சேலம்:சேலத்தில், சீனா தயாரிப்பு மொபைல்போன் மூலம் படம் பிடிக்கப்பட்ட சூரியனுக்கு மத்தியில், கரும்புள்ளி காட்சியளித்தது. "இது, உலகம் அழிவதற்கான அறிகுறி' என, பொதுமக்கள் இடையே வதந்தி பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது. சில நாட்களாகவே, "உலகம் அழியப் போகிறது' என்ற புரளி, பரவலாக உள்ளது. வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள், ஜோதிட கணிப்பாளர்கள் பலர், "இது, வீண் வதந்தி' என்று கூறினாலும், பல்வேறு தரப்பினர், அதை ஏற்று கொள்ளும் மன நிலையில் இல்லை.
வெளிநாடுகளில் மட்டும் அல்லாமல், சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் கூட, மாயன் காலண்டரை மேற்கொள் காட்டி, டிச., 21 ம் தேதி, உலகத்தின் கதை முடியப் போகிறது என, பேசி வருகின்றனர்.இந்த சூழ்நிலையில், நேற்று வானில், சூரியனை மறைத்த கரும்புள்ளியால், சேலம் மாநகர மக்கள் இடையே, பரபரப்பு ஏற்பட்டது. சூரியன் வெடித்து சிதறி, உலகம் அழியும் என்று கருதிய சிலர், நேற்று காலை, 11:00 மணியில் இருந்து, தங்கள் மொபைல் போன் மூலம், சூரியனை படம் பிடித்துள்ளனர்.முன்னணி நிறுவனங்களின், மொபைல் போன்களில், சூரியன் படம் பதிவானது. ஆனால், சீன தயாரிப்பு மொபைல் போன்களில், சூரியனுக்கு மத்தியில், சிறிய கரும்புள்ளி ஒன்று தோன்றிய காட்சி பதிவானது. மதியம், 2:00 மணிக்கு மேல், சூரியனை சுற்றியிருந்த கரும்புள்ளி, மிகவும் பெரிதாக காட்சியளித்தது.மொபைல்போனில் படம் பிடித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். "இது உலகம் அழியப் போவதற்கான அறிகுறி' என, சேலம் மாநகர மக்கள் இடையே வதந்தி பரவியது.சென்னை, வானிலை ஆய்வு மைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, "இங்கு, அதுப்போல் எதுவும் தெரியவில்லை; ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் உள்ள, கோள்கள் தொடர்பான ஆய்வு மையத்தை தொடர்பு கொண்டால் மட்டுமே, முழு விவரம் அறியலாம்' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
செல் போனில் நேராக சூரியனை படம் பிடித்தால் செல் போன்தான் கெட்டுப்போகும். கரும்புள்ளிகள் பல ஆயிரம் வருடங்களில் இந்த வருடம் தான் மிக அதிகமாக இருக்கும். தவிரவும் மிக அதிகமாக மின் காந்த புயல் இருக்கும். இது கால நிலையை பெரிய அளவு மாற்றும். சூரியனை பல பரிமாணங்களில் பார்க்கவேண்டுமானால் sohowww.nascom.nasa.gov/ என்ற இணையத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். SOHO என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட பரவெளியில் இயங்கும் அதி நவீன செயற்கை கோள். இதில் சூரியனின் செயல்பாடுகளை கண்காணிக்க பல காமிராக்கள் உள்ளது. முன்னர் European Space Agency மற்றும் NASA சேர்ந்து அனுப்பியது. சென்ற வருடம் SOHO அனுப்பிய புகைப்படம் பல சர்ச்சைகளை கிளப்பியது. (சூரியனுக்கு முன்னால் பூமியை விட பெரிய கோளம் ஒன்றை இது படம் பிடித்து அனுப்பியதுதான் அதற்க்கு காரணம்) அதில் இருந்து SOHO அனுப்பும் படங்களை இப்பொழுது நிறைய சென்சர் செய்து விடுகிறார்கள். அடிக்கடி வரும் மின்காந்த புயலால் நிறுத்தியும் வைத்து விடுகிறார்கள். முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இப்பொழுது SOHO உள்ளது....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.