புதுடில்லி : நேரடி மானிய திட்டத்தை, ஜனவரி, 1ம் தேதி முதல் அமல்படுத்துவதற்குரிய ஆயத்த பணிகளை, போர்க் கால அடிப்படையில் துவக்கும்படி, அனைத்து அமைச்சகங்களையும்,பிரதமர் அலுவலகம் கேட்டு கொண்டு உள்ளது.
சுரண்டல்
பொது வினியோக திட்டம், முதியோர் ஓய்வூதிய பலன், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் போன்ற பல திட்டங்களுக்காக, மத்திய அரசு, நிதியுதவி மற்றும் மானியம் வழங்குகிறது.ந்த பலன்கள், நேரடியாக பயனாளி களைச் சென்றடையாமல், மூன்றாம் நபர் வழியாக செல்வதால், சுரண்டல், ஏமாற்றுதல், ஊழல் போன்றவை ஏற்படுகின்றன.இந்த குறைபாடுகளைப் போக்க, "ஆதார்' தேசிய அடையாள அட்டை மூலம், பயனாளிகளின் வங்கி கணக்குக்கு, பணப் பலன்கள் நேரடியாக சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த, நேரடி மானிய திட்டம், அடுத்தாண்டு ஜனவரி, 1ம் தேதி முதல், 43 மாவட்டங்களில் அமல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத், இமாச்சல பிரதேசத்தில் நடக்கும் தேர்தலை காரணம் காட்டி, இந்த மாநிலங் களில், இத்திட்டத்தை அமல்படுத்த, தேர்தல் ஆணையம் தடை விதித்தது.இதன் காரணமாக, 51 மாவட்டங்களில் அமலாவது, 43 மாவட்டங்களானது குறிப்பிடத்தக்கது.எதிர்க்கட்சிகள், தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருவதால், எப்படியாவது இத்திட்டத்தை அமல்படுத்தி, இதனால், கிடைக்கும் நன்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதில், அரசு ஆர்வம் காட்டுகிறது.மத்திய அரசின் உதவியுடன் நடக்கும் திட்டங்களில், நேரடியாக பயன் அடைய கூடியதிட்டங்கள் என, மொத்தம், 34 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திட்டம் அமல்படுத்தவுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களை அழைத்து, ஒரு நாள் கூட்டம் நடத்த வேண்டும் என, திட்ட கமிஷன் கூறியிருந்தது.
இதையடுத்து, அடுத்த வாரம், கலெக்டர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு வருவது பற்றி, கலெக்டர்கள் உறுதிபட தெரிவிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல், ஆலோசனை கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, திட்ட கமிஷன் செய்து வருகிறது.இதற்கிடையில், பிரதமர் அலுவலகம், அனைத்து அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், கூறியிருப்பதாவது:
*நேரடி மானிய திட்டத்தை, அமல்படுத்துவதற்கு முன், அது தொடர்பான ஆயத்த பணிகளை போர்கால அடிப்படையில் துவக்க வேண்டும்.
*இத்திட்டத்தை அமல்படுத்தவுள்ள மாவட்டங்களில், ஆதார் அட்டைவைத்துள்ளவர்கள் பதிவு செய்து கொள்வதற்கான முகாம்களை நடத்த வேண்டும்.
*இத்திட்டத்தால், பயன் அடைய இருக்கும் அனைத்து பயனாளிகளும், பதிவு செய்து கொள்வதற்கான ஆரம்ப கட்ட பணியை அனைத்து அமைச்சகங்களும் முடுக்கிவிட வேண்டும்.
*பயனாளிகள் ஆதார் அட்டையுடன், வங்கி கணக்கு போன்ற விபரங்களை மின்னணுவில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
*மேற்கண்ட அனைத்து விஷயங்கள் அனைத்தையும், விழிப்புணர்வு பிரசாரத்தையும் போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதற்கு, சிறப்பு முகாம் நடத்துவதே சிறந்ததாக இருக்கும்.
இவ்வாறு, பிரதமர் அலுவலகம் அனுப்பிய செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20ம் தேதி :
குஜராத், இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் முடிவு, 20ம் தேதி வெளியாகிறது. இதன்பின் , இந்த மாநிலங்களை சேர்ந்த, எட்டு மாவட்டங்களில் பணிகளை துவக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.திட்டம் அமலாகும், 43 மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, தலைமை செயலர்கள், நிதிச் செயலர்களுடன், "வீடியோ கான்பரன்ஸ்' முறையில் ஆலோசனை நடத்த, திட்ட கமிஷன் முடிவு செய்து உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தேர்தல் நடை பெரும் குஜராத், மற்றும் ஹிமாச்சல் மாநிலங்களில் மட்டும் எட்டு மாவட்டன்கலாம் ஏனைய 30 மாநிலங்களில் 43 மாவட்டன்கலாம். உள்நோக்கம் இல்லாத காங்கிரஸ் அரசு. இதனால் ஓட்டை எதிர்பார்க்கவில்லை என்றும் வேறு கூறிக் கொள்ளும். இராஜஸ்தானில் மண் எண்ணைக்கு இந்த திட்டம் கடந்த ஆண்டு நடைமுறைப் படுத்தப் பட்டதாம். ஆனால் மக்களுக்கு அதன் பலன் நீண்ட நாட்களாகக் கிடைக்கவில்லை என்று ஒரு ரிப்போர்ட் வந்து உள்ளது.
மேதகு பிரதமர் cum பொருளாதார வல்லுனரே கொஞ்சம் பெர்ய மனசு பண்ணி திருவாய் மலர்ந்து கடந்த ஐந்து வருடங்களை தங்கள் பிரஜைகளின் PerCapita வருமானம் கடன் சுமை எவுளவு எனும் புள்ளி விவரத்தை முதல்ல பிரசுரியுங்கள். உங்க ஆட்சில மக்களின் வாழ்க்கை தரம் எந்த அளவுக்கு கோலோச்சி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். நீங்க இப்போ பண்ண போற காரியம் இருக்கே ஊழலை தேசியமயமாக்கி சட்டபுர்வமும் பண்ணுறீங்க. எப்படியாவது ஓட்டு வாங்கி அரசியல் பண்ணும் முடிவில இருக்கீங்க.
டில்லியில் துவங்கப்பட்ட ஆதர் அட்டை வழங்கும் பணியிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள்...இன்னும் பல ஆயிரம் பேருக்கு டில்லியிலேயே ஆதார் அட்டை கிடைக்கவில்லை..வாக்களர் அடையாள அட்டையை போலே இதிலும் ஆயிரகனக்கனவர்களுக்கு ஆண்களை ,பெண்களாகவும் கட்டி தவறான அட்டை கொடுக்க பட்டுள்ளது..என்னிடம் ஆதார் அட்டை வுள்ளது..அனால் வங்கி கணக்கு விவரங்கள் அதில் ஏற்றப்படவில்லை அது குறித்து யாரும் கேட்கவும் இல்லை....இந்த நிலையில் பல கிராமங்களில் வசிப்பிட ஆதாரமே இல்லாமல் வாழும் பல கோடி ஏழை குடும்பங்களுக்கு எப்படி இந்த ஆதார் மூலம் நிவாரணம் சென்று அடையும் ? மாதம் அறுநூறு ரூபாயை ஒரு குடும்பத்துக்கு இவர்கள் வழங்குவதை ,தேர்தலுக்கு தேர்தல் நாலு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு 20000 ருபாய் கொடுத்து நம்ம திருமங்கலம் பார்முலாவை செயல்படுத்தினால் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு கிடைக்கும் என்று ,அதை செயல்படுத்தி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் நம்ம சிவகங்கைகரர் மண் மோகன் சிங்கக்கு எடுத்து சொல்லலாமே..... மாதம் ருபாய் அறுநூறு கொடுத்து விட்டால் வறுமை ஒழிந்து விடுமா? அப்படி பார்த்தல் தமிழ் நாட்டில் மாதம் இரபது கிலோ அரிசி மற்றும் இன்ன பிற பொருட்கள் இலவசமாக ஏழை குடும்பங்களுக்கு வழங்கபடுகின்றன...தமிழ் நாட்டில் இதன்னால் வறுமை ஒழிந்து விட்டதா ? கடந்த ஒன்பது வருடங்களாக பொருளாதார மேதை மண் மோகன் பிரதமராக வுள்ளார்.. இந்த மானியம் தவிர வேறு எந்த நடவடிக்கையும் வறுமையை ஒழிக்க இவர் கண்ணில் பட வில்லையா? இவை எல்லாம் 2014 தேர்தலை மட்டுமே நடத்தப்படும் திட்டம்..மேலும் அய்ந்தாண்டு அதிகாரம் பெற்று ரோமாபுரி ராணிக்கும் அவரது பட்டஹு இளவரசருக்கும் மகுடம் சூட்டும் முயற்ச்சி இது.. கண்டிப்பாக மண்ணை கவ்வ போவது மண் மோகன் மட்டுமில்ல ...காங்கிரஸ் என்ற மாபெரும் கயவ கூடமும்தான்.
ஆதார் அட்டை இதுவரை எத்தனை பேருக்கு வழங்கபட்டுள்ளது. எந்த அடிப்படையில் நேரடி மான்யம் கொடுக்கப் போகிறார்கள். வெறும் தேர்தலை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு ஒரு பக்கம் பணத்தை விரயமாக்குவதும், அதற்காக பெரு முதலாளிகளுக்கு இயற்கை வளங்களையும், அந்நிய நாட்டினருக்கு நாட்டின் தொழில்துறையை விட்டு கொடுப்பதுமாக எதிர்கால இந்தியாவை சிதைக்கும் போக்கு எப்போது மாறுமோ கடவுளே........
முன்பு உள்ளாட்சி பதவிக்கு போட்டிபோட ஆட்கள் கிடைக்காது ... இப்போ உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க பல கோடி ரூபாய் செலவிடுகின்றனர்.... இது எல்லாமே மத்திய அரசின் , 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், ரேசன் பொருட்கள் இவைகளால் வரும் கொள்ளை பணம்தான்... மக்களுக்கு போகாமல் நடுவில் இவர்கள் அடிக்கும் கொள்ளை அதிகம்... இப்படி நேரடியாக் பயனாளிகளின் பேங்க் அக்கவுண்ட் கு போவதால் இந்த இடைத்தரகர்கள் ஒழிவார்கள்...மக்கள் பணம் கொள்ளை போகாமல் இருக்கும்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.