சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின், பாதுகாப்பிலிருந்த எஸ்.ஐ.,யை, அ.தி.மு.க.,கவுன்சிலர் கன்னத்தில்அறைந்தார். இதனால்,இரு தரப்பினரிடையேமோதல் ஏற்படும் நிலைஏற்பட்டது.
நாஞ்சில் சம்பத்தின்ஆதரவாளர்கள், அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி,சென்னை கட்சி தலைமையகத்தில் நேற்று நடந்தது.அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மூத்தநிர்வாகிகள் உள்ளிட்டபலர் வந்திருந்தனர். முதல்வர் ஜெயலலிதாவந்த காரை, மீண்டும்அவர் செல்வதற்கு ஏதுவாக, திருப்பி நிறுத்தும்பணியை, போலீசார்செய்து கொண்டிருந்தனர்.அப்போது, அங்கிருந்தவர்களை விலகிச் சென்று, காருக்கு வழிவிடுமாறு, போலீசார் கூறிக்கொண்டிருந்தனர். அப்போது, மேயர்சைதை துரைசாமியுடன், மாநகராட்சி கவுன்சிலர் சின்னையன், இடையில்புகுந்து வந்தார். இவரை,ஒதுங்குமாறு கூறியஎஸ்.ஐ., செல்லதுரை,விலகுமாறு தள்ளிஉள்ளார்.
இதனால் கோபமடைந்த சின்னையன்,எஸ்.ஐ., செல்லதுரை கன்னத்தில், "பளார்' என,அறைந்தார். திக்குமுக்காடிய, எஸ்.ஐ., சின்னையனை மீண்டும் தள்ளினார். இருதரப்பினருக்கும் இடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு, காரசாரமாக பேசத் துவங்கினர்.அருகில் இருந்த போலீசார், இருவரையும் பிரித்துஅழைத்துச் சென்றனர்.முதல்வர் ஜெயலலிதா,கட்சி அலுவலகத்துக்குள்இருக்கும்போது, இப்பிரச்னை வெளியில்நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையே, "கூட்டத்தில் தெரியாமல் நடந்துவிட்டது. பிரச்னையைபெரிதுபடுத்தாதீர்கள்' என, சின்னையன், போலீசாரிடம் மன்றாடினார்.ஆனால், சின்னையன் அடித்தது குறித்து, முதல்வரிடம் முறையிடப்போவதாக, பாதுகாப்பு போலீசார் முடிவு செய்துஉள்ளனர்.
ஜெயலலிதா சென்ற "லிப்ட்' மக்கர்:
அ.தி.மு.க., தலைமையகத்துக்கு ஜெயலலிதாவரும்போது, அங்குள்ள "லிப்டி'ல் தான் செல்வார். அவருக்காக மட்டுமே "லிப்ட்' இயக்கப்படும். மற்றநேரங்களில், "லிப்ட்' "ஆப்' செய்து வைக்கப்பட்டிருக்கும். தலைமையகத்துக்கு, ஜெயலலிதா நேற்று வந்தபோது, "லிப்டி'ல் செல்ல பட்டனை அழுத்தினார்."லிப்டி'ன் கதவு திறப்பதும், மூடுவதுமாக இருந்ததே தவிர, இயங்கவில்லை. உடனே, அங்கிருந்தஅலுவலக மேலாளர் மகாலிங்கத்தை அழைத்தார்.அவரும், பட்டனை அழுத்திப் பார்த்தும், "லிப்ட்'கதவு முழுமையாக இயங்கவில்லை. சில நிமிடங்களில், மீண்டும் ஒழுங்காக இயங்கத் துவங்கியது.வழக்கமாக, ஜெயலலிதா மட்டுமே, "லிப்டி'ல்சென்று வருவார். நேற்று, மேலாளர் மகாலிங்கத்தையும், உடன் வருமாறு "லிப்டி'ல் அழைத்துச் சென்றார்.