சென்னை:தமிழகத்தின் முதல் சூரிய சக்தி பூங்கா, ராமநாதபுரத்தில், 920 கோடி ரூபாயில், அடுத்த ஓராண்டில் அமைகிறது. இதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
"தமிழகத்தில் வரும், 11 ஆண்டுகளில், "தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் - 2023'ன் கீழ், சூரிய சக்தி மூலம், 5,000 மெகா வாட் மின் உற்பத்திக்கான, திட்டங்கள் செயல்படுத்தப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
மேலும், தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை - 2012ல், தமிழகத்தில், 2015ம் ஆண்டுக்குள், 3,000 மெகா வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது,
இதற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் வாயிலாக, வரும், ஐந்து ஆண்டுகளில், 1,000 மெகா வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்த, சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக்களை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் நிறுவ, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், 500 ஏக்கர் பரப்பில், 920 கோடி ரூபாய் மதிப்பில், 100 மெகா வாட், சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் வகையில், சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்படுகிறது.
இதற்காக, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும், "ராசி கிரீன் எர்த் எனர்ஜி' நிறுவனத்திற்கும் இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.