Modi government protecting the corrupt: Sonia | ஊழல்வாதிகளை பாதுகாக்கும் மோடி அரசு: சோனியா பாய்ச்சல்| Dinamalar

ஊழல்வாதிகளை பாதுகாக்கும் மோடி அரசு: சோனியா பாய்ச்சல்

Updated : டிச 16, 2012 | Added : டிச 15, 2012 | கருத்துகள் (47)
Advertisement
மோடி அரசு: சோனியா பாய்ச்சல்,Modi government protecting the corrupt: Sonia

ஆமதாபாத்:""குஜராத் மாநிலம், அனைத்து துறைகளிலும், வளர்ச்சி அடைந்துள்ளதாக, முதல்வர் நரேந்திர மோடி, ஒரு, மாயை ஏற்படுத்தி வைத்துள்ளார். இதன்மூலம், மாநில மக்களை, அவர், தவறாக வழி நடத்துகிறார்,''என, காங்கிரஸ் தலைவர் சோனியா பேசினார்.

குஜராத்தில், சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல், வரும், 17ம் தேதி நடக்கிறது. இதனால், அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள், உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. கலோல் என்ற இடத்தில், நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, அந்த கட்சி தலைவர் சோனியா பேசியதாவது:காங்கிரஸ் தலைமையில், மத்தியில் உள்ள, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அனைத்து மாநிலங்களுக்கும், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, ஏராளமாக நிதி அளித்து வருகிறது. இந்த நிதியை, நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத் மாநில அரசு, தவறாக பயன்படுத்துகிறது.

இந்த நிதி, மாநில அரசுக்கு நெருக்கமானவர்களின் வளர்ச்சிக்காகவும், சில வர்த்தர்கள் பலன் அடையவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசு சார்பில், குஜராத்துக்கு, 3,128 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. இவற்றில், 800 மெகாவாட் மின்சாரத்தை, லாபத்துக்காக, குஜராத் மாநில அரசு, விற்பனை செய்து விடுகிறது. இதன்மூலம், மின்சாரம் கிடைக்காமல் அவதிப்படும் மக்களுக்கு, அநீதி இழைக்கப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள, சர் கிரீக் பகுதியை, பாகிஸ்தானுக்கு தாரை வார்க்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, நரேந்திர மோடி, பொய் பிரசாரம் செய்கிறார். நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில், விளையாடக் கூடாது.குஜராத்தில் ஆட்சியை பிடிப்பது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல; குஜராத்தின் பாரம்பரியத்தை காப்பாறவும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுவதும், எங்கள் நோக்கம்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குஜராத்தில், அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையிலான திட்டங்கள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு சோனியா பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rammeshbabu - bangalore,இந்தியா
15-டிச-201222:04:58 IST Report Abuse
rammeshbabu சல்லடை ஊசி பார்த்து சொல்லிச்சாம், உண்கிட்ட ஒரு ஓட்டைன்னு....
Rate this:
Share this comment
Cancel
K.vijayaragavan - chennai,இந்தியா
15-டிச-201218:50:08 IST Report Abuse
K.vijayaragavan ஊழலில் ஊறித்திளைக்கும் காங்கிரசின் தலைவி சோனியாவா இதை கூறி இருப்பது?ஊழல் பெருச்சாளிகளை மந்திரி சபையில் வைத்துக்கொண்டு, ஊழலை ஊட்டி வளர்த்த கருணாநிதியோடு கூட்டு வைத்துக்கொண்டு, ஆயுதங்கள் வாங்குவதில் ஊழல், 2ஜி ஊழல்,அந்த ஊழல் இந்த ஊழல் என்று நாளுக்கொரு ஊழல் புகாரில் சிக்கி நாற்றமெடுத்து போயிருக்கும் மத்திய அரசின் தலைவியா ஊழலை பற்றி பேசுவது? அதுவும் யார் மீது?அறுபத்தைந்தாண்டு காலம் நாட்டை, ஊழல் நாற்றமெடுத்து புரையோட வைத்த காங்கிரஸ் கம்பெனியின் இத்தாலிய முதலாளியம்மாவா மோடியை குறை சொல்வது?குஜராத்தில் காங்கிரசுக்கு பாடை தயாராகி விட்டது என்று தெரிந்த வயிற்று எரிச்சலில் வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டி இருக்கிறார். தில்லுமுல்லு,ரகளை எதுவும் இல்லாமல் தேர்தல் நடந்த ஆத்திரம் கண்ணை மறைத்து விட்டது. இதுவே காங்கிரசின் அழிவுக்கு அத்தாட்சி. அடுத்த சுற்று தேர்தலும் நல்லபடியாக நடந்து, மீண்டும் மோடி முதல்வராக வேண்டும். இத்தாலிய இளவரசிக்கு பொறாமையால் வயிறு எரிந்து அல்சர் வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Raja - Singapore  ( Posted via: Dinamalar Android App )
15-டிச-201216:15:26 IST Report Abuse
Raja அது சரி இவனுங்களை என்ன சொல்றது ஓட்டு போடுற நாமதான் மாறனும்
Rate this:
Share this comment
Cancel
Ramalingam P - RAIPUR,இந்தியா
15-டிச-201216:04:38 IST Report Abuse
Ramalingam P இது அங்கு இருபவர்களுக்கு காலத்தால் கிடைத்த வாய்ப்பு இந்த முறை மீண்டுள் எழமுடியாமல் congressi அடித்து தும்சம் செய்யவேண்டும். குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் .. நல்ல தலைவர்கள் வளர வேண்டும் .. இவளுக்கு ஹார்ட் அட்டக் வரவேண்டும்
Rate this:
Share this comment
Parthasarathy Sridharan - chennai,இந்தியா
15-டிச-201219:50:17 IST Report Abuse
Parthasarathy Sridharanஇருந்தால் தானே அட்டாக் வர? இலங்கை தமிழர்கள் விஷயத்தில் பார்த்துவிட்டோம். இன்னும் எத்தனை பார்க்க?...
Rate this:
Share this comment
Cancel
Jazzravi - chandigarh,இந்தியா
15-டிச-201215:00:46 IST Report Abuse
Jazzravi எப்பவுமே அது எங்க சொத்து நீங்க செஞ்சா அது தப்பு காங்கிரஸ் பார்த்துட்டு சும்மா இருக்காது..
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
15-டிச-201214:21:30 IST Report Abuse
K.Sugavanam ஐயோ பாவம்.குஜராத்திகள் இவரை பார்த்து கை கொட்டி சிரிக்க போகிறார்கள்.ஊழலை பற்றி பேச இவரை விட தகுதியான அனுபவ சாலி இல்லை என்று...
Rate this:
Share this comment
Cancel
yesubalan - coimbatore,இந்தியா
15-டிச-201212:40:58 IST Report Abuse
yesubalan இந்த கருத்து களம் உங்களுக்காக அமைக்கப்பட்ட களம் ,ஆதலால் நீங்கள் பேசும் வார்த்தை எல்லாம் விக்கெட்டாய் மாறும் என்று கருத்து பதிவு செய்யும் நண்பர்கள் ,பொது களத்தில் விளையாடும் போது தான் உங்கள் பந்தின் உண்மையான பலம் தெரியும் .
Rate this:
Share this comment
Cancel
Kuwait Tamilan - Salmiya,குவைத்
15-டிச-201212:25:52 IST Report Abuse
Kuwait Tamilan தம்பி ராதாக்ருஷ்ண, மொதல்ல உன்னோட மொக்கைய நிறுத்து, அம்மாவும் நீயும் ஒரே கூட்டனிங்கரதல எப்பவும் ஒரேமாதிரி ஜால்ரவ தட்டாதே. தமிழ் நாட்டுல நடக்கறது உங்க அம்மாவோட ஆட்சி, வந்து 2 வருடம் முடிய போகுது. எவளோ ஆணிய புடுங்கி இருக்கீங்க. டெங்கு, கரண்ட், தண்ணி இப்படி எந்த பிரச்சனையும் உங்க அம்மாவால சரி பண்ண முடியல. இப்பவும் உங்களால கருணாநிதிய திட்டி தான் ஆட்சி பண்ண முடியுது. அப்போ நீங்க எல்லாம் ராஜினமா பண்ணிட்டு வெளிய போக வேண்டியதுதானே.
Rate this:
Share this comment
Cancel
c.nagarajan - chennai,இந்தியா
15-டிச-201211:41:15 IST Report Abuse
c.nagarajan இதுக்குத்தான் காந்தி அன்னிக்கே சொன்னார் விடுதலை கிடைத்ததும் காங்கிரஸ் இயக்கத்தை கலைத்துவிட வேண்டும் என்று கேட்டார்களா? இன்னிக்கு பாருங்க இந்தியர்களுடைய தலைவிதியை, இந்தம்மா காங்கிரஸ் கட்சிக்கு என்னத்தை செஞ்சாங்க இவங்களை தலைவரா போட்டுட்டு இருக்காங்க, ராஜிவ்காந்தியோட மனைவின்ற ஒரு தகுதியை தவிர வேற என்ன தகுதி இருக்கு. தங்கள் கட்சியில ஆயிரமாயிரம் கோடி ஊழல் செய்றவங்களை இன்னும் மத்திய அமைச்சரா வெச்சிக்கிட்டிருக்கிற ஒரு கேடு கெட்ட கட்சி இதுவாத்தான் இருக்கும். இப்படி இருக்க இந்தம்மாவுக்கு குஜராத் மேல ஒரு கண்னு இந்தியாவிலேயே குஜராத்தான் தற்போது நல்ல வளர்ச்சியில இருக்கு அங்கயும் இவங்க ஆட்சி வந்தா குஜராத் அடி பாதாளத்துக்கு போய்விடும்.
Rate this:
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
15-டிச-201211:09:39 IST Report Abuse
Karthi பாதி இந்தியாவை கொள்ளையடிச்சு பல தலைமுறைக்கு சொத்து சேர்த்துடீங்க, மீதி இந்தியாவையாவது விட்டுவையுங்க, தயவு செய்து இத்தாலியில பொய் செட்டில் ஆகிடுங்க, போகும்போது மஞ்ச துண்டு குடும்பத்தையும் கூட்டிகிட்டு போய்டுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை