tn govt free laptop sales at kerala | தமிழக அரசின் இலவச லேப்-டாப் கேரளாவில் ரூ.6,000க்கு விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசின் இலவச லேப்-டாப் கேரளாவில் ரூ.6,000க்கு விற்பனை

Updated : டிச 14, 2012 | Added : டிச 13, 2012 | கருத்துகள் (54)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 தமிழக அரசின்  இலவச லேப்-டாப் கேரளாவில்  ரூ.6,000க்கு விற்பனை

இடுக்கி:பிளஸ் 2 மாணவர்களுக்கு, தமிழக அரசு வழங்கிய, இலவச லேப்-டாப்கள், கேரளாவின் பல இடங்களிலும், 6,000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. அதே போல், இலவச கிரைண்டர், தொலைக்காட்சி பெட்டிகளும், பலரது வீடுகளில் பயன்பாட்டில் உள்ளன.

கடந்த ஆண்டு, தமிழகத்தில், சட்டசபை தேர்தல் நடந்த போது, அ.தி.மு.க., சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, லேப் - டாப்களும், வீடுகளுக்கு மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் போன்றவையும் இலவசமாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.தேர்தலில் வெற்றி பெற்ற பின், அ.தி.மு.க., அரசு சார்பில், அறிவித்தபடி, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச லேப் - டாப்களும், வீடுகளுக்கு மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் போன்றவையும், வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய தமிழக அரசால், வழங்கப்பட்ட இவையும்; முந்தைய, தி.மு.க., அரசால் வழங்கப்பட்ட, இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளும், கேரளாவின் பல பகுதிகளிலும் விற்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசால் வழங்கப்பட்ட இவை எல்லாம், அடுத்த சில நாட்களிலேயே, கேரளாவில் விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லேப்-டாப், கிரைண்டர், மிக்சி, மின்விசிறி போன்றவற்றில் முதல்வர் ஜெயலலிதா படமும், தமிழக அரசின் சின்னமும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும் இடம் பெற்றிருக்கும். இவைதான், கேரளாவில் விற்கப்பட்டுள்ளன. கேரளா, இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பலனின் வீடுகளில், இவை புழக்கத்தில் உள்ளன.
பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, லேப்-டாப்களில் பல, பயன்படுத்தப்படாமலேயே, 6,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆடுகள், கசாப்பு கடைகளுக்கு விற்கப்பட்டது தொடர்பாக, சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ORG - tuticorin,இந்தியா
18-டிச-201213:32:17 IST Report Abuse
ORG ஆறாயிரமா ? எங்கே? தூத்துக்குடியில் எங்கே? சீக்கிரம்
Rate this:
Share this comment
Cancel
Boss - Erode,இந்தியா
15-டிச-201204:14:04 IST Report Abuse
Boss இது என்ன அதிசியம், அம்மா வெட்கிரைன்டர் அமெரிக்கா வுக்கே வந்திருச்சு
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ismail Nainamohamed - Madurai,இந்தியா
14-டிச-201219:16:07 IST Report Abuse
Mohamed Ismail Nainamohamed லஞ்சம் கொடுக்க முடியாதலால் உண்மையிலேயே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரிசி, பருப்பு, சமையல் எண்ணை, மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை வசதிபடைத்தவர்களே வாங்கிக் கொண்டு சக மக்களையே ஏமாற்றும் நம் மக்கள்தான் இந்த அநியாயத்தையும் செய்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் திருந்தினால்தான் நல்ல ஆட்சியாளர்களை நாம் தேர்ந்தெடுக்கமுடியும். நல்ல ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தால்தான் எல்லோருக்கும் அவரவருக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Sha Navas Katherbatcha - madurai,இந்தியா
14-டிச-201217:51:59 IST Report Abuse
Sha Navas Katherbatcha ஆந்திராவில் உள்ள எல்லா மருத்துவ மனைகளிலும் இலவச டிவி இருக்கிறது குறிப்பாக நெல்லூர், கூடூர் , நாயுடுபெட்டை
Rate this:
Share this comment
Cancel
S.Sudhahar - Melur,இந்தியா
14-டிச-201215:05:53 IST Report Abuse
S.Sudhahar விக்கிறது விக்கிற அத போய் கேரளகரனுக்கு?
Rate this:
Share this comment
Cancel
kamarud - ooty,இந்தியா
14-டிச-201214:23:31 IST Report Abuse
kamarud கேரளாவுக்கு mattum கொண்டு போய் விக்கிரீங்கலே எங்களுக்கும் லேப்டாப் mixie grinder தேவைப்படுது கொண்டு வந்து தரீங்களா என்ன ரேட் ????
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
14-டிச-201214:07:21 IST Report Abuse
ஆரூர் ரங வித்த பணம் பெரும்பாலும் டாஸ்மாக் வழியா இந்நேரம் அரசு கஜானாவுக்கே வந்திருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Dr. Ganesh - Bangalore,இந்தியா
14-டிச-201213:08:29 IST Report Abuse
Dr. Ganesh அரசியல் கட்சிகள் இலவசம் கொடுப்பதே ஓட்டு வாங்குவதற்கும் பின் பதவி வந்த பிறகு அதன் மூலம் கமிஷன் வாங்குவதற்கும் தானே தவிர மக்கள் மீது உண்மையான அக்கறை எல்லாம் இல்லை இலவசம் எங்களுக்கு வேண்டாம் என்று மக்கள் எப்போது சொல்கிறார்களோ அது தான் நாம் முன்னேறுவதற்கான அறிகுறி. ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
14-டிச-201212:02:15 IST Report Abuse
christ இலவசங்கள் மக்களை சோம்பேறி ஆகிக்கொண்டு உள்ளது .இவர்கள் ஆட்சியிய பிடிக்க இலவசம் எனும் லஞ்சம் மக்கள் வரி பணத்தில் வீனடிகபடுகிறது மாநிலத்தில் சாதாரன அடிப்படை வசதிகள் கூட கிடக்க பெறாமல் மக்கள் உள்ளனர் அதில் அக்கறை காட்டாமல் தேவை இல்லாத இலவசங்கள் அள்ளி வீசுவதில் மாநில குறியாக உள்ளது . அதன் நிலைமை இன்று இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளும்,லேப்-டாப், கிரைண்டர், மிக்சி, மின்விசிறி கேரளாவில் விற்கப்பட்டுள்ளன.ஆடுகள், கசாப்பு கடைகளுக்கு விற்கப்பட்டுள்ளன
Rate this:
Share this comment
Cancel
P.Venkatesan Mani - Chennai,இந்தியா
14-டிச-201211:47:09 IST Report Abuse
P.Venkatesan Mani கணினி கற்பிக்க பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாவிடில் மாணவர்கள் என்ன செய்வார்கள் .1.லேப்டாப்பை விற்பார்கள் .2. தேவையற்ற படம் பார்ப்பார்கள் .அரசு சிந்திக்குமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை