மாஸ்கோ :ரஷ்யாவில் குளிரில் விறைத்துப் போன இரண்டு சர்க்கஸ் யானைகள், "வோட்கா' உதவியால் உயிர் பிழைத்துள்ளன.
ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் உள்ளது, நொவொசிபிர்ஸ்க் நகரம். சர்க்கஸ் அமைப்பதற்காக இப்பகுதிக்கு இரண்டு ஆசிய யானைகள், லாரியில் அழைத்து வரப்பட்டன. துருவப் பகுதியை ஒட்டி அமைந்த பகுதி என்பதால், பகல் நேர வெப்பநிலை பூஜ்யம் டிகிரிக்கு இருந்தது. இதனால், 45 மற்றும் 48 வயதுடைய யானைகள், குளிரை சமாளிக்க முடியாமல் நடுங்கிக் கொண்டு வந்தன.திடீரென லாரி இன்ஜினில் தீப்பிடித்ததால், மற்றொரு லாரியில், இந்த யானைகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், இந்த யானைகளை, பயிற்சியாளர், தெருவில் நிற்க வைத்திருந்தார். கடுங்குளிரால், யானைகளின் காதுகள் விறைத்துக் கொண்டன. காதுகளை ஆட்ட முடியாமல் யானைகள், உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டு விட்டது.
இதை உணர்ந்த பயிற்சியாளர், அருகிலிருந்த ஒரு கல்லூரிக்குள் யானைகளை அழைத்துச் சென்று, 10 லிட்டர் வோட்காவை, வென்னீரில் கலந்து கொடுத்தார். அதன் பிறகு, யானைகள் சமாளித்துக் கொண்டு வழக்கம் போல், காதுகளை அசைக்கத் துவங்கின.இது குறித்து ரஷ்ய அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், "வோட்கா தான், இந்த யானைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.