வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தற்போதைய பேருந்துகள் புதிப்பிக்கபட வேண்டும். கால சூழ்நிலைகளுக்கேற்ப பாதுகாப்பு வசதிகளை பெருக்கிக்கொள்ள வேண்டும். பெண்கள் இருக்கைகளை கதவுகள் ஒட்டியுள்ள பகுதியில் இருந்து எதிர்புறம் மாற்ற வேண்டும்.ஆட்டோமாடிக் சிஸ்டம் உள்ள கதவுகளை பொருத்தி கதவு மூடினால் மட்டுமே நகரக்கூடிய வகையில் பேருந்துகளை செயல்படுத்தவேண்டும். மேலும் பேருந்துகளின் எண்ணிக்கையை உச்ச நேரங்களில் உயர்த்தவேண்டும்.ஏதாவது கட்சிமாநாடு, ஊர்வலம் போன்ற அற்ப செயல்களுக்காக வாடகைக்கு விட்டு வழக்கமான சேவையின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையும் தற்போது ஆரம்பித்துள்ளது. இது போன்ற செயலால்தான் இதுபோன்ற விபத்துகள் நடக்கிறது. இந்த மாற்றம் பெருநகரங்களில் மட்டுமில்லாது சிறு குறு கிராம பகுதியில்கூட செயல்படும் பேருந்துகளிலும் பின்பற்றவேண்டும்.
நீதிபதிகளின் உத்தரவில் ஒவ்வொரு மாணவனும் பேருந்தில் தொங்கினால் தண்டிக்கப்படவேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அணைத்து தரப்பினரும் நகரம் கிராமம் போன்ற எல்லா பகுதிகளிலும் பாதுகாப்பாக பயணம் செய்ய அறிவுறுத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட விபத்தோ குற்றமோ நடந்தால் அதைப்பற்றி மட்டும் உத்தரவிடுவார்கள். தயவுசெய்து மொத்த பேருந்து விதிகளை மாற்ற உத்தரவிடுங்கள். அரசுக்கு இங்கே என்போன்றவர்கள் குறிப்பிட்ட கருத்துக்களை தொகுத்து அதை செயல்படுத்த பரிசீலனைக்கு அனுப்புங்கள். ஓரளவு வெற்றி கிடைக்கும். பள்ளிகளுக்கான பேருந்து விசயத்தில் அரசு உத்தரவை எவ்வளவு பேர் கடைப்பிக்கிரார்கள். அது போன்று இங்கும் நடக்க விடகூடாது. என்னை பொறுத்தவரை தமிழக முதல்வர் இவ்விசயத்தில் தலையிட்டு சில பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டால் நற்பெயர் கிடைக்க வாய்ப்புண்டு.
முட்டாள்தனமான தீர்ப்பு. மாணவர்கள் தொங்கினால் பள்ளியிலிருந்து டிஸ்மிஸ்.. சரி.. அலுவலகத்தில் பணிபுரிபவர் தொங்கினால் அலுவலகத்திலிருந்து டிஸ்மிஸ்ஸா? தீர்ப்பை எழுதும் முன் நீதிபதி அவர்கள் மாணவர்கள் பள்ளி செல்லும் காலை நேரத்தில் ஏதேனும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று பார்த்திருக்க வேண்டும். பீக் ஹவரில் எல்லாப் பேருந்துகளும் நிரம்பி வழியும்போது எத்தனை பேருந்துகளை விட்டுவிட்டு காத்திருப்பது? பீக் ஹவரில் எந்த பேருந்துகளும் சரியான நேரத்திற்கு வராது என்பதே நிதர்சனம்.. இந்நிலையில் பள்ளிக்கும் நேரத்திற்கு சென்று சேர வேண்டும் என்ற நிலையில் மாணவன் என்ன செய்வான் ? மென்பொருள் பணியாளர்களைப் போல சேர் ஆட்டோவில் போக முடியுமா? முதலில் கூடுதல் பேருந்துகளை, கதவுடன் கூடிய பேருந்துகளை விட்டுவிட்டு அதன் பிறகு யாரேனும் தொங்கினால் சட்ட நடவடிக்கையை எடுக்கலாம். இதையெல்லாம் செய்யாமல் மாணவர்கள் தொங்கினால் டிஸ்மிஸ் என்று கண்ணை மூடிகொண்டு தீர்ப்பு எழுதுவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியத்திற்கு அங்கீகாரம் கொடுத்தது போன்றாகிவிடும்
சென்னையில் 5B & 12B பஸ்களை பாருங்கள், எனக்கு தெரிந்த நாளில் இருந்து (1992 ) படியில் தொங்கிக்கொண்டுதான் செல்கின்றனர். அந்த வழித்தடத்தில் அதே நேரத்தில் இரண்டு முன்று பஸ்களை விட போக்குவரத்து துறை இன்று வரை முயலவில்லை, இனிமேலும் முயலப்போவதும் இல்லை unfortunately இதுவரை அந்த வழித்தடத்தில் இரு விபத்தும் நிகழவில்லை. இப்பொழுது உள்ள சூழ்நிலையில் மாணவர்கலாகட்டும் & பெரியவர்கலாகட்டும் எல்லாவற்றையும் உதாசீனப்படுதுகிறார்கள், தன்னடக்கம் நாவடக்கம் தனிமனித ஒழுக்கம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதனால் நம்மால் ஆனவரை ஒவ்வொருவரும் சட்டத்தை மதிக்க முயலவேண்டும் அப்பொழுதுதான் இது போன்றதொரு உயிரிழப்புகள் குறையும் இல்லையேல் சட்டத்தினால் மட்டும் ஒன்றும் செய்ய இயலாது.
எப்படி தீர்ப்பு கொடுத்தாலும் அது போலிசுக்கு சாதகமாகவே அமையுது... மாணவர்களும் லேசுபட்டவர்கள் இல்லை. அதே நேரத்தில் பஸ் ஓட்டுனர், ஓட்டுன் விதம், பஸ் கதவு, சமுதாய விழிப்புணர்வு, ஏதும் இன்றி ஒரு தலை பட்சமாக தீர்ப்பு வழங்க பட்டிருக்கிறது. இந்த விபத்தை பொறுத்தவரை மாணவர்கள் அப்பாவிகளே..... இப்போது சட்டம் மாணவர்களை தாக்குகிறது.... மாணவர்களும் தனிலை உணர வேண்டும்... நாட்டாமை தீர்ப்ப மாத்துன நல்ல இருக்கும்.....
சாலைகளில் அரசியல் விளம்பர பலகைகள் வைப்பது போல விபத்து நடந்து சாலையில் உயிரிழந்து கிடப்பவர்களை புகைப்படம் எடுத்து பெரிய பெரிய சைசில் சாலைகளில் முக்கிய இடங்களில் விளம்பர பலகையில் எல்லோரும் பார்க்கும்படி வைக்க வேண்டும். சாலை விபத்தில் மரணமடைந்தவர்கள் எவ்வளவு கோரமாக மரணிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் எல்லோருக்கும் தெரியபடுத்த வேண்டும். விபத்தில் ஏற்படும் மரணம் மிக கொடூரமானது, கோரமானது என்பது பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டும். அப்படி விளம்பரம் செய்தால் வேண்டுமானால் சிறிது EFFECT இருக்கும். அதை விட்டு மாணவர்களை கொஞ்சி கெஞ்சி கேட்பது போல துண்டு பிரசாரம் செய்வது எந்த விதத்திலும் எடுபடாது. அதே போல சட்டத்தை மீறினால் சிறை என்று நடவடிக்கை இருக்க வேண்டும் அது முறையாக பின்பற்றப்பட வேண்டும். இது எல்லாம் நடந்தால் சிறிதாவது DEVELOPMENT எதிர்பார்க்கலாம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.