாங்கத்தால் சலுகை பெற்று படித்து நல்ல நிலையில் உள்ள அனைவரும், இதை போல ஏதாவது நன்மை செய்ய முன்வர வேண்டும். குறைந்த பட்சம் அவர்களது இனத்தவரான தாழ்த்தபட்டோர், பழங்குடியினதவர்களுக்காவது உதவி செய்யலாம்.
Rate this:
1 members
0 members
16 members
Share this comment
Cancel
Ravi - chennai ,இந்தியா
12-டிச-201210:16:14 IST Report Abuse
Ravi இதை படிப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . அந்த ஆசிரியர்களுக்கு உள்ள பெரிய மனதுக்கு தலை வணங்குகிறோம் . உங்கள் இந்த பணியை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
12-டிச-201210:09:28 IST Report Abuse
Chenduraan நல்ல காரியம் win-win situation
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
12-டிச-201206:56:37 IST Report Abuse
Guru உங்களின் சேவையை எண்ணி மனம் மகிழ்கிறேன்.., உங்களின் இந்த உழைப்பும் நல்எண்ணமும் நிச்சயம் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும்.. உங்கள் நற்பணி தொடர என்மனமார்த்த வாழ்த்துக்கள்...
Rate this:
0 members
0 members
21 members
Share this comment
Cancel
umapathy - vellore,தாய்லாந்து
12-டிச-201206:48:41 IST Report Abuse
umapathy ஒரு உன்னதமான சேவை. படிக்கும் போது மனம் ஏதோ செய்கிறது. அந்த நல்லவர்களுக்கு தலை வணங்குகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை. vellore உமாபதி, மலேசியா
Rate this:
0 members
0 members
19 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.