திருநெல்வேலி:நெல்லை
மாவட்ட ஓய்வுற்றோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் செல்வராஜ்
தலைமையில் ஓய்வூதிய இயக்குனரால் வரும் ஜனவரி மாதம் 29ம் தேதி காலை 10.30
மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடத்தப்படுகிறது.நெல்லை மாவட்ட
அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாமல் நிலுவையில் இருப்பின்
தங்கள் குறைகளை தெரிவித்து விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் நெல்லை மாவட்ட
கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
அரசின்
நேரடி துறையில் பணிபுரிபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் எந்த அலுவலகத்தில் இறுதியாக பணிபுரிந்து
ஓய்வு பெற்றார், எந்த அலுவலரிடம் அவரது கோரிக்கை தற்போது நிலுவையில்
உள்ளது, கோரிக்கை விபரங்கள், ஓய்வூதிய எண், குடும்ப ஓய்வூதிய எண் போன்ற
முழு விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பதாரர்களின் கையெழுத்துடன்
தெளிவான முகவரியுடன் இரட்டை பிரதிகளில் நேரடியாக அனுப்ப வேண்டும்.துறை
அலுவலர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாளான
வரும் ஜனவரி மாதம் 29ம் தேதி நடக்கும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அலுவலரால்
மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.எனவே, ஓய்வூதியதாரர்கள் இரு படிகளில் வரும்
20ம் தேதிக்குள் நேரடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி,
ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்திலும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
என்று கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.