சென்னை: ""கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், புதிதாக இரு முன்மாதிரி அதிவேக ஈணுலைகள் நிறுவப்படவுள்ளது,'' என, கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குநர் சேத்தல் கூறினார். சென்னை கல்பாக்கத்தில், கதிரியக்க இயற்பியல் குறித்த, 19 வது தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது. மூன்று நாள் நடைபெறும் கருத்தரங்கை துவக்கி வைத்து, அவர் கூறியதாவது:
நிலக்கரி, நீர் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான நிலையங்களை அமைக்க ஆகும் செலவை விட, அணு மின் உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்த, பல மடங்கு செலவாகும். ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால், புகுஷிமா அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. இதன் பின், நாடு முழுவதும் உள்ள, அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
தற்போதுள்ள பாதுகாப்பை விட, கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள், கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கல்பாக்கத்தில், புதிதாக இரு முன்மாதிரி அதிவேக ஈணுலைகள் நிறுவப்பட உள்ளது.
இன்னும் மூன்று மாதத்திற்குள், இதுகுறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு, தெளிவாக விளக்கப்படும். சர்வதேச அளவில், அணு மூலம், ஒரு கிலோ வாட் மின் உற்பத்திக்கு, 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும். தற்போது, நிறுவப்படவுள்ள ஈணுலைகள் மூலம், மின் உற்பத்திக்கான செலவு பாதியாக குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.