Advertisement
மனைவிகளை தவிக்க விட்டு ஓடும் கணவன்கள்: தடுக்க பஞ்சாப் மாநில அரசு தீவிரம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சண்டிகார்:பஞ்சாபில், மனைவிகளை தவிக்க விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதற்கு கிடுக்கிப்பிடி போடும் நடவடிக்கைகளை, மாநில அரசு தீவிரப் படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், சண்டிகாரை சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகள், சரப்ஜித் கவுர். 10 ஆண்டுகளுக்கு முன், சரப்ஜித்துக்கும், பஞ்சாபை சேர்ந்த, குர்பிரீத் என்பவருக்கும், மிக தடபுடலாக திருமணம் நடந்தது.இந்த திருமணத்துக்காக, சரப்ஜித்தின் தந்தை, தன் தகுதிக்கு அதிகமான பணத்தை, கடன் வாங்கி செலவழித்தார்.குர்பிரித், ஜலந்தரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே, இவர்களுக்கு, பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, பணியாற்றுவதற்காக, பிரிட்டனுக்கு செல்லப் போவதாக, குர்பிரித் தெரிவித்தார்.இதற்கு, சரப்ஜித் சம்மதம் தெரிவிக்கவே, குர்பிரித், பிரிட்டனுக்கு பறந்தார். இதற்கு பின், அவர், மீண்டும், பஞ்சாப்புக்கு திரும்பவே இல்லை. அவரை தொடர்பு கொண்டபோது, "எனக்கும், சரப்ஜித்துக்கும் நடந்த திருமணம், சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை. இதனால், என்னை எதுவும் செய்ய முடியாது'என, கூறி விட்டார்.இதையடுத்து, தன் கணவருக்கு எதிராக, பஞ்சாப் குடும்ப நல கோர்ட்டில், சரப்ஜித் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

கணவர் துணையின்றி, தன் குழந்தையுடன், வறுமையில் வாடி வருகிறார், அவர். சரப்ஜித்தை போலவே, பஞ்சாபில், ஏராளமான பெண்களை, அவர்களது கணவர்கள், தவிக்க விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவதும், வேறு திருமணம் செய்து கொள்வதும், அதிகரித்து வருகிறது.பஞ்சாபில் மட்டும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாநில அரசே கூறியுள்ளது. இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க, பஞ்சாப் மாநில அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, மாநிலத்தில் நடக்கும், ஒவ்வொரு திருமணத்தையும், முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்றும், திருமணங்கள், குருத்வாராக்களில் நடந்தாலும், அவற்றையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்றும், சமீபத்தில், சட்டசபையில், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iravi - Chennai,இந்தியா
16-டிச-201202:29:16 IST Report Abuse
iravi பதிவு செய்யப்படாவிட்டாலும் அவரவர் வழக்கப்படி பலர் முன்னிலையில் நடைபெற்ற திருமணங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றவையாகவே கருதப்படுகின்றன நம் நாட்டில். இவர்கள் வெளிநாடுகளில் செய்துகொள்ளும் மறுமணத்தை ரத்து செய்து அவர்களை வழிப்படுத்தும் வாய்ப்பு நிச்சயம் இருக்கும். அந்த வழிமுறைகளை பஞ்சாப் அரசு மேற்கொண்டு இந்த அப்பாவிப் பெண்களை முதலில் காப்பாற்றவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
kamarud - ooty,இந்தியா
15-டிச-201213:45:50 IST Report Abuse
kamarud கணவன்களை தவிதவிக்க விட்டு ஓடிவிடும் மனைவிகளை என்ன செய்வதாம் ?
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
15-டிச-201207:16:38 IST Report Abuse
Krish பஞ்சாபில் இரண்டு குடும்பத்தில் ஒரு ஆண் ராணுவத்திலும், இரு குடும்பத்தில் ஒரு ஆண் வெளிநாட்டிலும் வுள்ளனர்....ஆகவே அவர்களுக்கெல்லாம் இந்த மேட்டர் எல்லாம் ஒரு சப்பை மேட்டர்தான் .. பெண்கள் தங்கள் சொந்த கால்களால் ,கல்வி அறிவோடு பொருளாதார சுதந்தரம் அடையாத வரை இது போன்ற சம்பவங்கள் தவிர்க்க முடியாதவையே..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-டிச-201204:55:55 IST Report Abuse
Nallavan Nallavan தொலையட்டும், தொல்லை தாங்காம எங்கேயாவது ஓடிப்போயி நிம்மதியா இருந்தா சரி.கொடுத்து வெச்சவனுங்க
Rate this:
Share this comment
Rajagiri.Siva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
15-டிச-201213:18:42 IST Report Abuse
Rajagiri.Sivaயப்பா நல்லவனே நீயும் அந்த ரகமா (மாதிரியா)...?...
Rate this:
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
15-டிச-201214:30:43 IST Report Abuse
Hari Dossஉன் சகோதரியின் நிலையும் இதே போல் இருந்தால் இதே போல் தான் சொல்வீரா?...
Rate this:
Share this comment
Neeraja - Bangalore,இந்தியா
17-டிச-201217:05:09 IST Report Abuse
Neerajaசரியாக சொன்னிர்கள் ஹரி தாஸ்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்