மின் தடையால் குடிநீர் சப்ளையில் பெரும் பாதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருநெல்வேலி:மின் தடையின் காரணமாக போதுமான குடிநீர் சப்ளை செய்ய முடியாததால் டவுன் பஞ்.,களில் பெரும் பாதிப்பு நிலவுகிறது. டவுன் பஞ்.,களில் உடனடியாக ஜெனரேட்டர் வசதி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 534 டவுன் பஞ்.,கள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் 36, தூத்துக்குடி மாவட்டத்தில் 18 உட்பட மொத்தம் 54 டவுன் பஞ்.,கள் உள்ளன.
இந்த அனைத்து டவுன் பஞ்.,களுக்கும் தாமிரபரணி, வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டங்கள் உட்பட 6 குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.நெல்லை, தூத்துக்கு மாவட்டங்களில் உள்ள 54 டவுன் பஞ்.,களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது மின் தடையின் காரணமாக இந்த டவுன் பஞ்.,களில் உரிய முறையில் குடிநீர் சப்ளை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.ஆனால் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக அதிகாரிகள் "கணக்கு' காட்டி வருகின்றனர். மின் தடையின் காரணமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றுவதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு டவுன் பஞ்.,களிலும் ஜெனரேட்டர் வசதி வேண்டும் அந்தந்த டவுன் பஞ்.,கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டவுன் பஞ்.,களின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.டவுன் பஞ்.,களில் ஜெனரேட்டர் வசதிக்கு துறை இயக்குனர் அனுமதி வேண்டும் என்று கோரி சென்னைக்கு கோரிக்கை அனுப்பபட்டது. இதனை இயக்குனர் அலுவலகம் பரிசீலனை செய்து "டவுன் பஞ்.,களில் மின் தடையினால் குடிநீர் சப்ளை பாதிக்கப்படுவதை தவிர்க்க மாவட்ட கலெக்டர்கள் அனுமதியுடன் ஜெனரேட்டர்களை சொந்தமாகவோ, வாடகைக்கோ எடுத்து கொள்ளலாம்' என்று உத்தரவு வெளிவந்துள்ளது. ஆனால் ஒரு மாதம் ஆகியும் இந்த உத்தரவு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட டவுன் பஞ்.,களில் குடிநீர் சப்ளை உரிய முறையில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இப்பிரச்னையில் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதாக புகார் கூறப்படுகிறது.மேலும், டவுன் பஞ்.,களில் போர்வேல் அனுமதி, புதிய ரோடுகள், குடிநீர் வசதிக்கு திட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது. இதனால் டவுன் பஞ்., தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
எனவே, இப்பிரச்னையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு குடிநீர் பிரச்னையால் வாடும் மக்களுக்கு போதுமான குடிநீர் வசதி செய்ய டவுன் பஞ்.,களில் ஜெனரேட்டர் வசதி மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
16-டிச-201211:02:25 IST Report Abuse
ஆனந்த் தடை இல்லாமால் தமிழகத்தில் கிடைப்பது டாஸ்மாக் கடைகளில் மதுபானம்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-டிச-201210:48:17 IST Report Abuse
Pugazh V நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத அமைச்சர்கள். ஆட்சித்திறன் சிறுதும் இல்லாத அரசு. கடந்த கால ஆட்சியையும், மத்திய அரசையும் இன்னும் குறை சொல்லிக் கொண்டே இருங்கள். வரிசையில் நின்று மாற்றம் வேண்டும் என்று வாக்களித்துவிட்டு , இப்போது முழித்துக் கொண்டிருக்கிறோம். என்று தீரும் இந்த கஷ்டங்கள்? 2க் என்றால் என்ன வென்றே தெரியாமல், அநியாயம் அக்கிரமம் என்று சொல்லி, அடிப்படையே இல்லாத வெறும் ஊகங்களின்பால் எழுப்பப்பட்ட குற்றச் சாட்டுகளை கண்ணை மூடிக் கொண்டு நம்பி முட்டாள்தனமாக செயல்பட்டுவிட்டு, இப்போது என்ன செய்வது. அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தண்ணீர் தராத பா ஜ க வெற்றி பெற வேண்டும் என்றும், ஓரளவு சுமாரான நல்ல ஆட்சி தந்த தி மு க வை அழியவேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்