திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலத்தில் 51 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சார் நிலை பணிகள் 2009-11
தொகுதி 2ல் தேர்வு செய்யப்பட்டவர்கள் இதுவரை வருவாய் துறையில் மட்டுமே
நேரடி நியமனம் செய்யப்பட்டு வந்தனர். தற்போது மாவ்டட ஊரக வளர்ச்சி முகமை
அலுவலகத்தில் உதவியாளர்களாக நேரடி நியமனம்
செய்யப்பட்டுள்ளனர்.டி.என்.பி.எஸ்.சி மூலம் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை அலகிற்கு 51 நபர்கள் உதவியாளர்களாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
கலெக்டர் செல்வராஜ் ஆணைக்கு இணங்க நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த
விழாவில் திட்ட அலுவலர் அமானுல்லா, உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை
வழங்கினார்.இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெகநாதன் உட்பட
அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.