சென்னை:""தமிழகத்தில் உள்ள மதசார்பற்ற கட்சிகளையும், தி.மு.க., கூட்டணியில் தற்போது இல்லாத கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஒரு பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில், மதசார்பற்ற கட்சிகள் ஈடுபட்டால், அதனை நாங்கள் ஊக்கப்படுத்துவோம்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் அவரது பேட்டி:இம்மாதம், 18ம்தேதி, மின்வெட்டை கண்டித்து, நடக்கும் அறப்போர் ஆர்ப்பாட்டம், அமைதி போராட்டமாக இருக்கும். சட்ட ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.குக்கிராமங்களில் கூட கட்சி கொடிகளோடும், கட்சியினர் இந்தப் போராட்டங்களில், ஆங்காங்கு ஈடுபடுவர். சென்னையில் நடைபெறும், அறப்போர் ஆர்ப்பாட்டத்தில், நான் கலந்து கொள்வது பற்றி, இன்னும் முடிவு செய்யவில்லை.
மத்தியில் இருக்கும் மின்சாரத்தை, தென்கோடியில் உள்ள ஒரு மாநிலத்திற்குக் கொண்டு வருவதென்றால், அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த ஏற்பாடுகளை, உடனடியாக செய்து விட முடியாது.தமிழகத்தின் நலனுக்காக, மத்திய அரசிடம், இந்த ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்த, தி.மு.க., தயாராக இருக்கிறது.
லோக்சபா தேர்தலில், மதவாதக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, தமிழகத்தில் உள்ள மதசார்பற்ற கட்சிகளையும், தி.மு.க., கூட்டணியில், தற்போது இல்லாத கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஒரு பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில், மதச்சார்பற்ற கட்சிகள் ஈடுபட்டால், அதனை நாங்கள் ஊக்கப்படுத்துவோம்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.
மின்வெட்டை கண்டித்து 18ம் தேதி ஆர்ப்பாட்டம் * தி.மு.க., செயற்குழு முடிவு
சென்னை:"மின்வெட்டை கண்டித்து, தமிழகம் முழுவதும், இம்மாதம் 18ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:இலங்கை தமிழர்கள், அரசியல் வாழ்வுரிமைகளை குறித்த கோரிக்கைகளை, ஐ.நா., சபையிலும், இலங்கை அரசை எச்சரிக்கும் வகையில், மத்திய அரசு, முக்கிய பங்காற்றி, இலங்கை தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க முன்வர வேண்டும்.சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை, தி.மு.க., எந்தக் காலத்திலும் ஏற்காது. வால்மார்ட் நிறுவனம், தமிழகத்தில் எந்த வகையிலும் நுழைந்து விடாமல், இருப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.
காவிரி விவகாரத்தில், தமிழக அரசு, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டால், தமிழகமே இருண்ட பூமியாகக் காட்சியளிக்கிறது.ஆட்சியினர் மீதும், குறிப்பாக போலீஸ் துறையின் மீதும் வந்துள்ள புகார்கள் மீது, முறையான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.டெங்கு, சிக்குன்-குனியா போன்ற காய்ச்சல்கள் ஏற்படாமல் தடுக்கவும், அந்தக் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கவும், நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மின்வெட்டை கண்டித்து, இம்மாதம், 18ம் தேதி, மாவட்ட தலைநகரங்கள், நகர, ஒன்றிய, பேரூராட்சி போன்ற பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் பிரதமர் குஜ்ரால், முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், சமயநல்லூர் செல்வராஜ் உட்பட, 14 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
Kaliangar sir,
If u say Wallmart should not come to Tamilnadu, then you should have opposed to Central Govt...voting in favour of them in Delhi and opposing them in Chennai is not fair...If BJP is a religious party then y u have made alliance with them earlier and that too for full five years????pbly they might have hidden u that they r not religious????
1989 முதல் இன்று வரை இடையில் 91-99 தவிர மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் தி மு க இதுவரை தமிழ் நாட்டுக்கு என்ன செய்துள்ளது? தி மு க மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் போதாவது செய்தார்களா? இல்லை. அ தி மு க ஆட்சியில் இருக்கும்போது கெட்ட பெயர் உண்டாக்க தடுக்கும் வேலை செய்வார்கள். மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு பொறுப்பு கிடையாதா? அவர்களும் தமிழக மக்கள் ஓட்டு போட்டு ஜெயித்தவர்கள் தானே
மாநிலங்களில் அந்நிய முதலீடு: இங்கு பலர் இதுபற்றிய (தமிழகத்தில் வால்மார்ட் பற்றியும்) கருத்து தெரிவித்துள்ளனர். இதற்க்கு ஒரு உதாரணம்....டாஸ்மாக்கில் தீபாவளிக்கு 125 கோடி யை எட்டவேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பதும்... புதுவகையான மதுபானங்களை அனுமதிப்பதும், புது மாதிரியான பார்களை அனுமதிப்பதும் அதற்க்கு ஆதரவு ஒட்டுமூலம் தருவதும் ......அதன் பிறகு அதற்க்கு ஆதரவு தெரிவித்தவர்கள் அதை அனுபவித் துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை ...ஆதரவாக ஒட்டு போடுவது தலைமைக்கு ஆதரவாகவே ஒழிய ஒவ்வொருவரும் மதுவை ஆதரிப்பவர் ஆகாது ... திநிச்சல் இல்லாமல் ஆதரித்தவர் என்று மட்டும் கூறலாம்.. அதுபோல், மத்திய அரசு பல காரனங்களால்( கமிஷன் அல்லது நமது அல்லது பலர் நன்மைக்காக) அனுமத்தித்தாலும்.... மாநிலத்தில் அனுமதிப்பது.. மாநிலங்களின் கைகளில்தான் உள்ளது.. புது மது,புது பார் களுக்கு ஆதரவு அளித்தாலும் அதை உபயோகப் படுத்துவதும் உபயோகிக்காத்ததும் நம் கையில்தான் உள்ளது..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.