திருநெல்வேலி:நெல்லையில் அரசுபஸ் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லையில் இருந்து திடியூர், இளையாமுத்தூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று காலை திடியூரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லை நோக்கி பஸ் வந்து கொண்டிருந்தது. வீரமாணிக்கபுரம் ஸ்டாப்பில் டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.ஸ்டாப்பில் இறங்க வேண்டியவர்கள் இறங்கும் முன்பு பஸ் புறப்பட்டது. பயணிகள் தடுமாறினர். இதை கண்ட ஒருவர் ஆத்திரமடைந்து பஸ்சின் பின்புற கண்ணாடி மீது கல் வீசினார். கண்ணாடி உடைந்தது.இதுகுறித்து மேலப்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர். பஸ் கண்ணாடியை உடைத்தவர் மாணவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.