அரசியலுக்கு வருவதாக பொய் வாக்குறுதி அளிக்க மாட்டேன்: ரஜினி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:""அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை. அரசியல் என்பது பெரிய கடல்; அது குறித்து, இப்போது என்னால், எதுவும் கூற முடியாது,'' என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

சென்னை ரஜினி தலைமை ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63வது பிறந்தநாள் விழா, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:கடந்த, 1996ம் ஆண்டு, சட்டசபை பொதுத்தேர்தலின்போது, சில கருத்துக்களை நான் தெரிவித்தேன். அது தீயாக பற்றிக் கொண்டு, ஆட்சி மாற்றத்திற்கு உதவியது. தமிழகம் மற்றும் தேசிய தலைவர்கள் கட்டாயப்படுத்தியதால், நான் தேர்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டேன். அதன்பின், நான் அரசியலுக்கு வரவில்லை.எனது படம் ஒன்றை குறித்து, அரசியல் தலைவர் ஒருவர் விமர்சித்ததால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.

பதில் சொல்லாமல் இருந்தால், என்னை கோழை என்று நினைத்து விடுவார்கள். நான் என்றும் கோழையாக இருக்க விரும்பவில்லை. அதனால், எதிர்கருத்தை பதிவு செய்தேன்.இதன் பின், எந்த அரசியல் நடவடிக்கைகளிலும், நான் பங்கேற்கவில்லை. காமராஜர் போன்ற ஒரு தலைவர் தோற்கடிக்கப்பட்டார் என்றால், அதற்காக அவர், நேர்மையற்றவர் என சொல்ல முடியாது. அவருக்கு நேரம் கூடிவரவில்லை. அதனால், தோற்கடிக்கப்பட்டார்.

அரசியலை நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை. அரசியல் என்பது பெரிய கடல்; அது குறித்து, இப்போது என்னால், எதுவும் கூற முடியாது.பொதுவாக, அரசியல் கட்சி நடத்துபவர்கள் யாரும் நிம்மதியாக இல்லை. அரசியல் கட்சி தலைவர்களை வாழ வைப்பதும், வீழ்த்துவதும் அவர்களது தொண்டர்கள்தான். எனது ரசிகர்கள் என்னை வாழவைத்துக் கொண்டு உள்ளார்கள்.

என்னைப் பொறுத்தவரை, எனது ரசிகர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்; அவர்களது வீட்டை, அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்தான், மற்றவையெல்லாம்.நான் எல்லா கட்சிக்கும் பொதுவானவன். எனது பிறந்த நாளுக்கு செல்ல வேண்டுமென, இவர்கள் தாங்கள் சார்ந்துள்ள கட்சி தலைமையிடம் அனுமதி கேட்டிருந்தாலும், அனுமதித்திருப்பார்கள்.

கோபாலபுரத்திற்கும், போயஸ்கார்டனுக்கும் நான் பொதுவானவன்.நாட்டின் தலையெழுத்து என்று ஒன்று உள்ளது. தெய்வசக்திதான் முக்கியமான முடிவுகளை நம் வாழ்க்கையில் நிர்ணயிக்கிறது.இதற்கு மேல், நான் அரசியல் பேச விரும்பவில்லை. எனது ரசிகர்கள், நலமுடன் இருக்கவே, நான் விரும்புகிறேன். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, எனக்காக பிரார்த்தனை செய்த உள்ளங்கள்தான், என் மறுவாழ்வுக்கு காரணம். அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் எனத் தெரியவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

"மது, சிகரெட்டை விட்டு விடுங்கள்':மது, சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இதனால், எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இப்போது மறுபிறவி எடுத்துள்ளேன். வாழ்க்கையில் சந்தித்த, கெட்ட நண்பர்கள் மூலம், குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். என் திருமணத்திற்கு பிறகு, குடியை குறைத்துக் கொண்டேன்.ஆனால், முழுமையாக விடவில்லை. அதே போல், சிகரெட் பழக்கமும், என்னை விட்டு, அகலவில்லை.

கடந்த ஆண்டு, எனது நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுயநினைவை இழந்துவிட்டேன்.இதற்கு சிகிச்சையளிக்கும் நேரத்தில், எனது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டிற்கும் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றேன். இதற்காக, அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளினால், எனது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.இந்த எதிர்விளைவில் இருந்து, கடந்த இரு மாதங்களாகத்தான், விடுபட்டுள்ளேன். எனவே, ரசிகர்கள் மது மற்றும் சிகரெட் பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள் என ரஜினி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (84)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
17-டிச-201220:39:44 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM மனதில் அமைதி வேண்டும் .....அது அரசியலில் கிடைக்காது ....அதான் அதை விரும்பவில்லை .....என்று தோனுகிறது ...
Rate this:
Share this comment
Cancel
r.aruran - pondicherry,இந்தியா
16-டிச-201221:39:20 IST Report Abuse
r.aruran ஒருவர் உண்மை பேசும்போது அதை மதிக்க வேண்டும் , நாம் எல்லாரும் நல்லவர்களை எப்படி அறிவது என்றால் ரஜினி அவர் வேலையை 63 வயதிலும் தளராமல் செய்கிறார் ,நல்ல கருத்துக்களும் தருகிறார் , ஒன்று மட்டும் சொல்கிறேன் ரஜினி மாதிரி ஒரு பிள்ளை கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லும் ஒரு தாயை காட்டுங்கள் ,இது போதும் ரஜினி வெற்றி எவ்வளவு பெரியது என்று , அதை புரிந்து கொண்டு அவரைப்போல் நல்லவரை அரசியலுக்கு வர வைப்பது நம் கையில் தான் இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
15-டிச-201214:11:44 IST Report Abuse
ganapathy சிகரட் மது பழக்கத்தை விட்டு விடுங்கள், உங்கள் தாய் தந்தையரை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதை விட நல்லதை எவன் சொல்லுவான். அரசியல் தலைவன் என்று சொல்லுபவன் (தமிழக மக்கள் முக்கியமாக சூத்திரர்கள் இப்போது பேன்ட் போட்டு கொள்கிறார்கள் அது என்னால் தான் என்று மார் தட்டுவார் ஒருவர், ஆனால் எல்லாம் குடிகாரங்க ஆகி வேட்டி அவுந்து ரோட்டுல கிடக்க தான் காரணம் என்று மு.க உணர வில்லை) எவனு நல்லது பண்ணவில்லை. ரஜனி நல்லவர். இவர் நீண்ட நாள் வாழ வேண்டும். இவர் அரசியலுக்கு வந்தாலும் அவர் பெயரை வைத்து பணம் பண்ணும் கூட்டம் தான் இவரை சுற்றி வரும், அது தெரிந்து இவர் அரசியலை தவிர்க்கிறார். (கமல் இவர் நண்பர், அரசியலுக்கு போக வேண்டாம் என்று தீவிரமாக வலியுறுத்தி உள்ளார். காவிரி பிரச்சனையில் இவர் உண்ணாவிரதம் இருந்த பொது அதை வேண்டாம் என்று சொன்னவர் கமல்.) நான் ரஜினியை பெரிதும் நேசிக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - மெட்ராஸ் ,இந்தியா
14-டிச-201218:50:02 IST Report Abuse
முக்கண் மைந்தன் (ரஜினி) நீ அரசியலுக்கு வந்தாலும் உன்னால் ஒன்னும் கிழிக்க முடியாது. "நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே....."
Rate this:
Share this comment
Cancel
Maheswari - madurai,இந்தியா
14-டிச-201216:55:31 IST Report Abuse
Maheswari ரஜினி தமிழ்நாடுக்கு என்ன செய்தார் என்று கேக்கும் அன்பர்களே நீங்கள் தமிழனுக்கு என்ன செய்தீர்கள் என்று சொல்லவும் , pls
Rate this:
Share this comment
ashok - madurai,இந்தியா
16-டிச-201211:59:46 IST Report Abuse
ashokஒவ்வொரு தனிமனிதன் பெயர் எல்லோருக்கும் தெரிவதில்லை மக்கள் மனதில் நிர்போர்ரிடமிருந்து எதிர் பார்க்கத்தான் செய்வார்கள். உன்னுடைய பெயரோ என்னுடைடைய பெயரோ யாருக்கும் தெரிவதில்லை அதனால் யாரும் எதிர்பார்பதில்லை ...
Rate this:
Share this comment
Cancel
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
14-டிச-201214:30:57 IST Report Abuse
மோனிஷா கோமாளிகளைப்பற்றி விமரிசிப்பதை விட்டு விட்டு நம் வேலையை பார்ப்போமா?
Rate this:
Share this comment
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
14-டிச-201217:30:42 IST Report Abuse
R.BALAMURUGESAN...உண்மை, உண்மை... ஒரே ஒரு முறை கோமாளிகளிடம் நாட்டை பறிகொடுத்துவிட்டு, அது இன்னும் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டு இருப்பாது போதாதா???... பணத்துக்காக, பிழைப்புக்காக, நம்மை சந்தோஷப்படுத்துவதற்காக கோமாளி வேடமிடும் நபர்களுக்கு இத்தனை முக்கியத்துவம் தேவை இல்லைதான்... ஆனால், இது விவரம் தெரிந்த கோமாளி... இங்கிருக்கும் ஏமாளி மக்களின் மனநிலையையும், அரசியல் நிலைமையையும், அரசியவாதிகளின் திறமையையும், திராணியையும் நன்றாக புரிந்து கொண்டுள்ள திறமையான கோமாளி... நான் அரசியலுக்கு உறுதியாக வருவேன் அல்லது உறுதியாக வர மாட்டேன், என்று எப்போதுமே தெளிவாக சொன்னதில்லை இவர்... இப்படி தெளிவாக சொல்லாமல் இருந்தால்தானே, வந்தாலும் வருவாரோ என்று இங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு பயம் கலந்த சந்தேகம் எப்போதும் நிரந்தரமாக இருக்கும்... எல்லாம் தனது முக்கியத்துவத்தை (இப்போது இல்லாத...) எப்போதும் நிலைநாட்டிக்கொள்ளத்தான்... இது எப்படி இருக்கு... ...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-டிச-201213:12:07 IST Report Abuse
Pugazh V காவிரி நீரை சமமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று மலையாள நடிகர் மம்மூட்டி கர்நாடகா முதல்வருக்குக் கடிதம் எழுதினார். சிவகாசி விபத்திற்கு நிவாரணத் தொகை வழங்கினார், தன் சொந்தப் பணத்தில் இருந்து. ரஜினி உட்பட, நம் நடிகர்கள் என்ன செய்தார்கள்? அப்படியே நிவாரண தொகை வழங்குவதென்றாலும், ஒரு நட்சத்திர விழா நடத்தி, ரசிகர்களிடமிருந்து வசூலித்து தங்கள் பெயரில் கொடுப்பார்கள். ரஜினி இப்போது நினைத்ததை சாப்பிட்டு, நினைத்த படத்தில் நடித்து, நினைத்த போது இமாலயா போய்க்கொண்டு ஜாலியா இருக்கார். அவர் எல்லாம் வெய்யிலில் மீட்டிங், தெருவிலிறங்கி மக்களுடன் பேசுவது, மாதிரி எந்த கஷ்டமும் பட மாட்டார். கலைஞர், ஜெயா, ஸ்டாலின் எல்லாம் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் கூடத் தூங்க முடியாமல் கட்சிப் பணி, அரசியல் பணி என்று அல்லாடுகிறார்கள். mudhalvar என்பது கூட சுகமான வேலை கிடையாது. நாம் ஆபீஸ் முடிந்து நண்பர்கள், உணவு, தொலைகாட்சி, இணையம் என்று பொழுது போக்கலாம். பதினோரு மணிக்கு படுக்கப் போகலாம். அவர்களால் முடியாதே. ரஜினி பெரு போதும் பொது வாழ்விற்கு வரமாட்டார். ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் summaa உதார் விடுவார், படம் ஓட வேண்டுமே என்பதற்காக. அவ்வளவு தான்.
Rate this:
Share this comment
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
14-டிச-201216:34:28 IST Report Abuse
குடியானவன்-Ryot1996 மட்டும் உங்களுக்கு இனித்தார் இப்போது கசக்கிறார... ...
Rate this:
Share this comment
ashok - madurai,இந்தியா
16-டிச-201212:07:32 IST Report Abuse
ashokஅவர் ............................அவர் வேலையை மட்டும் செய்கிறார் அது 1996 என்ன 2012 ல் கூட...
Rate this:
Share this comment
Cancel
sivasankaran - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-டிச-201212:23:50 IST Report Abuse
sivasankaran ரஜினி என்கிற மாயை எல்லாம் விடுபட்டு விட்டது. இவர் இப்படித்தான் என்ன கைமாறு செய்யபோகிறேன் என்று சினிமா டைலாக் விடுவார்.உண்மையிலேயே தனது ரசிகர்களுக்கு இவர் கைமாறு செய்வதென்றால் இவரது திருமண மண்டபம் மற்றும் ஆஸ்ரமம் பள்ளி ஆகியவற்றில் மிக குறைவான கட்டணத்தில் இல்லாதோருக்கு கொடுத்து உதவலாம். அப்படி ஏதும் செய்கிறாரா? ஆம் எனில் விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.இல்லாவிட்டால் இச்செய்தியை தினமலர் அவருக்கு தெரிவிக்க கடமை பட்டுள்ளது. இவரை போல கோடிகளை குவித்தவர்கள் எளிய மக்களுக்கு உதவினால் நலம். கருணா அவர்கள் தமிழனை கூமுட்டை ஆக்கி சம்பாரித்த சொத்துகள் எல்லாம் நாசமாக போகட்டும்.ஆனால் ரஜினி அவர்கள் தனது உழைப்பால் சம்பாரிதவர். இருப்பினும் அந்த சம்பாத்தியம் எல்லாம் தமிழனுடைய காசு. இதனை அவர் உணர வேண்டும். அதுவே அவரது புகழுக்கு செல்வாக்கு தரும். இல்லாவிட்டால் அவர் ஈட்டிய பெயருக்கு மதிப்பே கிடையாது. சிவா.
Rate this:
Share this comment
Rengarajan Rajagopalan - Bangalore,இந்தியா
14-டிச-201213:29:16 IST Report Abuse
Rengarajan Rajagopalanநீங்கள் சுயமாக சம்பாதித்ததை மற்றவர்களுக்கு இலவசமாக குடுக்க முடியுமா, ஆட்டைய போட்ட காசையே அவன் அவன் பதுக்கி வெக்கறான். அரசாங்கத்தால் திரட்டப்படும் வரிகள் எல்லாமே மக்களுடைய காசு, அதையே உங்களுக்கு கொடுக்க முன்வராதவர்களை எல்லாம் விட்டு விட்டு ரஜினியை ஏன் குறை சொல்லுகிறீர்கள்....
Rate this:
Share this comment
Snake Babu - Salem,இந்தியா
14-டிச-201214:20:48 IST Report Abuse
Snake Babuநீங்கள் கூறுவது உண்மை, இருந்தும் எனக்கு தெரிந்த சில உண்மைகளை பரிமாறி கொள்கிறேன், இது வரை இவர் வாங்கிய சம்பலத்திற்கு முறைப்படி tax கட்டி இருக்கிறார். இது நாட்டுக்கு வருமானம், அடுத்து எளியவருக்கு அதிகமாக உதவியதால் இவர் வீட்டின் ஆட்சிமுறை மதுரை மீனாட்சிக்கு மாறியது அல்லது பிடுங்க பட்டது. அதன் பின் எல்லாம் கருமிதனமாகவே போனது. பெண் ஆட்சிமுறையை பற்றி சொல்லவே தேவை இல்லை, இதை கூறியதால் அவருக்கு support என்று நினைக்க வேண்டாம். அடுத்தது இன்னும் படத்தில் நடிப்பது, அவருக்கு வேண்டிய பணம் நிறையவே உள்ளது. இப்போது அவர் நடிக்க வேண்டிய அவசியமில்லை, (நம் விட்டிலேயே சிலர் இவர் வயதில் இருப்பார்கள், அவர்களை நினைத்து கொள்ளுங்கள். ) அனால் நடிக்கிறார் இதற்கு ஆயிரம் அர்த்தம் இருந்தாலும் இவருடைய ஒரு படத்தினால் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு, மற்றும் பண பரி மாற்றம் என்று யோசிக்க வேண்டும். அவர் அவர் சார்ந்த துறைக்கு நன்றாகவே சேவை செய்துள்ளார். இது அதிகம் மற்றவர்களை ஒப்பிடும்பொது. தனிபட்ட முறையில் எளியவர், நல்லவர்(தற்போது), மட்றபடி ஒரு தலைவராக அவர் ஒரு வெத்து வெட்டு...............
Rate this:
Share this comment
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
14-டிச-201217:37:08 IST Report Abuse
R.BALAMURUGESAN...உண்மை, உண்மை... அப்பட்டமான உண்மை திரு. SNAKE BABU... சூப்பர்... ஆனால் அவருடைய பணத்தை எடுத்து உதவி செய்யுங்கள் என்று கேட்பது சரியானது அல்ல... இருந்தாலும் உதவிகள் செய்தார் என்று கேள்வி... இப்போது ஆட்சி மாறியதால் (உதவிகள் எல்லாம்...) இருட்டாகிவிட்டது, தமிழகத்தை போல... ...
Rate this:
Share this comment
Cancel
vidiyal - singapore,சிங்கப்பூர்
14-டிச-201211:43:02 IST Report Abuse
vidiyal அரசியல் ஒரு கடல் என்று சொல்பவர்களால் நிச்சயம் அதை நினைத்து பார்க்கவே முடியாது. அரசியலுக்கு தேவை ஆளுமைதிறன், தைரியம், தீர்க்கமான முடிவு எடுக்கும் திறன், தொலை நோக்கு பார்வை, தெளித்த சிந்தனை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். திரு ரஜினி அவர்களே நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து பார்கவும்.
Rate this:
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
14-டிச-201211:30:39 IST Report Abuse
p.saravanan சினிமா என்பது ஒரு கலை. தனது கலை நயத்தாலும் , தனக்கென ஒரு பாதை உருவாக்கி கோடான கோடி ரசிகர்களை உலகம் முழுவதிலும் பெற்றிருக்கும் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் நிஜ வாழ்விலும் ஒருவருக்கு ஒருத்தியாய் இல்லற வாழ்வில் இன்பம் கண்டு தமிழகத்தின் ஏன் இந்தியாவின் சிறந்த நடிகராகவும், வாழ்வில் ஒரு நல்ல குனாயதிசயன்களை கொண்டு தற்பொழுது இருக்கும் கலாசாரம் , பண்பாட்டில் நான் பெரியவன் , நீ பெரியவன் என்று கூரிகொள்கிரார்கள். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்ற திருக்குறளின் கருத்துரை இந்த சமுதாயத்தில் யார் ஒருவர் ஒழுக்கமாக இருகிறார்களோ அவரே பெரியவர். இதட்கு எடுத்துக்காட்டாக தாங்கள்(ரஜனிகாந்த்) வாழ்விலும், எந்த துறையிலும் நற்பண்புகளை பெற்று சிறந்து விளங்குகிறீர்கள். உங்களுடைய சேவை நாட்டு மக்களுக்கு தேவை என்பதே அனைவரது எண்ணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்