ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:முன் பின் சந்தித்திராத இளம் ஜோடி, ரயிலில் சந்தித்து பேசிய, இரண்டு மணி நேரத்திலேயே, ஒருவரை ஒருவர் பிடித்துப் போய், திருமணமும் செய்து கொண்ட சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது.

"ஆயிரம் காலத்து பயிர்' என, வர்ணிக்கப்படும் திருமண உறவில், இரு உள்ளங்களை இணைக்க, ஜாதி, மதம், ஜாதகம், பொருத்தம் என, பலவும் பார்க்கப்படுகின்றன. ஆனால், பார்த்த சில மணி நேரத்திலேயே, இரு மனமும் ஒன்றாகி, திருமண பந்தம் வரை சென்றுள்ளது, உண்மையில் ஆச்சர்யமானது தான்.முன்னெப்போதும் இது போன்ற சம்பவம் நடந்திராது என்று கூறும் அளவிற்கான சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை மதியம், டில்லி, நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து, ரயில் ஒன்று புறப்பட்டது. இருக்கை வசதி கொண்ட அந்த ரயிலில், எதிரெதிர் இருக்கையில், ஒரு இளம் பெண்ணும், இளைஞனும் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரும், முன் பின் சந்தித்திராதவர்கள். ரயில் புறப்பட துவங்கியதும், ஒருவருக்கொருவர் பேசத் துவங்கினர். அந்த இளைஞன், லக்னோ செல்ல டிக்கெட் எடுத்திருந்தார்; இளம்பெண், கான்பூர் செல்ல டிக்கெட் வாங்கியிருந்தார்.

"நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று பேசத் துவங்கிய இந்த ஜோடி, ஒரு மணி நேரத்திற்குள், தங்களின் பணி, குடும்பம், அந்தரங்கம், ஆசாபாசம், திருமண விருப்பம், எதிர்காலம் என, அனைத்தையும் பேசித் தீர்த்து விட்டது. இதை, அருகில் இருந்த சக பயணிகள், பார்த்துக் கொண்டே இருந்தனர்.இரண்டு மணி நேரம் முடிந்த நிலையில், அலிகார் ஸ்டேஷனை, ரயில் அடைந்தது. இளம் ஜோடி, மிகவும் நெருக்கமாகி விட்டது; இருவருக்கிடையே, அன்பும், காதலும், பாசமும் வெள்ளமென பாய்ந்து கொண்டிருந்தது.எதிரே இருந்தவர்களை சாட்சியாக வைத்து, திருமணம் செய்து கொள்ள, அந்த ஜோடி விரும்பியது. பெட்டியில் இருந்த மற்றவர்களிடம், இது குறித்து வேண்டுகோள் விடுத்தது.

முகத்தில் மகிழ்ச்சியுடனும், கண்களில் கனவுகளுடன் இருந்த அந்த இளம் ஜோடியின் வேண்டுகோளை மறுக்க முடியாத, சக பயணிகள், திருமணம் நடத்தி வைக்க முன்வந்தனர். அங்கிருந்தவர்களில் ஒருவர், "இன்னும் சில நிமிடங்களில், முகூர்த்த நேரம் முடியப் போகிறது' என, கூறியதும், ஓடும் ரயிலிலேயே, திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அவர்களில் ஒருவரே, புரோகிதர் போல அமர்ந்து, மந்திரங்கள் சொல்ல, பயணிகளின் உற்சாக குரல், கைத்தட்டலில், மோதிரம் அணிந்து, அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.இந்த தகவல், எப்படியோ, அடுத்து வந்த, துண்ட்லா ரயில்வே ஸ்டேஷனுக்கு தெரிய வந்தது. அந்த ஸ்டேஷனில், ரயில் நின்றதும், இளம் ஜோடி இருந்த ரயில் பெட்டிக்குள், போலீசார் நுழைந்தனர். "ரயிலிலேயே திருமணம் செய்து கொண்டது யார்?' என கேட்டனர்.

இருவரும், தம் விருப்பத்தையும், திருமணம் செய்து கொண்டதையும், தாங்கள், "மேஜர்' என்பதையும், ஆதாரங்களுடன் போலீசாரிடம் கூறினர். முறைப்படி மாலை மாற்றி, திருமணம் செய்து கொண்டதாகவும்; தாங்கள், கணவன் - மனைவி ஆகி விட்டதாகவும் கூறினர். அவர்களை ஒன்றும் செய்ய முடியாத போலீசார், வேறு வழியின்றி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கிச் சென்றனர்.இளம் ஜோடியாக ரயிலில் ஏறி, திருமண ஜோடியாக இறங்கிச் சென்றதை, அந்த ரயில் பயணிகள், ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஜோடி இறங்கி சென்று, நீண்ட நேரம் ஆன பிறகும், இப்படியும் நடக்குமா என, பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது."கனவு போல, அந்த ஜோடியின் திருமணம் நடந்து முடிந்தது' என, சக பயணிகள், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (41)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gobi - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
17-டிச-201212:04:57 IST Report Abuse
Gobi வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
16-டிச-201222:33:45 IST Report Abuse
v.sundaravadivelu அப்டியே பஸ்ட் நைட் , வளைகாப்பு, கொழந்தைக்குப் பேர் வைக்கறது, வளர வளர ஓடி ஆடி வெளையாடறது, எல்லாமே டிரைன்லையே முடிஞ்சா பிரச்சினையே இல்லை.. இதுவெல்லாம் போக, டிரைன்லையே ஒரு கம்பார்ட்மண்டுல பள்ளிக்கூடம், அப்புறம் காலேஜ் .. கடேசியா ரயில்வேலையே ஒரு வேலையும் போட்டுக் கொடுத்தா ... அடடடாட.... ஒரு படமே எடுத்துடலாம் போல.."ரயிலோட மயிலு" ன்னு ஒரு டைட்டிலும் வச்சு..
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
16-டிச-201220:49:57 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM மனங்கள் ஒன்று சேர்ந்தது.....ரயில் மூலம் .....பயணிகள் ஆசிர்வாதத்தால் ....
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
15-டிச-201221:10:31 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM ரயில் மூலம் அமைந்த இவர்கள் வாழ்வு ....தண்டவாளத்தின் விரிசல் போல ...இருக்காமல் ...என்றும் பிரகாசிதிட வாழ்த்துகள் .....
Rate this:
Share this comment
Cancel
Deepa - chennai,இந்தியா
15-டிச-201220:19:09 IST Report Abuse
Deepa இது தான் திருமணம்.பெற்றோர் பார்த்து முடிவு செய்த திருமணத்தை விட இது எவ்ளோ மேல்.
Rate this:
Share this comment
Cancel
natharsha - deira,ஐக்கிய அரபு நாடுகள்
15-டிச-201218:44:55 IST Report Abuse
natharsha பெஸ்ட் ஒப் லக் கபுள்ஸ் ..........
Rate this:
Share this comment
Cancel
Thenkasi karan - Thenkasi,இந்தியா
15-டிச-201211:07:09 IST Report Abuse
Thenkasi karan நீங்கெல்லாம் நல்லா வருவிங்க... வரணும்.. வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
lenin - Tirunelveli,இந்தியா
15-டிச-201210:05:01 IST Report Abuse
lenin இதை படிக்கும் காதல் ரோமியோக்களால் ரயிலில் பயணம் செய்யும் இளம் பெண்களுக்கு ஆபத்து உண்டாகும்.
Rate this:
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
14-டிச-201219:32:08 IST Report Abuse
GURU.INDIAN ஒருவேளை ரயிலில் முதலிரவு முடிந்து இருந்தால் .இவர்கள் வீடுபோய் சேர்வதற்குள் விவாகரத்துகேட்டு நோட்டீஸ் விட்டு இருப்பார்கள் . இதுதான் இன்றைய காதல் இது தேவையா ? இதெல்லாம் ஒரு விளம்பரம்
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
17-டிச-201200:12:13 IST Report Abuse
babuஇதுக்கு பேர் தான் டேட்டிங் வாழ்க்கை,...
Rate this:
Share this comment
Cancel
K.JAGATHIS Lenin - chennai,இந்தியா
14-டிச-201219:24:03 IST Report Abuse
K.JAGATHIS Lenin இருமனம் சேர்வதுதான் திருமணம் அதை இவர்கள் நிறுபித் துவிட்டர்கள் வாழ்த்துக்கள்..............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்