Advertisement
மின்வெட்டால் தமிழகத்தில் உச்சத்தில் உட்காரும் அரிசி விலை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2012,23:56 IST

காரைக்குடி: அடிக்கடி ஏற்படும் காவிரி பிரச்னையால் தமிழக மற்றும் கர்நாடகா லாரிகள் அரிசி ஏற்றி வருவதில், சிக்கல் உள்ளது. இதை காரணம் காட்டி லாரிகள் வாடகையை உயர்த்தி வருகின்றன.

தமிழகத்தின் அரிசி தேவை, கர்நாடகா டீலக்ஸ் பொன்னி மூலமே பெரும்பாலும், நிறைவேற்றப்படுகிறது. தற்போது அங்கு அறுவடை துவங்கியுள்ளதால், நூறுக்கும் மேற்பட்ட தமிழக லாரிகளில், நெல் லோடு ஏற்றி வரப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 2000 டன் நெல் கர்நாடகாவிலிருந்து, தமிழகத்துக்கு வருகிறது. தாராபுரம், காங்கேயத்துக்கு அதிக அளவிலும், காரைக்குடி புதுவயலுக்கு நாள் ஒன்றுக்கு 20 லாரிகளிலும் நெல் வரத்து உள்ளது.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட, கர்நாடகாவை கண்டித்து, அங்குள்ள விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனால் லாரிகள் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதை காரணம் காட்டி, நெல் மூடைகள் ஏற்றி வரும் லாரிகள் வாடகையை உயர்த்தின. பந்த் முடிந்த நிலையிலும், இந்த வாடகை குறையவில்லை. டன்னுக்கு 200 ரூபாய் வரை உயர்த்திவிட்டன. கடந்த வாரம் ஒரு மூடை நெல் (60 கிலோ) ரூ.1440 க்கு விற்றது,1470 ஆக உயர்ந்துள்ளது. 38 ரூபாய்க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி அரிசி, இந்த வாரம் 39 ஆக உள்ளது. இது சில்லரை விற்பனைக்கு வரும்போது, 45 ரூபாயாக உள்ளது. தொடரும் விலை உயர்வால், கர்நாடகா டீலக்ஸ் பொன்னி, வருகிற மார்ச் மாதத்துக்குள் 50 ரூபாயாக உயரும்.

மின்வெட்டு:
இது ஒரு புறம் இருக்க, மின்வெட்டு பிரச்னையாலும், நாளுக்கு நாள் அரிசி விலையை ஆலை உரிமையாளர்கள், உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 24 மணி நேரம் இயங்கிய மில்கள் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே இயங்குகிறது. ஜெனரேட்டர் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மணிக்கு ஐந்து டன் அரைக்கும் மில்லுக்கு 320 கே.வி., ஜெனரேட்டர் பயன்படுத்த வேண்டும். இதற்கு ஒரு மணி நேரத்துக்கு 100 லிட்டர் டீசல் செலவாகிறது. இந்த செலவும், அரிசி விலையில் தான் வைக்கப்படுகிறது.

புதுவயல் பள்ளத்தூரில், 150க்கும் மேற்பட்ட மில்கள் இயங்கி வருகின்றன. மின்வெட்டால், மிஷின் பழுது உள்ளிட்ட பெரும் செலவுகளை சமாளிக்க முடியாமல், அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.ஒரு மடங்கு உயர்வு: மொத்தத்தில், கடந்த டிசம்பரில் 22 ரூபாயாக இருந்த அரிசி விலை தற்போது, 40 ஆக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில், ஒரு மடங்கு விலை ஏறியது, இந்த ஆண்டில் தான். அரிசி ஆலை உரிமையாளர் சங்க மாநில இணை செயலாளர் பி.எல்.படிக்காசு : மின்வெட்டு, மழையின்மையால் விவசாய அளவிலேயே உற்பத்தி குறைவு. விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல்லை வெளியே எடுப்பதில்லை. நெல் இல்லாததால், அவற்றின் விலை நாளுக்கு நாள் வேறுபட்டு வருகிறது. அரவை மில்களில், 100 மூடை நெல் அரைக்க 8 மணிநேரம் ஆனது. தற்போது 24 மணி நேரம் ஆகிறது. ஒரு ஷிப்ட் வேலை 3 ஷிப்டாக உயர்ந்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்து கொண்டே செல்கிறது. சிறிய அளவிலான மில்கள் காணாமல் போய்விடுகின்றன.

புதுவயல் அரிசி ஆலை உரிமையாளர் கிருஷ்ணன் கூறியதாவது: மழையின்மையால், தமிழக டெல்டா மாவட்டங்களிலிருந்து வரும், கல்சர் உள்ளிட்ட ரகங்களின் வரத்து இந்த ஆண்டு பாதியளவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதுவயல், பள்ளத்தூர் மற்றும் தமிழக மில்கள் கர்நாடக நெல்வரத்தையே பெரிதும் நம்பியுள்ளன.

தற்போதைய பிரச்னையால், லாரி வாடகையை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு குறைக்கப்படுமா? என்பது சந்தேகமே. இந்த விலை உயர்வும் அரிசியில் தான் வைக்கப்படும். மழை பெய்து, மண் சிரித்தால் மட்டும் தான் இதற்கு தீர்வு, என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (36)
sethu - madurai,இந்தியா
19-டிச-201211:01:42 IST Report Abuse
sethu வயல் நிலங்கள் எல்லாம் பிளாட்டுகள் ஆனால் அரிசி விலை கூடாமல் என்ன செய்யும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Chenduraan - kayalpattanam,மாலத்தீவு
14-டிச-201218:23:50 IST Report Abuse
Chenduraan அம்மாதான் இலவச அரிசி, ச்சீ, தப்பு தப்பு , விலையில்லா அரிசிதான் கிடைக்குதுல்லா பினே ஏன் புலம்புகிறீர்கள், அடுத்தமுறையும் ஓட்டு போடுங்கள் இன்னும் அதிகம் விலையில்லா பொருட்கள் கிடைக்கும். ஒழுங்கா ஆட்சி செய்து மக்களுக்கு வாங்கும் சக்தியை உண்டாக்காமல் இரு கழகங்களும் மக்களை மாங்கா மடயங்கலாக ஆக்கி வைத்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டு போட்டால் நம்ம நிலைமை இன்னும் மோசமாகத்தான் போகும்
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Saminathan Govindaraj - chennai,இந்தியா
14-டிச-201215:16:15 IST Report Abuse
Saminathan Govindaraj கண்ணா லட்டு தின்ன ஆசையா
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-டிச-201218:08:02 IST Report Abuse
தமிழவேல் அல்வாதான் கெடைக்கும்.......
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
14-டிச-201214:18:12 IST Report Abuse
Narayan ராகுல் காந்திய கேளுங்க சார், வெறும் மூணு ரூபாதான்னு சொல்வாரு.
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-டிச-201218:07:16 IST Report Abuse
தமிழவேல் அம்மாவ கேட்டா அதவும் இலவசம்தானே ன்னு சொல்லுவார்........
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
14-டிச-201213:05:35 IST Report Abuse
Pugal ஆமாம், அரிசி விலை உயர்ந்தால் என்ன, நம் மக்கள் திரைப் படங்களுக்கு வாரி வழங்கும் வசூல் தொகைகலைப் பார்த்தால் யாரும் கஷ்ட ஜீவனம் செய்கிற மாதிரி தெரியவில்லை. இனி 3D யில் ஏற்க்கனவே பார்த்த படத்தைப் பார்க்க கோடிகள் கொட்டிக் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறான். அரிசி விலை பற்றி எல்லாம் யோசிக்க பலருக்கும் நேரமில்லை.
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
ashok - madurai,இந்தியா
14-டிச-201211:12:47 IST Report Abuse
ashok மின்வெட்டு,உர விலை உயர்வு,நூறு நாள் திட்டத்தால் வேலை செய்ய ஆட்கள் பஞ்சம் என்று இருக்கும் விவசாயிக்கு லாபமில்லை ஆனால் ஆலை அதிபர்களுக்கு லாபம்.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
christ - chennai,இந்தியா
14-டிச-201210:37:23 IST Report Abuse
christ மாநிலத்தை ஆல தகுதி இல்லாதவர்களிடம் அவர்களின் மாய பேச்சு, இலவசத்துக்கு ஆசை பட்டு ஆட்சிய ஒப்படைத்தால் மின்வெட்டு , அரிசி விலை, பேருந்து கட்டணம் இன்னும் எல்லாம உயரும்
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Raj - Chennai,இந்தியா
14-டிச-201210:10:37 IST Report Abuse
Raj மின்சார தட்டுபாடு, தண்ணீர் கிடையாது .... ஆனால் "தண்ணி" மட்டும் ஆறாக ஓடுது கழகங்கள் களங்கங்கள் மக்களே மாத்தி யோசிங்க
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Arms Sathiyan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-டிச-201208:51:13 IST Report Abuse
Arms Sathiyan வாழ்கை முழுவதும் என்ன எதிர்கால சந்ததிகூட வளமான வாழ்கை உத்திரவாதம் கிடைகிறது. அதற்க்கு ஒரு நாள் கஷ்டபட்டா தப்பே இல்ல.
Rate this:
3 members
0 members
3 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-டிச-201218:05:08 IST Report Abuse
தமிழவேல் அப்போ ......சீக்கிரம் ஊருக்கு வந்துடுங்க.......
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Ding Tong - Thiruchy,இந்தியா
14-டிச-201207:49:42 IST Report Abuse
Ding Tong கலையிலே ரொம்ப கடுப்பேத்துகிறார் my lord (லபக்கு தாஸ்)
Rate this:
0 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.