mariamman with parrot | மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள்

Added : டிச 15, 2012 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள்

சூலூர்:சூலூர் அருகே மாரியம்மன் சிலை மீது, அமர்ந்து இருக்கும் கிளியை, பொதுமக்கள் ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்து, வழிபட்டு செல்கின்றனர்.கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட, சிந்தாமணிப்புதூரில், சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை மாதத்தில், பொங்கல் திருவிழா சிறப்பாக நடக்கும். இங்கு நடக்கும் கம்பம் நடும் விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்பர்.சில நாட்களுக்கு முன், கோவில் கருவறைக்குள் புகுந்த பச்சைக்கிளி ஒன்று, மாரியம்மனின் வலதுகையில் அமர்ந்து கொண்டது. இதை, ஏராளமான பக்தர்கள்
பார்த்து, பரவசமடைகின்றனர்.இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த, 25 நாட்களுக்கு முன், கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த போது, இடது கண்ணில் காயத்துடன் பறந்து வந்த கிளி, கர்ப்பகிரகத்துக்குள் சென்று, அம்மன் சிலை மீது அமர்ந்து கொண்டது. அன்று முதல், கிளியை வெளியே கொண்டு வந்து விட்டாலும், மீண்டும், அம்மனின் சேலையை பிடித்து, மேலே சென்று அமர்ந்து கொள்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பூசாரி ரவி கூறியதாவது:அபிஷேகம் செய்யும் போது மட்டும், கிளி, கீழே இறங்கி விடுகிறது. மற்ற நேரங்களில், அம்மனின் மீதே அமர்ந்திருக்கிறது. இரவு கோவிலை பூட்டும் போதும்
கூட, கருவறையை விட்டு வெளியில் வருவதில்லை. பழம் மற்றும் பொங்கலை, விரும்பிச் சாப்பிடுகிறது. அர்ச்சனை செய்யும் போதோ, மணி அடிக்கும்போதோ பயப்படுவதில்லை. சுற்று வட்டார மக்கள் பலரும், அதியசத்துடன் கிளியை பார்த்து, வணங்கிச் செல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajalakshmi - Kuwait City,குவைத்
16-டிச-201223:05:17 IST Report Abuse
Rajalakshmi தாயை இழந்து தவிக்கும் பன்றிக்குட்டிகள் மேல் மாளா இரக்கம் மேலிட்டு சிவபெருமானே பன்றியாக உருவெடுத்து அந்த பன்றிக்குட்டிகளுக்கு பாலூட்டினார். வாயில்லா பிராணிகள் என்றாலும் அவைகளை ஸ்ரீ ரமண பகவன் ஒருக்காலும் அக்ரிணை போல அழைத்ததில்லை. They are much more sensitive than human beings to both pain & pleasure. அணில்களெல்லாம் முந்திரிப்பருப்பை ரமண பகவானிடம் விரும்பி பெற்று உண்ணும். சிட்டுக்குருவிகள் அவருடன் உரையாடும். குரங்குகள் தங்கள் சகல விஷயங்களையும் இளம் குரங்குக்குட்டியின் பிறப்பு முதல் அவருடன் சகஜமாக பகிர்ந்து கொள்ளும். நாய்கள் பிரசவித்தால் பகவன் ரமணர் வடை பாயசம் செய்து புண்யாகவசனம் கொண்டாடுவார்.சிறிது நாட்கள் முன்பு தென்னிந்தியாவில் ஒரு நாகப்பாம்பு சிவலிங்கத்திற்கு வில்வ தளங்கள் தானே கொய்து அர்ச்சனை செய்ததே வீடியோவில் பலர் படம் பிடித்து பரவசப்பட்டனரே ??
Rate this:
Share this comment
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
16-டிச-201222:50:59 IST Report Abuse
Rajalakshmi ஸ்ரீ ரமண பகவான் சிறு வயதில் யாராவது மனம் நோக அவரை கடிந்து கொண்டால் மீனாக்ஷி அம்மனிடம் போய் மெளனமாக முறையிட்டு அவளே கதி என்று இருப்பார். " நிந்தை புரிகின்ற நெஞ்சில் அவள் என்றும் சிலையாவாள். நித்தம் பணி செய்யும் அன்பர் நெஞ்சினில் கலையாவாள்"
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
16-டிச-201220:42:54 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM மக்கள் நல் வழி படுத்த ....இறைவனுடைய இந்த திருவிளையாடல் ....
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
16-டிச-201216:19:10 IST Report Abuse
ganapathy காடை கவுதாரி மான் எல்லாம் அடித்து சாப்பிடுவதை விட கிளியையும் ஒருவன் பதியுடன் வழிபட்டால் இறைஅருள் பெறுவான். இதை ராமகிருஷ்ண பரமஹம்சரே எந்த உருவத்த வழி பட என்ற கேள்விக்கு உனக்கு நாயை பிடிக்கும் என்றால் அதை வழிபடு என்றார். பகவத் கீதையில் கண்ணன், பிராமனநிடத்திலும், சதிரியநிடத்திலும், வைசிய சூத்திரநிடத்திலும், பசுவிடத்திலும், நாயிடத்திலும், அந்த நாயை புசிக்கும் கீலானவநிடத்திலும் நான் சம பார்வை கொண்டவன் என்கிறார். இறைவனுக்கு எந்த வேறு பாடும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
16-டிச-201216:06:15 IST Report Abuse
Rajalakshmi @Lion Drsekar , வெளி உலகம் மிகவும் இரக்கமற்ற அபாயம் நிறைந்தது என்பதால்தானே இந்த கிளிக்கு கண்ணில் அடிபட்டிருக்கிறது ? பகுத்தறிவாளர் போல் கால்நடை மருத்துவர் அந்த கண்ணை நிவாரணம் செய்தாலும் மீண்டும் மாரியம்மன் கையில் அமர விடுவாரா என்ன ?? கிளிக்கும் அம்பாளுக்கும் இணைபிரியா தொடர்புண்டு. அருணகிரிநாதர் பற்றி தெரியுமா ? What was that " இறைவனைப் பார்ப்பதற்குப் பதிலாக ஒரு கிளையைப் பார்க்கக் கூட்டம் வருகிறது அதுவும் இந்த கிளியையும் வழிபடுகிறார்கள் என்றால் .... அட கவடவுளே ." .கிளி , காக்கை , குருவி நீள் கடலும் , மலையும் ....உண்ணும் சோறு , தின்னும் வெற்றிலை , பருகும் நீர் சகலமும் எங்கள் அம்பாள் ஸ்வருபமாகும்.
Rate this:
Share this comment
Cancel
dharma - nagpur,இந்தியா
16-டிச-201212:53:53 IST Report Abuse
dharma இது மீனாட்சியோ ஆண்டாளோ என்று தெரியவில்லை எல்லாம் எம்பெருமான் செயல்.
Rate this:
Share this comment
Cancel
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
16-டிச-201210:40:01 IST Report Abuse
மோனிஷா எல்லாம் அவள் செயல். அம்மா என்றல் அன்பு. மா(பெரிய)ரி அம்மன் என்றால் எல்லையற்ற அன்பு தானே.
Rate this:
Share this comment
Cancel
k.sampath - Trichy,இந்தியா
16-டிச-201207:59:39 IST Report Abuse
k.sampath அதிசயம் ஆனால் உண்மை.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-டிச-201207:03:01 IST Report Abuse
Lion Drsekar கிளிக்கு கண்ணில் அடி பட்டுள்ளது என்றால் கால்நடை மருத்துவரை அழைத்து அதற்கு மருத்துவ வசதி செய்து சரியாக்கவேண்டும், அதை விட்டு விட்டு இந்த கிளையை வைத்து அந்த கோவில் பணம் பார்க்கிறது, அந்த கிளியின் இறகுகளை சோதித்தால் தெரியும் இது பறக்கும் கிளியா அல்லது நடப்பதற்கு மட்டும் பயன் படுதுப்படுகிறதா என்று? அசிங்கமாக இருக்கிறது, இறைவனைப் பார்ப்பதற்குப் பதிலாக ஒரு கிளையைப் பார்க்கக் கூட்டம் வருகிறது அதுவும் இந்த கிளியையும் வழிபடுகிறார்கள் என்றால் .... அட கவடவுளே ... வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Sivakumar Nagarajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-டிச-201209:42:53 IST Report Abuse
Sivakumar Nagarajanஇப்பிடியெல்லாம் நினைக்கிற உங்களின் எண்ணத்தின் கண்களில் தான் கோளாறு இருக்கிறது.. எல்லாம் அவள் செய்யும் லீலைகள்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை