Supreme court issue notice to 3 states | இந்து சமய அறநிலைய துறை விவகாரம்: மூன்று மாநில அரசுகளுக்கு "நோட்டீஸ்'| Dinamalar

இந்து சமய அறநிலைய துறை விவகாரம்: மூன்று மாநில அரசுகளுக்கு "நோட்டீஸ்'

Updated : டிச 14, 2012 | Added : டிச 14, 2012 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்து சமய அறநிலைய துறை விவகாரம்: மூன்று மாநில அரசுகளுக்கு "நோட்டீஸ்'

புதுடில்லி :"தமிழகம், புதுவை மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள, இந்து சமய அறநிலைய துறைகள் அரசியல் சட்டத்திற்கு விரோதமானவை' என, அறிவிக்க கோரிய வழக்கில், மூன்று மாநில அரசுகளுக்கும் "நோட்டீஸ்' அனுப்ப சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டது.

"தமிழகம், புதுவை மற்றும் ஆந்திர மாநிலங்களில் செயல்படும், இந்து சமய அறநிலைய துறைகள், இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமான அமைப்புகள்' என, அறிவிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், இந்து தர்ம ஆச்சார்ய சபா தலைவர், தயானந்த சரஸ்வதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், "அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோவில்களில், வழிபாடு, மதம் சம்பந்தப்பட்ட செயல்களில், அறநிலைய துறையினர் தலையிடுகின்றனர். கடவுளின் பெயரில் வசூலிக்கப்படும் நிதி, அரசின் பிற துறைகளுக்கு மாற்றி விடப்படுகிறது. இதனால், கோவில்களில் இருந்து, அரசு வெளியேற வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கு, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக, மூன்று மாநில அரசுகளுக்கும் "நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
15-டிச-201218:46:17 IST Report Abuse
muthu Rajendran தமிழ் நாட்டில் விடுதலைக்கு முன்பு ஆலயங்கள் தனிப்பட்ட வாரியத்தின் கண்காணிப்பில் தான் இருந்து வந்தது. அந்த வாரியத்தால் சரிவர ஆலயங்களை கட்டிகாக்க முடியவில்லை எனவே அரசின் துறை ஒன்றின் கண்காணிப்பில் இருந்தால் தான் ஆலயங்கள் நலன் பாதுகாக்க படும் என்று தான் சட்டங்கள் பல இயற்றப்பட்டு இறுதியாக 1959 ஆம் தமிழ் நாடு இந்து சமய அறநிலைய சட்டம் முறையாக குடியரசு தலைவர் அங்கீகாரம் பெற்று செயல்படுத்தப்படும் சட்டம் .இந்த சட்டம் கூட ஆலயங்கள் நிருவாகம் குறித்தே செயல்படுத்த படுகிறது. ஆலயங்களுக்கு சொந்தமான நிலங்கள் , சொத்துக்கள் மற்றும் விலைஉயர்ந்த பொருள்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம் இது. ஆட்சியாளர்கள் மாறும்போது சில அதிகாரிகள் சிற்சிறு தவறுகள் செய்யலாம் அதற்காக இந்த சட்டமே தவறு என்று கூற முடியாது.இந்த சட்டத்தின்படி ஆலய வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்களை அதிகாரிகளாக ,அரங்கவலர்களாக நியமித்தால் சிறப்பாக ஆலயங்கள் பராமரிக்கப்படும். அரசு துறையாக இருப்பதே சரி இதை தவிர்த்து தனிப்பட்ட குழுவிடம் சென்றால் சரியாக இருக்காது. சகல மக்களும் வேறுபாடின்றி வழிபாடு செய்ய அரசு துறை கீழ் இருப்பதே நல்லது. மேன்மைமிகு உச்ச நீதி மன்றம் ஒரு அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அறிவிப்பு தான் செய்திருக்கிறது. உரிய பதிலை முறையாக அரசு நிச்சயம் தெரிவிக்கும். தற்போதுள்ள இந்து சமய அறநிலைய துறை ஆணையர் நீண்ட அனுபவம் பெற்றவர். எனவே உரிய முறையில் தங்கள் தரப்பு பதிலை துறையினர் தாக்கல் செய்வார்கள் .பொதுவாக ஆலயங்கள் வருவாய் அனைத்தும் சட்டவிதிகளுக்கு உட்பட்டு சமய தர்ம பணிகளுக்கே செலவிடப்பட்ட வேண்டும். பக்தர்களுக்கு மேலும் வசதிகள் செய்து நேர்மையாக நிருவாகம் நடத்த வேண்டும். தற்போது ஆலய நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்கபட்டு வருவது பாராட்டத்தக்கது.
Rate this:
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
15-டிச-201223:39:39 IST Report Abuse
dori dori domakku doriஆமா ரொம்ப அனுபவம் பெற்றவரு .............
Rate this:
Share this comment
Cancel
B.J.P. Madhavan - chennai ,இந்தியா
15-டிச-201217:51:35 IST Report Abuse
B.J.P. Madhavan தமிழகத்தில் அற நிலைய வர்ரியத்தின் நிர்வாகம் சரியாக நடைப்பெறவில்லை. உதாரணத்திற்கு:- வருகின்ற 31 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு செல்லும் நான் ஜனவரி 1 & 2 அந்த ஆலயத்தின் தாங்கும் விடுதியில் தங்குவதற்கு ஆன் லைனில் முன் பதிவு செய்ய முயற்சிக்கிறேன். அனால் கடந்த ஒருவாரமாக அந்த ஏற்பாடு இயங்கவில்லை. ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செய்யப்பட்டிருக்கும் இதை சரி செய்யக்கூட சம்பந்தப்பட்ட்ட ஆலயத்தின் நிர்வாகிகளுக்கு விருப்பமும், கடமையும் இல்லை என்பதை இது தெளிவாக காட்டுகிறது. இனியாவது அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும் என்று நம்புகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
tamilan - chennai,இந்தியா
15-டிச-201210:11:03 IST Report Abuse
tamilan கோவிலுக்கும், கோவில் சார்ந்த சுற்றுலா துறை, கொஇயுஇலில் வழங்கப்படும் அன்னதானம், கோவில் நான்கு கால் ஜீவன்கள், பூசாரி சம்பளம், ஏழை பிள்ளை களுக்கு இலவச புத்தஹம் வழங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தலாமே . இது போன்ற சட்டங்கள் கடவுளை நம்பும் இந்த ஆட்சியில் செய்தால் ஒழிய இதற்க்கு விடிவு ஒன்று என்பது கிடையாது. இல்லையேல் கொல்லைஹல் தொடரும்.
Rate this:
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
15-டிச-201208:52:35 IST Report Abuse
Dhanabal இந்து மதத்தை பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்களும், காசு ஓன்று மட்டுமே குறிக்கோளாக கொண்ட கடவுள் நம்பிக்கை அற்றவர்களும் ,இந்து சமயத்திற்கு முற்றிலும் எதிரான மனப்பான்மை உடையவர்களும் , இந்து சமய அறநிலைய துறையில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் போர்வையில் பெருமளவில் ஊடுருவி உள்ளனர். இதனால் கோவில் சொத்துக்கள் பெருமளவில் கொள்ளை போகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.மேலும் இந்தியாவில் மொகலாயர்கள் ,ஆங்கிலேயர்கள் போன்ற பிற சமயத்தவர்களின் ஆட்சி காலத்தில் கூட , பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலேயும் தன்னை அழிவிலிருந்து காப்பாற்றி கொண்ட இந்து மதம் ,சுதந்திர இந்தியாவில் அறநிலையத்துறையின் பெயரால் அழிக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை ...
Rate this:
Share this comment
Cancel
Eswaran - Palani,இந்தியா
15-டிச-201208:42:17 IST Report Abuse
Eswaran அரசு வெளியேறினால் மட்டும் போதாது கோவில் சொத்துக்களை பாதுகாக்க ஒரு முறையான அமைப்பு வேண்டும் . கடவுள் நம்பிக்கையே சிறிதும் இல்லாதவர்களிடம் இந்த நிர்வாகம் சென்று விடக் கூடாது.தனி சுயேட்சயான அமைப்பிடம் நிர்வாகம் இருக்க வேண்டும்.அதற்க்கான தகுதி உள்ள குழுவில் முழுமையாக நமது மதத்தை உணர்ந்தவர்களாகவும் எந்த புகாரிலும் பெயர் அடிபடாதவராகவும் இருக்க வேண்டும்.முக்கியமாக்க தனிமனித ஒழுக்கம் நிறைந்தவராகவும் உறவு குடும்பம் இல்லாத பிரமச்சாரியாக இருப்பது அவசியம். நமது கோவில்களில் வரும் வருமானம் இந்து மதத்தை வளர்க்கப் பயன்படுத்த வேண்டும். இதெல்லாம் நடக்குமா? ஈஸ்வரன்,பழனி.
Rate this:
Share this comment
Cancel
Bksbase Boy - kanchipuram ,இந்தியா
15-டிச-201206:49:37 IST Report Abuse
Bksbase Boy ஹிந்து கோவில்களில் வழிபடவும்,அதன் நிவாகத்திலும் வேதங்களின் மீது நம்பிக்கை உள்ள இந்துக்களுக்கு மட்டுமே உரிமையை கொடுங்கள், நாத்திகவாத, ஹிந்துமத துரோக அரக்கர்களை வெளியேற்றுங்கள், மக்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் அந்த (ஹிந்து கோவில்களுக்கே) கோவில் மேம்பாட்டிற்காகவும் பக்தர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் மட்டுமே செலவழிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
V Balasubramanian - madurai,இந்தியா
15-டிச-201205:52:24 IST Report Abuse
V Balasubramanian நடந்துவந்த தவறுகளுக்கு ஒரு நீதிமன்றம் மூலம் நல்லதீர்வு ஏற்படவேண்டும் அனைவரும் வரவேற்க்கதக்க செய்தி
Rate this:
Share this comment
Cancel
SARGUNAM - SINGAPORE  ( Posted via: Dinamalar Android App )
15-டிச-201205:13:01 IST Report Abuse
SARGUNAM இந்து மதத்தை வளர்க்கிறேன் என்று தன்னையும் தன் சுற்றத்தையும் நன்கு செழிப்பாக வைத்து கொள்ள மட்டுமே மடங்களும் சாமியார்களும் செய்து வருகின்றனர் இந்த லட்சணத்தி்ல் அரசாங்கமும் தட்டி கேட்காமல் போனால என்ன ஆகும் என்று புரியாதவர்களின் வெற்று கூச்சல் இது அனைத்து மடங்களையும் அரசாங்கம் கைப்பற்றி முறையான நிர்வாகம் செய்ய வேண்டும் என்பது பெரும்பாலன பொதுமக்களின் எண்ணம் ஆகும்
Rate this:
Share this comment
Cancel
informed - madurai,இந்தியா
15-டிச-201203:46:39 IST Report Abuse
informed நல்லது. அயோக்யர்கள் நீதி மன்றத்தில் பதில் சொல்லட்டும்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
15-டிச-201203:31:57 IST Report Abuse
மதுரை விருமாண்டி "கோவில் சொத்தை நான் திங்கிறதா, நீ திங்கிறதா..", என்பதில் இரண்டு திமிங்கிலங்கள் சண்டை போடுகின்றன.. உண்டியலில் கோடி கோடியாய் காசு போடும், இல்லை, இல்லை - கொட்டும் மக்களுக்கு இது புரிந்தால் சரி...
Rate this:
Share this comment
dravida Aryan - thanjavur,இந்தியா
15-டிச-201211:07:04 IST Report Abuse
dravida Aryanதிரு விருமாண்டி அவர்களே, சமய சான்றோரை அரசியல் கட்சிவாதிகளுக்கு இணையாக ஒப்பிடுதல் தவறாகும். அரசு சார்பில் பார்வையாளரும் கணக்கு தணிக்கையாளரும் திருக்கோவில் நிர்வாகத்தில் பங்கு பெறட்டும். நிர்வாகம் அச்சமயம் சார்ந்த மக்கட்சமூக நல்லோர் குழு பொறுப்பிலும் அச்சமூக பெரியோர் வழிகாட்டுதலிலும் நடைபெற வேண்டும். அரசுக்கும் சமய வழிபாடு தளங்களுக்கும், பண்டிகைகளுக்கும் (வருஷப்பிறப்பு உட்பட) நேரடி சம்பந்தம் கிடையாது. அரசு தலையீடு பெருந்தவறு. தவறுகள் திருத்தப்படுவது பாரத சமூஹத்துக்கு நல்லது. ...
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
16-டிச-201203:37:52 IST Report Abuse
மதுரை விருமாண்டிதஞ்சைக்காரரே, உண்மையான சமய சான்றோருக்கு காசு பணத்தில் அக்கறை இருக்காது.. இருக்கக் கூடாது... துறந்தவனுக்கு பணம் எதற்கு ? இந்த சண்டை, சமயம் பற்றியோ, சாமி பற்றியோ இல்லை... கோவில்களின் வசம் இருக்கும் கோடானுகோடி சொத்துக்களை நிர்வகிக்கவும், அதில் முடிந்த அளவு சுருட்டவும் தான்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை